நாயகத்தை புகழ்ந்து காவியங்கள் இயற்றிய தமிழக ஆலிம்கள்

நாயகத்தை புகழ்ந்து காவியங்கள் இயற்றிய தமிழக ஆலிம்கள்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

......#அல்ஹம்துலில்லாஹ்...

கழிந்த 2018_ஆண்டு முதல் தமிழகம் தழுவிய‌ அளவிலான இஸ்லாமிய மார்க்க போட்டிகளுக்கு #மைமூன் #பப்ளிஷிங்_ஹவுஸின் கீழில் துவக்கம் குறித்தோம்.

இறைவனின் மாபெரும் அருளால் இது வரைக்கும் தமிழகம் தழுவிய அளவில் ஆறு போட்டிகளை நடத்தி உள்ளோம்..

ஹஜ், ரமலான், ரபீஉல் அவ்வல் போன்ற புனித மாதங்களில் இஸ்லாமிய மார்க்க அறிவுகளை மக்களுக்கு நினைவூட்டும் விதமாகவும், அவர்களின் இஸ்லாமிய அறிவை பெருக்கும் விதமாகவும், இளம் தலைமுறைக்கு இஸ்லாமிய சன்மார்க்க ஞானங்களை அறிய உதவும் அடிப்படையிலும் இந்த மகத்தான போட்டிகளை நாம் நடத்தி வருகிறோம்..

நாம் இதுவரை நடத்தியுள்ள கட்டுரை போட்டி,ஹஜ் வினா_விடை போட்டி, திருக்குர்ஆன் வினா விடை_ போட்டி, மீலாத்_மவ்லித் வினா_ விடை போட்டி,ஷைக் ஜீலானி வினா_ விடை போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் மூலம் ஏராளமான அரபிக் கல்லூரி மாணவர்கள், மக்தப் மதரசா பிள்ளைகள், நிஸ்வான் மதரசா மாணவிகள், ஆலிம்கள், ஆலிமாக்கள், பொதுமக்கள் என பலரும் பயனடைந்துள்ளனர்.

அல்லாஹ்வின் பேருதவியால் இந்த வருடமும் ரபிஉல் அவ்வல் மாதத்தில் நாயகத்தை புகழ்ந்து காவியங்கள் இயற்றிய தமிழக ஆலிம்கள் எனும் தலைப்பில் மீலாது சிறப்பு கட்டுரை போட்டி நடத்தினோம்.. மாஷா அல்லாஹ்! ஏராளமான மாணவ மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டனர்.

பொதுவாக பரிசளிப்பு விழா நமது ஊரான குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் வைத்து தான் நடத்தி வருகிறோம்..

ஆனால் இந்த வருடம் முதல் மூன்று பரிசு பெற்ற வெற்றியாளர்கள் அனைவருமே காயல்பட்டினத்தைச் சார்ந்த நபர்கள் என்பதால் எமது தம்பி #முஹம்மது அன்வரியின் #காயல்பட்டினத்திலுள்ள வீட்டில் வைத்து நேற்று சிறப்பான முறையில் பரிசளிப்பு விழா நடத்தினோம்.. அல்ஹம்துலில்லாஹ்..

வெற்றியாளர்கள் உட்பட ஏராளமான ஆலிமாக்கள், அவர்களது உறவுகள் பலர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

இந்த மகத்தான போட்டிக்காக உதவிய ஏராளம் நபர்கள் உண்டு.

பரிசுகளை அன்பளிப்பு தந்தவர்கள், இதற்காக ஸ்பான்சர்களை பிடித்து தந்தவர்கள், நம் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு நல்கிய வர்கள்.

குறிப்பாக சொல்வதாக இருந்தால் அப்துல்_வஹாப்_மஹ்ழரி,அஹ்மது சுல்தான்_அன்வரி, அல்ஹாபிழ் முஹம்மது_அன்வரி_ஸெய்யித்_அன்வரி போன்றோர் பலவிதத்திலும் நமக்கு உறுதுணையாக, பக்கபலமாக இருந்தனர்..

இந்த மகத்தான போட்டிக்கு உதவி
செய்த, ஒத்துழைத்த எல்லா அன்பு நெஞ்சங்களுக்கும், பரிசளிப்பு விழாவுக்கு வருகை புரிந்து, தலைமையேற்று மிக சிறப்பான முறையில் நடத்தி தந்த முஅஸ்கரிய்யா ஆலிமாக்களுக்கும் வல்லோன் அல்லாஹ் இரு உலகிலும் அனைத்து விதமான நலவுகளையும், வளங்களையும்,
செழிப்புகளையும் வழங்கி அருள்புரிவானாக.

இன்ஷா அல்லாஹ்
மார்க்க ஞானங்களை மக்களுக்கு எத்தி வைக்கும் பொருட்டு ஏராளமான போட்டிகளை இனிவரும் காலங்களிலும் நடத்துவதற்கு நீங்கள் துஆச்செய்யும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

இன்ஷா அல்லாஹ்
வருகிற ரமளான் மாதத்தில் ஹதீஸ் வினா_விடை போட்டி நடத்த நாடியுள்ளோம் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்பாய் வேண்டுகிறோம்..*

*என்றும் மகிழ்வுடன்..*

*M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி..*
இயக்குனர்:மைமூன்
பப்ளிஷிங் ஹவுஸ்.
திருவிதாஙாகோடு
குமரி மாவட்டம்....
7598769505