அவ்லியாக்களின் கராமத்
18_ ஆயிரம் குடும்பங்களுக்கு
#மாதத்தில்_இரண்டு_தவணை #இலவசமாக12_கிலோ_அரிசி
#வழங்கும்_ஜமாஅத்..
இந்த பள்ளிவாசலில் இருந்து மாதந்தோறும் இரண்டு தவணையாக 18_ குடும்பங்களுக்கு 12_கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா...?
ஆம்...
நம்பித்தான் ஆக வேண்டும்..
இந்த பள்ளிவாசல் கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் வளாஞ்சேரிக்கு அருகில்
மூண்ணாக்கல் எனும் ஊரில் இருக்கிறது..
சாதி மத வேறுபாடின்றி அனைத்து தர மக்களுக்கும் அரிசிகள் வழங்கப்படுகிறது..
இந்த பள்ளிவாசலில் இவ்வளவு எங்கிருந்து கிடைக்கிறது என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம்..?
இந்த பள்ளிவாசலை சுற்றி ஏராளமான அவ்லியாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
அவர்களுடைய கராமத் மூலம் தான் இது நிகழ்கிறது..
கேரள மற்றும் இதர மாநில மக்கள் அவர்களின் தேவைகள் நிறைவேற இந்த பள்ளிவாசலுக்கு அரிசி வழங்க நேர்ச்சை செய்கிறார்கள்..
அவர்களின் பல்வேறு தேவைகள் நிறைவேறியவுடன் அவர்கள்
நேர்ச்சையாக்கிய அரிசியை பள்ளிவாசலுக்கு கொண்டு கொடுக்கிறார்கள்..
அந்த அரிசியை அந்த ஜமாஅத் மக்களுக்கும்
அதன் அருகில் இருக்கும்
ஊர் மக்களுக்கும் சாதி மத வித்தியாசம் பார்க்காமல் வழங்கப்படுகிறது..
இதன் மூலம் எத்தனை குடும்பங்களுக்கு ஆசுவாசம் கிடைக்கிறது..
அரிசி வாங்குபவர்களில்
முஸ்லிம்கள் உண்டு..
கிறிஸ்தவர்கள் உண்டு..
மதமில்லாதவர்கள் உண்டு..
இந்த பள்ளிவாசலின் கராமத்தும்,
இந்த ஊரின் நன்மையும்
என்றும் நிலை நிற்கட்டும்.
தமிழில்:M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி...