ஒரு ஏழை காஷ்மீர் மாணவனும் உஸ்தாதும்
ஒரு_ஏழை_காஷ்மீர்_மாணவனின் கனவுகளை_நனவாக்கிய_உஸ்தாத்
மனதுள் மலர்ந்த அழகிய கனவுகளுடனும், எப்போதும் சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் இருக்கும் காஷ்மீரைச் சேர்ந்த அன்பு நண்பர் மஹ்மூத்_அஹ்மத் அழைத்திருந்தார்
J.N.U. வில் POLITICAL Science._ ல் சீட் கிடைத்த செய்தியைச் சொல்ல அறிவிக்க அழைத்திருந்தார்.இதுபோன்ற மகிழ்ச்சியான அனுபவம் சமீபத்தில் என் வாழ்நாளில் ஏற்ப்பட்டதில்லை.*
ஒரு வார்த்தை கூட ஒழுங்காக எழுத தெரியாமல் காஷ்மீரின் எல்லை கிராமத்தில் ஒரு சிறிய பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த மஹ்மூத் அஹ்மதின் வாழ்க்கையை மாற்றி அமைத்தது மர்கஸ்..அது பெரிய கதை..
*கேரள மாநிலம் பள்ளி கலை இலக்கிய விழாக்களில் தொடர்ந்து ஐந்து வருடங்களாக பல்வேறு போட்டிகளில் மஹ்மூது அஹ்மது முதலிடம் பெற்று வந்தார்.*
*அவர் மர்கஸில் படிக்க ஆரம்பித்த போது தான் நான் அவரைச் சந்தித்தேன்.அவ்வப்போது நூலகத்திற்கு வந்து புதிய புத்தகங்களையும், பத்திரிகைகளையும் படிப்பார். மர்கஸ் காஷ்மீர் இல்லத்தில் உள்ள விரிவான நூலகத்தில் பெரும்பாலான அவர் படித்து முடித்து விட்டார்.எப்போதும் மகிழ்ச்சியாக, பிரகாசமான முகத்துடன் காணப்படுவார், கற்றலில் மிகுந்த ஆர்வம் உண்டு.*
*காஷ்மீரிலுள்ள பூஞ்ச் நகரைச் சேர்ந்தவர்.எல்லைக் கிராமம், சிறுவயதிலிருந்தே துப்பாக்கி சூட்டின் ஓசையை கேட்டு வளர்ந்தவர்,மிகவும் ஏழ்மையான குடும்பம், மிகவும் பாதுகாப்பற்ற பரிதாபகரமான பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார், ஐந்தாம் வகுப்பு வரை அந்த பள்ளியில் தான் படித்தார், அப்போது அவருக்கு எதிர்காலம் குறித்த கனமான கவலை அலட்டிக் கொண்டிருந்தது, எவ்வளவு தூரம் கல்வி கற்க முடியும் என்ற எண்ணம் பெரும்பாலும் மனஉளைச்சலை ஏற்படுத்தியது.நாட்டின் சூழ்நிலை மற்றும் படிப்புக்கு நல்ல வசதிகள் இல்லாதது அவரது மனதில் பல கேள்விகளை எழுப்பியது.*
*ஐந்தாம் வகுப்பு தேர்வு முடிந்து திரும்பும் போது பூஞ்ச் நகரத்தில் ஒரு சுவரொட்டியை பார்த்தார் மஹ்மூத் அஹ்மத். அவருடன் இருந்த ஒரு மூத்த வகுப்புத் தோழர் அதை படித்து கேட்க செய்தார்.*
*உயர்தர கல்வி, உணவு மற்றும் தங்குமிடம் அனைத்தும் இலவசம்.உங்களை அன்புடன் வரவேற்கிறது கேரளா மர்கஸ்.உங்கள் குழந்தைகளை உயர் கல்வியாளர்களாக ஆக்க வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளவும்..*
*போன்ற வாசகங்கள் அதில் இடம்பிடித்து இருந்தன.பெற்றோர்களை நோக்கமாக கொண்டு அது ஒட்டபட்டிருந்தாலும் அந்த சுவரொட்டி மஹ்மூதின் கனவுகளை உயிர்ப்பித்தன.பின்னர் அவர் அதை ஒரு சிறிய புத்தகத்தில் குறித்து வைத்தார்...*
*வீட்டிற்கு சென்றார். தந்தையிடம் தான் பார்த்தக் காரியங்களை சொன்னார். தந்தைக்கு இது சம்பந்தமான அறிவுகள் இல்லாவிட்டாலும் மகனின் ஆசைகளை மதிக்கக்கூடிய ஒரு மனிதராக இருந்தார்.*
*அந்த எண்ணிற்கு அழைத்தார்.*
*காஷ்மீரில் மர்கஸ் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் ஒரு நபரின் போன் நம்பர் அது.*
*ஒரு மாதத்தில் குழந்தைகளை கேரளாவுக்கு அழைத்துச் செல்வார்களென்றும்,* அவர்களுடன் சேர்த்து உங்கள் குழந்தையையும் கொண்டு செல்லாமென
வாக்களித்தார்..*
*மஹ்மூத் 2011_ஆண்டு மே மாதம் சுமார் நூறு நண்பர்களுடன் கேரளா நோக்கி புறப்பட்டார்.*
*கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இறங்கிய வேளையில் எங்களை வரவேற்க புன்முறுவலுடன் உஸ்தாத் நின்று கொண்டிருந்தார்கள்.*
*முதன் முதலில் உஸ்தாதை சந்தித்த இனிய நாள் அது.*
*உஸ்தாத் அவர்கள் அனைவரையும் அமர்த்தி உருது மொழியில் (குழந்தைகளின் மொழியில்) ஒரு நீண்ட அறிவுறுத்தலைக் கொடுத்தார்கள்.*
*"நீங்கள் நன்றாக படிக்க வேண்டும்.*
*உங்களுக்கு தேவையான அனைத்தையும் மர்கஸ் உங்களுக்கு வழங்கும். வாப்பாவும் உம்மாவும் பிரிந்துவிட்டார்கள் என்று வருத்தப்பட வேண்டாம். உங்களுக்கு இங்கு நிறைய அன்பான பெற்றோர்கள் இருப்பார்கள். நீங்கள் மற்ற குழந்தைகளைப் போல இல்லை. நீங்கள் பெரிய மனிதர்களாக உருவாக வேண்டும். நல்ல எதிர்காலத்தை உருவாக்கி கொள்ள வேண்டும்.*
*உங்களுக்கு இங்கே மர்கஸ் ஹோமில் பயிற்றுவிக்கப்படும். உஸ்தாதின் இந்த வார்த்தைகள் மஹ்மூத்தின் சிறிய இதயத்தைத் துளைத்தன.*
*பிறகுள்ள நாட்கள் அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டது.*
*அவர் இங்கு (மர்கஸில்) வந்தபோது, அவருக்கு ஏபிசிடி கூட தெரியாது.*
*எல்லாம் மர்கஸிலிருந்து கற்றுக்கொண்டார்.*
*காஷ்மீர் குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகளை விட மர்க்கஸில் சிறந்த உணவு வழங்கப்பட்டது.*
*நாங்கள் எதற்கும் வருத்தப்பட வேண்டாம் என்று உஸ்தாத் வலியுறுத்தினார்கள்.*
*எப்போதாவது உஸ்தாத் காஷ்மீரி ஹோமிற்கு வருவார்கள்.*
*அனைவரையும் ஒன்றாக அமர வைத்து அறிவுரை வழங்குவார்கள்.*
*எங்களில் சிலரிடம் பாடச் சொல்வார்கள்.நாங்கள் பாடுவோம்.*
*உரை நிகழ்த்த சொல்வார்கள். உரை நிகழ்த்துவோம்.*
*அவர்களுக்கு அழகான பரிசுப் பொருட்கள் கிடைக்கும். உஸ்தாத் எங்கள் ஒவ்வொருவரையும் அவர்களின் சொந்த குழந்தைகளைப் போலவே நடத்தினார்கள்.*
*மஹ்மூத் ஒருமுறை கூறினார், "உஸ்தாத் என்னை இங்கு அழைத்து வராமல் இருந்திருந்தால், நான் அந்த பண்ணையில் இன்னும் சுமை சுமக்கக்கூடிய ஒருவராக இருந்திருப்பேன். பிளஸ் டூவை முடித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ள மஹ்மூத் ஜே.என்.யுவின் படிகளில் ஏறுகிறார் ஐ.ஏ.எஸ் கனவுடன்.*
*(✍️ எம் #லுக்மான்)*
*தமிழில்.M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி.*