எந்நேரமும் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு அதிசய மனிதர்
இஸ்லாமிய வரலாறு

எந்நேரமும் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு அதிசய மனிதர்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

நூற்றுக்கணக்கான அரபி
நூல்களை எழுதிய கலமுல்
இஸ்லாம் கோடம்புழா
பாவா முஸ்லியார்...

மார்க்க அறிஞர்கள், பள்ளிவாசல்கள் மதரசாக்கள், இஸ்லாமிய ஸ்தாபனங்கள், அதிகமாக உள்ள மாநிலம் கேரளம்...

இறைவனின் மகத்தான கிருபையினால் ஆயிரக்கணக்கான மார்க்க அறிஞர்கள் இப்பூமியில் வாழ்கின்றனர்...

இந்தியாவில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு எண்ணிலடங்கா சேவைகளை இங்கு வாழும் உலமாக்கள் செய்து வருகின்றனர்..

அரபி மொழியில் புலமையும், ஆழமான அறிவுமுள்ள எண்ணற்ற உலமாக்கள் இப்பூமியில் இப்போதும் உள்ளனர்..

இவர்களை அரபு உலமாக்களும், சர்வதேச அளவில் மார்க்க நிபுணர்களும் கொண்டாடுகிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது...

அப்படிப்பட்ட உலமாக்களில் ஒருவரான கலமுல் இஸ்லாம் கோடம்புழ பாவா முஸ்லியாரைப் பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.....

கோடம்புழா பாவா முஸ்லியார் கேரளாவின் முன்னணி இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவர் மற்றும் பிரபல எழுத்தாளர்....

கோடம்புழா தாருல் மஆரிஃப் இஸ்லாமிய மையத்தின் நிறுவனரும் ஆவார்.

அவரது புத்தகங்கள் சுன்னத் வல் ஜமாஅத் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தில் கற்பிக்கப்படுகின்றன.

இவரது புத்தகங்கள் ஜாமியத்துல் ஹிந்தின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த பாடத்திட்டம் இந்தியா தவிர பல்வேறு நாடுகளிலும் கற்பிக்கிப்படுகிறது...

கோடம்புழா பாவா உஸ்தாத் அவர்கள் 1946 ஆம் ஆண்டு கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கோடம்புழாவில் முஹம்மது முஸ்லியார் மற்றும் ஆயிஷா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

ரஹ்மானியா மதரஸா (பேப்பூர்),
மாவூர் மற்றும் வாழக்காடு ஆகிய இடங்களில் மார்க்க கல்வியை பயின்றார்கள்..

மார்க்க கல்வியில் தந்தை முஹம்மது முஸ்லியார், கன்னியத் அஹ்மத் முஸ்லியார்,
சி. எச். அப்துர்ரஹ்மான் முஸ்லியார், குஞ்சப்துல்லாஹ் முஸ்லியார் மேமுண்டா, பீரான் கோயா உஸ்தாத் போன்றோர் முக்கிய குருக்களாகும்....

எஸ்.எஸ்.எல்.சியை தனியார் மூலம் எழுதினார்கள்..

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், எகிப்து, உஸ்பெகிஸ்தான், ஈராக் உள்ளிட்ட பல நாடுகளுக்குச் சென்று பல்வேறு மாநாடுகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சொற்பொழிவுகள் மற்றும்
கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்கள்.

சமஸ்தா கேரள ஜம்இய்யதுல் உலமா கேந்திரா முஷாவரா உறுப்பினர்,
அகில இந்திய சுன்னத் வல் ஜமாஅத் கல்வி வாரிய உறுப்பினர், கோடம்புழா தாருல் மஆரிஃப் இஸ்லாமிய நிலையத்தின் பொதுச் செயலாளர் இப்படி ஏராளமான பொறுப்புகளை வகித்து வருகிறார்கள்..

பல சர்வதேச நிகழ்வுகளிலும் பங்கேற்றுள்ளார்கள்.
2014 அபுதாபி சர்வதேச புத்தகக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக பாவா முஸ்லியார் கலந்து கொண்டார்கள்.

பல முக்கிய படைப்புகள்
அரபு மொழிக்கு வழங்கிய பாவா முஸ்லியார், முக்கியமாக வரலாறு மற்றும் மார்க்க சட்டங்கள் ஆகிய துறைகளில் தான் கூடுதல்
படைப்புகளையும் எழுதியுள்ளார்கள்.

ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையுள்ள சுன்னத் வல் ஜமாஅத் கல்வி வாரியத்தின் மதரஸா பாடப்புத்தகங்களில் பாவா முஸ்லியாரின் பங்கு குறிப்பிடத்தக்கது.

அதுபோலவே ஏராளமான அரபி மலையாள மொழிகளில்
கட்டுரைகளும் எழுதியுள்ளார்கள்....
தகவல்:M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி