பாவத்தின் பிரதிபலிப்புகள்
ரமளான் சிந்தனைகள்
பிறை.... 13
பாவத்தின்_பிரதிபலிப்புக்கள்.....
பாவத்தின் முதல் பிரதிபலிப்பு என்னவெனில் நம்முடைய
உள்ளத்தை இருளடையச் செய்வதாகும்
كَلَّا ۖ بَلْ ۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا يَكْسِبُونَ
அப்படியல்ல: அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்து விட்டன என்று அல்லாஹ் கூறுகிறான்.
சில நேரங்களில் பாவங்கள் கவலையையும் நஷ்டத்தையும் ஏற்படுத்தும்.
உள்ளம் இருளடைவதால் வணக்கங்கள் புரிவதில் சோம்பலும், பாவம் செய்வதில் துணிச்சலும் உண்டாகிறது.
இந்நிலை தொடருமானால் பாவங்கள் நல்லவைகளாக தெரிய ஆரம்பித்துவிடும்.
இது மிகவும் ஆபத்து.
நம்மை சுற்றி நடக்கிற எந்த நிகழ்வுகளுக்கும் நாம் செய்யும் பாவத்துடன் தொடர்புடையது என்பதை மறந்துவிடக்கூடாது.அதனால் தான் ஸாலிஹீன்களான நல்லோர்கள் தங்கள் வாழ்வில் ஏதாவது சோதனை வந்தால் இன்று நான் என்ன பாவம் செய்தேன் என்று யோசிப்பார்களாம்.
ஹழ்ரத் புழைல் இப்னு இயாழ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்
நான் ஒரு பாவத்தை செய்யும்போது அதன் விளைவுகளை என் மனைவியிடம்,அல்லது என் மக்களிடம் அல்லது என் வேலைக்காரர்களிடம் காண்பேன். நான் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும்போது இவர்கள் எனக்கு மாறு செய்வார் கள்.என் மனைவி என் சொல்லுக்கு ஏன் கட்டுப்படவில்லை என்ற கேள்விக்கு விடையை நான் வேறு எங்கும் தேட தேவையில்லை.
படைப்பாளனுக்கும் படைப்பினங்களுக்கும் இடையில் உள்ள உறவு சரியானால் படைப்புகளுக்கிடையில் உள்ள உறவு தானாக சரியாகிவிடும்
ஜகாத்தை மக்கள் தடுக்கும்போது அல்லாஹ் மழையை தடுக்கின்றான்.விபச்சாரத்தை மக்கள் அங்கீகரிக்கும்போது அல்லாஹ் நோய்களை இறக்குகின்றான் போன்ற ஹதீஸ்களை நாம் கேள்விப்பட்டதுண்டுதானே.....
வானத்திலிருந்து வரும் ஒவ்வொரு உத்தரவுக்குப்பின்னும் பூமியில் வாழும் மனித செயல்பாடுகள் காரணம் என்பதை மறந்துவிடக்கூடாது.
قال جبير: لما فتحت قبرص رأيت أبا الدرداء جالساً وحده يبكي فقلت يا أبا الدرداء، ما يبكيك في يوم أعزَّ الله فيه الإسلام وأهله؟ قال: "ويحك يا جبير، ما أهون الخلق على الله، إذا هم تركوا أمره، بينما هي أمة قاهرة ظاهرة لهم الملك تركوا أمر الله فصاروا إلى ما ترى".
கப்ரஸ் நகரத்தை கைப்பற்றியபோது அபுத்தர்தா (ரலி) அவர்கள் தனிமையில் உட்கார்ந்து அழுதார்களாம்.
முஃமின்களுக்கு அல்லாஹ் கண்ணியத்தை வழங்கிய இந்த நாளில் ஏன் அழுகிறீர்?என காரணம் கேட்டபோது-எதிரிகள் எத்துனை பலமான சமுதாயம்.அவனுக்கு கட்டுப்படாமல் பாவம் செய்தபோது அல்லாஹ் அவர்களை இந்தளவு இழிவு படுத்திவிட்டான்.இதை நாம் படிப்பினையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியதாக ஜுபைர் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.
#பாவத்தால்_ஹிப்ழ்_பறிபோனது
ஹழ்ரத் ஜுனைத் பக்தாதி (ரஹ்)
அவர்கள் தங்களின் ஒரு சீடருடன் சென்று கொண்டிருந்தார்கள்.அப்போது எதிரே அழகான ஒரு கிருஸ்துவப்பெண் தோற்றம் தருகிறாள்.அதை கவனித்த அந்த சீடர் தன் ஷைகிடம்,ஷைக் அவர்களே! நாளை மறுமையில் இப்படிப்பட்ட முகமும் நரகில் வீசப்படும் தானே என்று கேட்டார்.அதற்கு ஜுனைத் ரஹ் அவர்கள் தன் சீடரிடம் தவ்பா செய்யுங்கள் என்றார்கள்.நீங்கள் அந்த பெண்ணை இச்சையுடன் பார்த்துவிட்டீர் என்றும் கூறினார்கள்.ஆனால் தன் தவறை ஒப்புக்கொள்ளாத அந்த சீடர் தன் ஷைகிடம் நான் பாவம் செய்யவில்லை.கேள்வி மட்டுமே கேட்டேன் என்று வாதம் செய்தார்.இறுதிவரை தவ்பா செய்யவில்லை.அதன் விளைவு ஹாபிழாக இருந்த அந்த சீடர் இருபது ஆண்டுக்கு பின் முழு குர்ஆனையும் மறந்துவிட்டார்.
வல்லோன் அல்லாஹ் நம் அனைவரையும் நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்த்து அருள் புரிவானாக ஆமீன்....