மலப்புறத்தில் ஓகே உஸ்தாத் வரலாற்று கருத்தரங்கு...
மஃதின் அகாதமி

மலப்புறத்தில் ஓகே உஸ்தாத் வரலாற்று கருத்தரங்கு...

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

ஓகே_உஸ்தாத்_வரலாற்று_
கருத்தரங்கு மற்றும்_நினைவுக்_கூட்டம்...

மலப்புரம் சங்கமத்தில்
ஸமஸ்த தலைவர்களுக்கு பஹ்ருல் உலூம் விருது வழங்கி கௌரவித்தல்....

தலைமுறைகளின் ஆசிரியரான பஹ்ருல் உலூம் ஓகே உஸ்தாத் வரலாறு, தத்துவம்
என்ற கருப்பொருளில் வரலாற்று கருத்தரங்கு மற்றும் நினைவுக் கூட்டம்
டிசம்பர் 18 வியாழக்கிழமை
மலப்புரம் ரோஸ் லவுஞ்ச் ஆடிட்டோரியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..

பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த கருத்தரங்கில் ஆயிரக்கணக்கானோர்
கலந்து கொள்வார்கள்.

இந்தியன் கிராண்ட் முஃப்தி ஏபி அபுபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்கள் உட்பட கேரளாவிலும் வெளியேயும் பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான அறிஞர்களின் வழிகாட்டியாக ஒதுக்குங்கல் ஓகே ஸெய்னுத்தீன் குட்டி முஸ்லியார் உள்ளார்கள்...

மதியம் 1 மணிக்கு மவ்லிது மஜ்லிஸை தொடர்ந்து நிகழ்ச்சிகள் தொடங்கும்.
மதியம் 1.30 மணிக்கு கேரள ஹஜ் மற்றும் வக்ஃப் அமைச்சர் வி.அப்துரஹ்மான் செமினாரை துவக்கி வைக்கிறார்.
ஸமஸ்த தலைவர் இ.சுலைமான் முஸ்லியார் தலைமை தாங்குவார்கள்.
கேரள முஸ்லிம் ஜமாஅத் மாநில பொதுச்செயலாளர் ஸெய்யித் இப்ராஹிமுல் கலீல் அல் புகாரி,
எஸ்ஒய்எஸ் மாநில பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் சகாபி எளமரம்,
மஜீத் சாகிப் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசுகின்றனர்.

பின்னர் நடைபெறும் நினைவேந்தல் கூட்டத்தை ஸமஸ்தா செயலாளர்
பொன்மழா அப்துல் காதர் முஸ்லியார் துவக்கி வைக்கிறார்.
ஸமஸ்தா கேரள ஜம்இய்யதுல் உலமா பொதுச் செயலாளர் இந்தியன் கிராண்ட் முஃப்தி ஏ பி அபூபக்கர் பாகவி ஹஸ்ரத் சிறப்புரையாற்றவுள்ளார்.
சமஸ்த பொருளாளர் கோட்டூர் குஞ்ஞம்மு முஸ்லியார்,
ஜாமிஆ இஹ்யாவுஸ்ஸுன்னா தலைவர்
ஓ.மூசன்குட்டி முஸ்லியார்,
ஸெய்யித் ஹபீப் கோயா தங்கள்,
கே.பி.எச். தங்கள் காவனூர்,
ஸமஸ்த மத்திய முஷாவரா உறுப்பினர்கள் வண்டூர் அப்துரஹ்மான் ஃபைஸி, மஞ்சப்பற்றா ஹம்ஸா முஸ்லியார்,
ஓ.கே. அப்துர்ரஷித் முஸ்லியார்,
அப்து முஸ்லியார் தானாலூர்,
அபு ஹனீபல் ஃபைஸி
பொன்மழா மொய்தீன்குட்டி பாகவி,
ஸமஸ்தா மாவட்டச் செயலாளர் பி.இப்ராஹிம் பாகவி,
ஓ.கே. அப்துல் ஹக்கீம் முஸ்லியார்,
ஸெய்யித் ஹசன் பாகவி கொன்னார்,
SYS மலப்புரம் கிழக்கு மாவட்டத் தலைவர் ஸெய்யித் ஷிஹாபுத்தீன் ஹைத்ருஸி அஹ்ஸனி, SSF மாநிலத் தலைவர்
ஸெய்யித் முனீருல் அஹ்தல் அஹ்ஸனி, கேரள முஸ்லிம் ஜமாஅத் நிதிச் செயலாளர் ஏ.பி. அப்துல் கரீம் ஹாஜி சாலியம்
எம்.என். குஞ்ஞிமுஹம்மத் ஹாஜி,
எம்.என். ஊரகம் அப்துரஹ்மான் ஸகாபி, அப்துல் மஜீத் அஹ்ஸனி,
முனீர் பழூர்,
பி.கே.முஹம்மது ஷாபி,
ஷாகுல் ஹமீது மலப்புரம் ஆகியோர் உரை நிகழ்த்தவுள்ளனர்.

ஓ.கே.ஜைனுத்தீன் குட்டி முஸ்லியாரின் சீடர்களும் சகலதுறையிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி,
ஒரு பெரும் ஆலிம் கூட்டத்தை வளர்த்து வலுவாக்கிய
இ சுலைமான் முஸ்லியார்,
இந்தியன் கிராண்ட் முஃப்தி ஏ.பி.அபுபக்கர் பாகவி ஹஸ்ரத், கோட்டூர் குஞ்சம்மு முஸ்லியார் ஆகியோர் இந்த சங்கமத்தில்
பஹ்ருல் உலூம் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.