ஏபி உஸ்தாதின் கேரள சுற்றுப்பயணம் கலீல் தங்கள் அவர்களின் கட்டுரை

ஏபி உஸ்தாதின் கேரள சுற்றுப்பயணம் கலீல் தங்கள் அவர்களின் கட்டுரை

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#உஸ்தாதின்_கேரள_சுற்றுப்பயணம்...

✍️.ஸெய்யித் இப்ராஹிம் கலீல் புகாரி தங்கள் எழுதுகிறார்கள்..

தீமைகள் நிறைந்த ஒரு காலகட்டத்தின் மீதே மனிதர்களாகிய நாம் சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறோம்.

பொதுவாக நாம் எதிர்கொள்ளும்
சவால்கள் ஏராளம்.
சிலர் மக்களை வெவ்வேறு குழுக்களாகப் பிரித்து வெறுப்பையும், பகைமையையும் விதைக்க முயற்சிக்கிறார்கள்.
சக மனிதர்களுக்குச் செய்யும் நல்ல செயல்கள் கூட மதத்தின் பெயரால் ஊக்கமிழக்கப்படுகின்றன.

அனைத்து மக்களுக்கும் நன்மையையும் நல்லொழுக்கத்தையும் விரும்ப வேண்டும் என்பதே படைப்பாளனின் அறிவுறுத்தல்,
அத்தீனு அந்நஸீஹா என்பதுதான் நபிமொழி

உணவு, அறிவு, உடை, தங்குமிடம், அமைதி.. அனைத்தும் எல்லா மனிதர்களுக்கும் அவசியம்.
அதற்குத் தேவையான சந்தர்ப்பங்களையும், சூழ்நிலைகளையும் நாம் அனைவரும் சேர்ந்து உருவாக்க வேண்டும்

அறிவில்லாத மனிதர்கள் சிலர் மக்கள் மத்தியில் பகைமையை உருவாக்கி,
கூட்டமாக
உருவெடுத்து குழப்பங்களை, பிரச்சனைகளை ஏற்படுத்துகிறார்கள்.

தன்னம்பிக்கை மற்றும் சமூக விழிப்புணர்வு இல்லாதவர்கள் போதைக்கு அடிமையாகிறார்கள்,
மற்றவர்களின் அமைதியை அழிக்கிறார்கள், உறவுகளை முறிக்கிறார்கள்,
தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களை வெறுக்கிறார்கள்,
பல்வேறு வெறுக்கத்தக்க உடைகளை அணிகிறார்கள்.

அநீதிக்கு எதிரான போராட்டம் அணைக்கப்படக்கூடாது.
மனிதர்கள் சுய திருப்தி என்ற ஒரு சிறிய வட்டத்திற்குள் அடைத்து வைக்கப்படக்கூடாது.
அவர்கள் பேராசை பிடித்தவர்களாக மாறக்கூடாது.
கேரளம் இதுவரை பரோபகாரம் என்ற முழக்கத்துடன் பயணித்துள்ளது.
மலையாள மண்ணில் இஸ்லாம் விதைத்த விதை பரோபகாரமாகும்.
துவேஷத்தின் வித்து அல்ல. ..

மனிதாபிமானம் சார்ந்த இதே போன்ற செய்திகளை உரக்கச் சொல்ல வேண்டிய நேரம் வந்து கொண்டிருக்கிறது. கேரளத்திற்கு மனிதநேயத்தின்
பொன்னான தருணங்களை வழங்கிய சுல்தானுல் உலமா ஏபி உஸ்தாத்,
அந்தப் பணியை
மேற்கொண்டுள்ளார்கள்.
கேரள யாத்திரையின் முழக்கம் கருப்பொருள்
மனிதர்களுடன் என்பதாகும்.
இந்த மகத்தான பயணத்தில் நாம் அனைவரும் கைகோர்ப்போம்.

உஸ்தாத் அவர்களின் பயணம் வெற்றியை
அடைந்திட ஆத்மார்த்தமாக துஆச் செய்வோம்..