வா இளைஞனே!! நன்மையால் ஒன்றிணைவோம்
வா_இளைஞனே!!!
நன்மையால்_ஒன்றிணைவோம்.
ஒரு மனிதனைப் பொறுத்தவரை அவனுடைய வாழ்நாளில் மிகவும் அழகான, மறக்க முடியாத, இனிமையான பருவம் இளமைப் பருவம்.
எதையும் சாதிக்கும் பருவம் அது, எவற்றையும் மிக துணிச்சலோடு, வலுவோடு எதிர் கொள்ள தூண்டும் பருவம் அது, பயமறியா பருவம் அது, இரும்பையும் துரும்பாக்கும் பருவம் அது, சாதனைகளை படைக்க, வாழ்க்கையில்
முன்னேற அஸ்திவாரமாக இருக்கும் பருவம் அது
இளமை என்பது ஒரு அற்புதமான சக்தி. இந்த உலகில் நடை பெற்ற எந்த ஒரு புரட்சியும், சமூக மாற்றமும் மறுமலர்ச்சியும் இளைய சக்தியினாலேயே சாத்தியமாகி இருக்கிறது.
இஸ்லாமின் வெற்றிக்குப் பின்னால் இருந்த பெரும் சஹாபாக்கள் அனைவரும் இளைஞர்களே!
அபூபக்கர், உமர், உஸ்மான், அலி, காலித் பின் வலீத், ஸஃது பின் அபீவக்காஸ், ஜைது பின் தாபித், ஜைது பின் ஹாரிதார், உஸாமா பின் ஜைது, தலஹா, சுபைர், அப்துர் ரஹ்மான பின் அவ்ப், ஹுதைபா, முஆத், முஸ்அப் பின் உமைர் (ரலி) போன்ற அனைவரும் இளைஞர்களே!ஆயிஷா நாயகி (ரலி) ஒரு இளம் பெண்ணே!
உலகில் சாதனையாளர்களாக வலம்வருபவர்கள் தங்களின் சாதனைக்கான விதையை வாலிபத்தில் தான் தூவினார்கள்.
மனித வாழ்க்கையின் மூன்று பருவங்களில் வாலிபமே உயர்ந்து நிற்கிறது.
காரணம் சிறுவயது அறியாமைக்குச்சொந்தமானது,வயோதிகம் இயலாமைக்குச்சொந்தமானது,இளமையே சாதனைக்குச்சொந்தமானதாகும்.
இதை அழகாக விவரிக்கிற அல்குர்ஆனின் வசனங்களை சற்று உற்றுநோக்கி கவனியுங்கள்.
*اللَّـهُ الَّذِي خَلَقَكُم مِّن ضَعْفٍ ثُمَّ جَعَلَ مِن بَعْدِ ضَعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِن بَعْدِ قُوَّةٍ ضَعْفًا وَشَيْبَةً*
*يَخْلُقُ مَا يَشَاءُ ۖ وَهُوَ الْعَلِيمُ الْقَدِيرُ*
அல்லாஹ் தான் உங்களை (ஆரம்பத்தில்) பலஹீனமான நிலையில் படைக்கிறான்; பலஹீனத்திற்குப் பின்னர், அவனே பலத்தை உண்டாக்குகிறான்; (அந்தப்) பலத்திற்குப் பின், பஹீனத்தையும் நரையையும் அவனே உண்டாக்குகிறான்; தான் நாடியதை அவன் படைக்கிறான் - அவனே எல்லாம் அறிந்தவன் பேராற்றலுடையவன்.
வாலிப பருவம் அல்லாஹ் நமக்கு அருளிய அனைத்து நிஃமத்துக்களும் முழுமையாக செயல்படும் பருவமாகும்.அதனால் தான் அல்லாஹ் அதை பலமிக்கது என்று வர்ணிக்கிறான்.
அந்த பருவத்தை நாம் எப்படி பயன்படுத்துகிறோமோ அப்படித்தான் நம் எதிர்காலமும் இருக்கும்..
ஒரு கதையின் மூலம் இதை நாம் அறிந்து கொள்ளலாம். எல்லாம் அறிந்த ஒரு பெரியவர் ஒரு ஊரிற்கு வந்தார். பலரும் அவரிடம் சென்று தங்கள் எதிர்காலங்களை அறிந்து வந்தனர். ஒரு குறும்புக்கார இளைஞன் அந்த பெரியவரால் பதில் சொல்ல முடியாத ஒரு கேள்வியைக் கேட்கத் திட்டமிட்டான். தன் உள்ளங்கையில் நடுவே ஒரு பட்டாம்பூச்சியை வைத்து இரு கைகளாலும் மூடியபடி அந்த பெரியவரிடம் சென்றான்.
“பெரியவரே!. என் கையில் உள்ள பட்டாம்பூச்சி உயிருள்ளதா? உயிரற்றதா?” என்று பெரியவரிடம் அவன் கேட்டான்.
அவர் அது உயிருள்ளது என்றால் கைகளால் அழுத்தி நசுக்கி அந்தப் பட்டாம்பூச்சியைக் கொன்று விட்டு ’பாருங்கள். உயிரில்லையே’ என்று சொல்ல நினைத்தான். அவர் அது உயிரற்றது என்று சொன்னால் அந்தப் பட்டாம்பூச்சியை ஒன்றும் செய்யாமல் கைகளைத் திறந்து பறக்க விட்டு “உயிருடன் இருக்கிறது பாருங்கள்” என்று சொல்ல நினைத்தான். இந்தக் கேள்விக்கு சரியான பதிலை அந்த பெரியவரால் சொல்ல முடியாத தர்மசங்கடத்தில் ஆழ்த்துவது தான் அவன் குறிக்கோள்.
அவன் எண்ணத்தைப் புரிந்து கொண்ட அந்த பெரியவர் புன்னகையுடன் சொன்னார். “அது உயிருடன் இருப்பதும், இறப்பதும் உன் விருப்பத்தைப் பொருத்தது”
அது போல இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்களாவதும், மண்ணாங்கட்டிகளாவதும் அவர்களுடைய எண்ணங்களையும், பண்புகளையும், ஈடுபாடு காட்டும் விஷயங்களையும், வாழும் முறைகளையும், மன உறுதியையும் பொருத்துதான் அமைகிறது..
இன்றைய இளைஞர்களின் ஒரு பக்கம்.
இன்றைய இளைஞர்கள் மிக திறமைசாலிகள். இலகுவாக புரிந்து கொள்ளும் திறமை படைத்தவர்கள். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் கொண்டவர்கள்.புரியாததை புரியவில்லை என்று தயங்காமல் சொல்லக்கூடியவர்கள். கல்வியில் நிரம்ப முன்னேறியுள்ளார்கள்.கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் கை தேர்ந்து விட்டதால் உலகில் பல்வேறு நாடுகளில் பணி செய்கிறார்கள். மாறுபட்ட சூழலில் வாழ்வதை சிரமமாக நினைப்பதில்லை.பழகி் கொள்கிறார்கள். அவர்களின் ஆற்றல் அளப்பரியது. நிறைய திறமைகள்.கடின உழைப்புக்கும் தயாராக உள்ளார்கள்.ஆண்களும் பெண்களும் இவற்றில் சரிசமமாக உள்ளனர். இவையெல்லாம் நமது இளவல்களை பற்றிய நல்ல செய்திகள்.
இளைமைக்கு முக்கியத்துவம் வழங்கும் மார்க்கம்.
*اللَّهُ الَّذِي خَلَقَكُمْ مِنْ ضَعْفٍ ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ ضَعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ قُوَّةٍ ضَعْفًا وَشَيْبَةً يَخْلُقُ مَا يَشَاءُ وَهُوَ الْعَلِيمُ الْقَدِيرُ*
*“நீங்கள் பலவீனமான நிலையிலிருந்த போது உங்களைப் படைத்தவன் அல்லாஹ் தான்! பிறகு அந்தப் பலவீனத்தை அடுத்து உங்களுக்கு வலிமையைத் தந்தான். பின்னர், அந்த வலிமையை அடுத்து உங்களைப் பலவீனர்களாகவும், முதியவர்களாகவும் ஆக்கினான். அவன் எதை நாடுகின்றானோ அதைப் படைக்கின்றான். மேலும், அவன் யாவற்றையும் அறிந்தவனாகவும், அனைத்து வஸ்துக்களின் மீது ஆற்றலுடையவனாகவும் இருக்கின்றான்.” ( அல்குர்ஆன்: 30:54 )*
*இங்கே, இளமைப்பருவத்தை வலிமை என்றும் ஆற்றல் என்றும் அல்லாஹ் குறிப்பிடுவதன் மூலம் அதன் மகத்துவத்தையும், உள்ளார்ந்த சிறப்புக்களையும் உணர முடிகின்றது.*
*عن بن عباس رضي الله عنهما قال : قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه : " اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك "
أخرجه الحاكم في المستدرك رقم ( 7846 ) 4 / 341 وقال : هذا حديث صحيح على شرط الشيخين ولم يخرجاه ، وابن أبي شيبة رقم ( 34319 )*
*இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:*
*”அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் அறிவுரை கேட்டு வந்த ஒருவருக்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அறிவுரை பகர்ந்தவண்ணம் கூறினார்கள்: “நீர் ஐந்து விஷயங்களை ஐந்து விஷயங்களுக்கு முன் அரிய வாய்ப்புக்களாய்க் கருதுவீராக!*
*1. நீர் முதுமையடைவதற்கு முன்னால் உம் இளமையயும், 2. நீர் நோயுறுவதற்கு முன்னால் உம் ஆரோக்கியத்தையும், 3. நீர் ஏழ்மையடைவதற்கு முன்னால் உம் செல்வநிலையையும், 4. நீர் பணிகளில் ஈடுபடுவதற்கு முன்னால் உமக்கு கிடைக்கும் ஓய்வையும், 5. நீர் மரணமடைவதற்கு முன்னால் உமது வாழ்நாளையும் நீர் அரிய வாய்ப்புக்களாய்க் கருதி பயன்படுத்திக் கொள்வீராக!”*
*لن تزول قدما عبد يوم القيامة حتى يسأل عن أربع: عن عمره فيما أفناه، وعن شبابه فيما*
*أبلاه، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وعن علمه ماذا عمل به*
*நாளை மறுமையில் நான்கு கேள்விக்கு பதில் கூறாதவரை ஒரு அடியானின் கால்கள் செயல்படாது. அவைகள்: “ 1. வாழ்நாளை எப்படி கழித்தாய்? , 2. வாலிபத்தை எப்படி கழித்தாய்?, 3. பொருளை எப்படி சேர்த்தாய்?, எப்படி செலவு செய்தாய்?, 4.கற்ற கல்வியைக் கொண்டு என்ன அமல் செய்தாய்? “ என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.*
*இந்த ஹதீஸில் ஒட்டு மொத்த வாழ்நாளுக்கு விசாரணை இருப்பது போன்றே அல்லாஹ் வாலிபத்தையும் தனியாக விசாரிப்பான் என்பது தெரிய வருகின்றது.*
*عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ، يَوْمَ لاَ ظِلَّ إِلَّا ظِلُّهُ: الإِمَامُ العَادِلُ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي المَسَاجِدِ، وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ، فَقَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ، أَخْفَى حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ صحيح البخاري*
*அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்: "அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்கள்; நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் வளர்ந்த வாலிபர், பள்ளி வாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திய ஒருவர், அல்லாஹ்விற்கா கவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள், உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோது, 'நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்' என்று சொல்லும் மனிதர், தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்" என இறைத்தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள் ( நூல்: புஹாரி )*
*எனவே, இளைமைப் பருவத்தின் அருமையை அதன் முக்கியத்துவத்தை இதை விட கூடுதலாக யாரும் சொல்லித் தந்திட இயலாது.*
*இன்ஷா அல்லாஹ்.*
*தொடரும்.*
*M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி.*