Sirajudheen Ahsani
எழுத்தாளர்

அல்ஹம்துலில்லாஹ்.

கழிந்த 2018_ஆண்டு முதல் தமிழகம் தழுவிய‌ அளவிலான இஸ்லாமிய மார்க்க போட்டிகளுக்கு #மைமூன் #பப்ளிஷிங்_ஹவுஸின் கீழில் துவக்கம் குறித்தோம்.

ஹஜ், ரமலான், ரபீஉல் அவ்வல் போன்ற புனித மாதங்களில் இஸ்லாமிய மார்க்க அறிவுகளை மக்களுக்கு நினைவூட்டும் விதமாகவும், அவர்களின் இஸ்லாமிய அறிவை பெருக்கும் விதமாகவும், இளம் தலைமுறைக்கு இஸ்லாமிய சன்மார்க்க ஞானங்களை அறிய உதவும் அடிப்படையிலும் இந்த மகத்தான போட்டிகளை நாம் நடத்தி வருகிறோம்.

முதன் முதலாக ஹஜ் பெருநாளை முன்னிட்டு
ஹஜ் வினா விடை போட்டியை நடத்தினோம்.
ஹஜ் சம்பந்தப்பட்ட 150 கேள்விகளை தொகுத்து
ஆயிரம் பிரதிகள் வெளியிட்டு அனைவருக்கும் விநியோகம் செய்தோம்.

தமிழகம் தழுவிய அளவில் நடத்தப்பட்ட இப்போட்டியில் 170_மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நமது இந்த போட்டியின் மூலம் ஏராளமான அரபிக் கல்லூரி மாணவர்கள்,
மக்தப் மதரசா பிள்ளைகள்,
நிஸ்வான் மதரசா மாணவிகள்,
ஆலிம்கள், ஆலிமாக்கள், பொதுமக்கள் என பலரும் பயனடைந்துள்ளனர்.

குமரி மாவட்ட சேர்ந்தவர்கள்தான் ஒன்று, இரண்டு,
மூன்று பரிசுகளை வென்றனர்.

6/9/18_ ஆண்டு நமது இல்லத்தில் வைத்து பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த மகத்தான நிகழ்ச்சியில் ஸெய்யித் அப்துர்ரஹ்மான் அஹ்ஸனி உஸ்தாத் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார்கள்.

இந்த மகத்தான போட்டிக்காக உதவிய ஏராளம் நபர்கள் உண்டு.

பரிசுகளை அன்பளிப்பு தந்தவர்கள்,
இதற்காக ஸ்பான்சர்களை பிடித்து தந்தவர்கள்,
நம் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு நல்கிய வர்கள்.

குறிப்பாக சொல்வதாக இருந்தால் #அப்துல்_வஹாப்_மஹ்ழரி,
அஹ்மது #சுல்தான்_அன்வரி, அல்ஹாபிழ் #முஹம்மது_அன்வரி போன்றோர் பலவிதத்திலும் நமக்கு உறுதுணையாக, பக்கபலமாக இருந்தனர்..*

இந்த மகத்தான போட்டிக்கு உதவி
செய்த, ஒத்துழைத்த எல்லா அன்பு நெஞ்சங்களுக்கும், பரிசளிப்பு விழாவுக்கு வருகை புரிந்து, தலைமையேற்று மிக சிறப்பான முறையில் நடத்திய ஆலிம்களுக்கும் வல்லோன் அல்லாஹ் இரு உலகிலும் அனைத்து விதமான நலவுகளையும், வளங்களையும்,
செழிப்புகளையும் வழங்கி அருள்புரிவானாக.

இன்ஷா அல்லாஹ் மார்க்க ஞானங்களை மக்களுக்கு எத்தி வைக்கும் பொருட்டு ஏராளமான போட்டிகளை இனிவரும் காலங்களிலும் நடத்துவதற்கு நீங்கள் துஆச்செய்யும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

என்றும் மகிழ்வுடன்.

M.சிராஜுத்தீன்அஹ்ஸனி
இயக்குனர்:மைமூன்
பப்ளிஷிங் ஹவுஸ்.
திருவிதாஙாகோடு
குமரி மாவட்டம்....
7598769505