வஹாபிகளை கவலைக் கொள்ளச் செய்யும் முஹம்மது பின் சல்மானின் பரபரப்பு பேட்டி

வஹாபிகளை கவலைக் கொள்ளச் செய்யும் முஹம்மது பின் சல்மானின் பரபரப்பு பேட்டி

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#வஹாபிகளை_கவலைக்_கொள்ள #செய்யும்_முஹம்மது_பின்_சல்மானின் #பரபரப்பு_பேட்டி....*

*இப்னு அப்துல் வஹாப் அல்ல சவூதி அரேபியா. இங்கு நான்கு மத்ஹபுகள் உள்ளன.. நீண்ட காலமாக ஒரே ஒரு சித்தாந்தம் மட்டுமே பரப்பப்பட்டது: சவுதி பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மானின் பரபரப்பு பேட்டி....*

*சவூதி பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் வஹாபிஸம் சன்னி_ ஷியா பிரிவுகளைக் குறித்து சில கருத்துக்களை கூறியுள்ளார்..*

*#தி_அட்லாண்டிக் எனும் அமெரிக்க பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:*

*முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ஒரு தீர்க்கதரிசியோ, வானவரோ அல்ல..*

*சவூதியின் அரசியல் இராணுவ தலைவர்களுக்கும் மத்தியில் முதலாம் சவூதி அரேபிய அரசில் வாழ்ந்த பல அறிஞர்களை போலவே அவரும் ஒருவர்..*

*முஹம்மது பின் சல்மானின் இக்கருத்தை #சவுதி_கஸட் போன்ற உள்ளூர் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன..*

*சவூதியில் சன்னி_ ஷியாக் கொள்கை பிரிவுகள் உள்ளன. முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் அல்ல சவூதி அரேபியா..*

*சன்னி சிந்தனையில் நான்கு பிரிவுகள் உள்ளன. ஷியா சிந்தனையிலும் பல பிரிவுகள் உள்ளன..*

*சவூதியின் மதக்கண்ணோட்டம் ஒரேயொரு சிந்தனையை மட்டும் கொண்டுள்ளது என்று யாரும் பிரச்சாரம் செய்ய முடியாது..*

*எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் அப்படி இருந்திருக்கலாம்.. ஆனால் இப்போது அனைத்தும் சரியான பாதையில் உள்ளன..*

*சவூதியின் ஆன்மா இஸ்லாமே அடிப்படையாகக் கொண்டது என்பதை உறுதி செய்ய கலப்பற்ற இஸ்லாமை ஏற்றுக் கொண்டுள்ளது...*

*நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றும் கலீஃபாக்கள் காலத்தில் சமுதாயங்கள் அமைதியை விரும்பி திறந்த மனதுடன் இருந்தன..*

*யூதர்களும் கிறிஸ்தவர்களும் அவர்களுடன் வாழ்ந்தனர்..*

*அனைத்து மதங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கு மரியாதையை வழங்க இஸ்லாம் போதிக்கிறது...*

*ஆனால் தீவிரவாதிகள் தங்கள் சொந்த நலன்களுக்கு ஏற்றவாறு இஸ்லாமிய விழுமியங்களை சிதைத்து வருகின்றனர்..*

*முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் ஒரு போதகர்.. முதலாம் சவுதி அரசில் பணிபுரிந்த அரசியல் மற்றும் ராணுவ வீரர்களில் அவரும் ஒருவர்.. அப்போது அரேபிய தீபகற்பத்தை சார்ந்த மக்கள் படிப்பறிவற்றவர்களாக இருந்தனர்.. அவர்கள் தான் முஹம்மத் பின் அப்துல் வஹாபின் மாணவர்கள்..*

*அவர்களின் பார்வையில் எழுதப்பட்ட வரலாற்றை தீவிரவாதிகள் துஷ்பிரயோகம் செய்கின்றனர் இன்று எல்லாம் சரியான பாதையில் செல்கிறது..*

*உலகில் இவ்வளவு பெரிய பயங்கரவாதத்தை உருவாக்குவதில் முஸ்லிம் பிரதர் ஹுட் என்ற அமைப்புக்கும் பெரும் பங்குண்டு..*

*மக்களை பயங்கரவாதத்துக்கு கூட்டிச் செல்லும் பாலம் போல சில உறுப்பினர்கள் செயல்படுகின்றனர்.*

*உஸாமா பின் லாதின், அய்மன் அல் ஜவாஹிரி ஆகியோர் பிரதர் ஹுட்டின் தயாரிப்புகள்..*

*ஐ.எஸ் தலைவரும் பிரதர் ஹுட்டைச் சார்ந்த நபராக இருந்தார்.*

*கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற பயங்கரவாத செயல்களில் பிரதர் ஹுட் பெரும் பங்கு வகித்துள்ளது...*

*இவ்வாறு முஹம்மது பின் ஸல்மான் தனது பேட்டியின் போது தெரிவித்த கருத்துகள் ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது...*

*https://www.facebook.com/286134771534586/posts/2187306184750759/?sfnsn=wiwspmo*

தமிழில்:
M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி.