ரமளான் வினா விடை பாகம்.. 17
#புனித_ரமளான்
வினா_விடை
பாகம்_17...
76 : மாதத் தீட்டு, பிரசவத் தீட்டு போன்ற நிலைகளில் உள்ள பெண்கள் நோன்பு நோற்கலமா...?
இந்நிலையில் இருக்கும் பெண்கள் நோன்பு நோற்கலாகாது. ஆனால், இதனால் விடுபட்ட நோன்புகளை பின்னர் கழாச் சொய்ய வேண்டும்.
77 : விடுபட்ட நோன்புகளை எப்போது களாஃ செய்ய வேண்டும்..
அடுத்த றமழான் வருவதற்கு முன்னர் கழாச் செய்திட வேண்டும். அவற்றைத் தொடர்ச்சியாகச் செய்ய வேண்டும் என்ற அவசியமுமில்லை. தனித்தனியாக வசதிப்படி நோற்றுக் கொள்ளலாம்.
78 : இப்தாருக்குப் பிறகு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிய துஆ...?
இப்தாருக்குப் பிறகு, இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் கூறப்பட்ட வார்த்தைகளை ஓதிக் கொண்டு, அதன் படி நபி (ஸல்) அவர்கள் நோன்பு துறக்கும் போது கூறுவார்கள்:
தாகம் நீங்கியது, நரம்புகள் ஈரமாகி, அல்லாஹ் நாடினால், வெகுமதி உறுதி செய்யப்படுகிறது.
الدعاء عند إفطار الصائم " ذهب الظمأ وابتلت العروق..." " اللهم إني أسألك برحمتك التي وسعت كل شيء..."
79 : நோன்பு திறக்க வைப்பதின் சிறப்புகள்..?
யார் ஒருவரை நோன்பு திறக்க வைக்கின்றாரோ நோன்பு நோற்றவருக்கு கிடைக்கும் நன்மையைப் போன்றே (ஒரு பங்கு) அவருக்கும் கிடைக்கும். அதனால் நோன்பு நோற்றவரின் நன்மையிலும் எதுவும் குறையாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
80 : விரைவாக நோன்பு திறப்பதின் மகத்துவம்..?
விரைந்து நோன்பு திறக்கும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நிலைத்திருக்கிறார்கள்' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி), புகாரி 1957, முஸ்லிம், திர்மிதி 635, இப்னுமாஜா 1697)
மற்றொரு அறிவிப்பில், 'யூதர்கள் தான் நோன்பு திறப்பதை தாமதிப்பார்கள்' என்று நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.
(இப்னுமாஜா 1698)
நோன்பு திறப்பதற்கான நேரத்தை அடைந்து விட்டால் உடனே நோன்பை திறந்து விட வேண்டும், தாமதிக்கக் கூடாது என்பது தான் இதன் கருத்தாகும்.
*****************************
இன்ஷா அல்லாஹ்
தொடரும்...
வெளியீடு
M.P.H.
திருவிதாங்கோடு...
குமரி மாவட்டம்.....