ஆதலால் மன்னிப்பீர்

ஆதலால் மன்னிப்பீர்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

ரமளான் சிந்தனைகள்
பிறை.....15
ஆதலால்_மன்னிப்பீர்......

நம்மில் இரு ரகமான மனிதர்கள் இருக்கின்றோம். ஒரு ரகம்...

இனி ஜென்மத்துக்கும் அவனை மன்னிக்க மாட்டேன்.”, “செத்தாலும் சரி, அவள் முகத்தில் முழிக்க மாட்டேன்.”, “அவர்கள் செய்திருக்கிற காரியத்திற்கு நான் செத்தாலும் மன்னிக்க மாட்டேன்.”

சொல்லிடு அவன்ட்ட நான் செத்தால் என் ஜனாஸாவிற்கு அவன் வரக் கூடாது. அவன் செத்தால் நானும் அவன் ஜனாஸாவுக்கு போக மாட்டேன்.

நம்மில் பலரும் கேட்கிற, சொல்லிய, சொல்கிற பலப் பிரயோக வார்த்தைகள் இவை.

சில போது பெற்றெடுத்த தாய் தந்தையரோடு, சில போது தாய் தந்தையின் உடன் பிறப்புகளோடு, சில போது உடன் பிறந்த ரத்த உறவுகளோடு, சில போது மனைவி மக்களோடு, அண்டை அயலரோடு, குடும்ப உறவுகளோடு, நட்போடு நாம் பரிமாறுகிற வார்த்தைகள் இவை.

இன்னொரு ரகம்...நான் கொஞ்சூண்டு மன்னித்துவிடுகிறேன் ; மிச்சத்தை மனதில் ஓரமாய் வைத்துக் கொள்கிறேன்; பின்னர் ஏதாவது சந்தர்ப்பத்தில் சொல்லிக்காட்ட அவை தேவைப்படும்.” என்று சிலர்.

இந்த இரண்டு ரக மனிதர்களிலும் படித்தவர் படிக்காதவர், ஏழை பணக்காரன், ஆலிம் சாமானியர், ஹாஜி தொழுகையாளி, என எவ்வித பாகுபாடும் கிடையாது.

சக மனிதர்களுடனான வாழ்வில் ஏற்படும் மனக் கசப்புகளின் போதும், புரிந்து கொள்ளாமல் நடைபெறும் சம்பவங்களின் போதும், கொடுக்கல் வாங்கலின் போதும், வாக்குறுதிகள் பொய்த்துப் போகும் போதும், நம்பிக்கைகள் சிதைக்கப்படுகிற போதும், கவனக் குறைவாக ஏற்படும் சிற்சில தவறுகளின் போதும் நாம் பாதிக்கப்பட்டதாக உணரும் போது நாம் வெளிப்படுத்தும் உணர்வுகள் இவை.

உண்மையில் நாம் மனிதனாக நடந்து கொள்கிறோமா? ஒரு உண்மை முஃமினாக நாம் நடந்து கொள்கிறோமா? என்பதை அறிவதற்கு கடமைப்பட்டுள்ளோம்.

மனிதன் என்றாலே தவறு செய்பவன் தான். இயல்பாகவே அவன் பல்வேறு குறைபாடுகளோடே படைக்கப்பட்டுள்ளான் என இஸ்லாம் கூறுகின்றது.

எனவே, அந்த தவறும் குறைபாடும் நம்மிடமும் இருக்கிறது. நாமும் பிறர் விஷயத்தில் தவறிழைத்து விட வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, சக மனிதர்கள் செய்கிற தவறுகளை நாம் மன்னிக்க, மறக்க பழகிக் கொள்ள வேண்டும். நாம் சறுகிடும் போது நம்மை பிறர் மன்னிக்க வேண்டும் அத்தோடு அவர் அதை மறக்க வேண்டும் என நாம் ஆசைப்படத்தானே செய்கிறோம் என்பதை நாம் முதலில் மனதின் ஆழத்தில் பதிந்திட வேண்டும்.

கஅப் இப்னு சுஹைர் இவர் ஒரு பரம்பரை கவிஞர். நபிகளார் மீது இட்டு கட்டி கவிதை புனைந்து அவதூறு பரப்பிக் கொண்டிருந்தவர். இவரது சகோதரர் புஜைர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவராய் இருந்தார்.

எனவே கஅபிற்கு, புஜைர் சகோதர வாஞ்சையுடன் ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘கஅபே, துர் கவிதைகளாலும், அதனை பரப்புவதாலும் உன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. தன்னிடம் மன்னிப்புக்கேட்கும் எவரையும் நபிகளார் தண்டிப்பது இல்லை. எனவே, தூய இதயத்தோடு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு நபிகளாரை கண்டு மன்னிப்புக்கேள். நீ மன்னிக்கப்படுவாய்’ என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

கடிதம் கண்டவுடன் பதறிப்போன கஅப் மதீனா விரைந்தார். ஒரு தொழுகைக்கு பின் நபிகளாரை சந்தித்தார். அப்போது அவர் தன்னை கஅப் என்று நபிகளாரிடம் காட்டிக் கொள்ளவில்லை.

அவர் ஒரு மூன்றாம் மனிதர் போல பேச்சை தொடங்கினார். ‘அல்லாஹ்வின் தூதரே, கஅப் மனம் வருந்தியவராக உங்களிடம் வந்து ஒரு முஸ்லிமாக மன்னிப்பு கேட்க விரும்புகிறார். அவரை நான் உங்களிடம் அழைத்து வந்தால் நீங்கள் கஅபை ஏற்றுக் கொள்வீர்களா?’ என்றார்.

அண்ணலார் ‘ஆம்’ என்று சொன்னது தான் தாமதம், ‘அல்லாஹ்வின் தூதரே, நான் தான் அந்த கஅப்’ என்று நபிகளாரின் கரம் பற்றிக் கொண்டு கூறினார்.

மன்னிப்புக் கேட்க மறக்கக் கூடாது எனவும் இஸ்லாம் தூண்டுகிறது....

حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ ، حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم

مَنْ كَانَتْ لَهُ مَظْلَمَةٌ لأَحَدٍ مِنْ عِرْضِهِ ، أَوْ شَيْءٍ فَلْيَتَحَلَّلْهُ مِنْهُ الْيَوْمَ قَبْلَ أَنْ لاَ يَكُونَ دِينَارٌ ، وَلاَ دِرْهَمٌ إِنْ كَانَ لَهُ عَمَلٌ صَالِحٌ أُخِذَ مِنْهُ بِقَدْرِ مَظْلَمَتِهِ وَإِنْ لَمْ تَكُنْ لَهُ حَسَنَاتٌ أُخِذَ مِنْ سَيِّئَاتِ صَاحِبِهِ فَحُمِلَ عَلَيْهِ

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: " ஒருவர், தன் சகோதரனுக்கு அவனது மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப் படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ, வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட் டும்.)

(ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனது அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதி யிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரது தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும்" என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )

மன்னிப்பு கடந்த காலத்தின் நிகழ்வுகளை மாற்றாது. ஆனால் அது எதிர்காலத்தின் பாதைகளில் ஆனந்தமான பூக்களைச் சொரியும். பல்வேறு சோபனங்களின் சோலைவனமாய் மாற்றிவிடும். இதோ! இஸ்லாம் கூறும் சோபனங்கள்

அருகிலிருந்த நபித்தோழர்கள் கஅபை தண்டிக்க விரைந்தனர். அதனை தடுத்த நபிகளார், ‘கஅபை விட்டு விடுங்கள், அவரை நான் மன்னித்து விட்டேன். அவர் முன்பு இருந்த கஅப் அல்ல இப்போது’ என்றார்கள்.

மன்னிப்பின் மகத்துவத்தையும் அதன் உயர்வையும் உணர்ந்து கொண்ட கஅப் மகிழ்ச்சி பொங்க, மன்னிப்பின் மாண்பை மையமாக கொண்டு கவிதை பாடினார். அதன் பரிசாக போர்வையைப் போர்த்தி கஅப் (ரலி) அவர்களைக் கவுரவித்தார்கள்....

நன்றி.... Velli medai plus