ஆயிரமாயிரம் பிள்ளைகளின் "தாயாக" திகழ்ந்த கதீஜா ஹஜ்ஜும்மா
ஆயிரமாயிரம் பிள்ளைகளின்
"தாயாக" திகழ்ந்த கதீஜா ஹஜ்ஜும்மா
எங்கள் பாசமிகு உம்மா
அல்லாஹ்வின் ரஹ்மத்தின்
பக்கம் பயணமாகிவிட்டார்கள்.
ஒரு குழந்தையை பெற்றடுக்காவிடினும் ஆயிரமாயிரம் பிள்ளைகளின்
"தாயாக" திகழ்ந்த கதீஜா ஹஜ்ஜும்மா அவர்கள் இந்த உலகத்திலிருந்து விடைபெற்றார் என்ற அவரது மரணச் செய்தியைக் கேட்ட உலகின் பல பகுதிகளிலும் உள்ள பிள்ளைகள் வேதனையோடு கூறினர் "எங்கள் உம்மா" வஃபாத்தாகிவிட்டார்கள்.
பேரரசர் ஷாஜகான் தனது காதலியின் நினைவாக கட்டிய தாஜ்மஹால் போன்று மஞ்சேரி பாப்பினிப்பாறையிலும் ஒரு வரலாறும் உள்ளது.
மர்ஹூம் எலாயி கோரம்பயில் முஹம்மது ஹாஜிதான்
கதாபாத்திர ஹீரோ.
இவர் பல ஆண்டுகளுக்கு
முன் #தாருஸ்ஸுன்னா என்ற இஸ்லாமிய ஸ்தாபனத்திற்கு
2 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார்.
அங்கு ஒரு ஷரீஅத் கல்லூரி உள்ளது.
அதன் பின்னர் மஞ்சேரியில் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஜாமிஆ ஹிகாமிய்யாவும், முட்டிப்பாலையில் இயங்கி வரும் முபாரக் ஆங்கிலப் பாடசாலையும் பார்வையிட்டார்.
தனது வீடு மற்றும் நிலத்தை தானமாக வழங்கலாம் என்றும், அங்கே சமய மற்றும் பெளதீக கல்விக்கூடம் கட்ட வேண்டும் என்றும், வாடகை கட்டிடத்தில் இயங்கும் அனைத்து நிறுவனங்களையும் அங்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
பின்னர் வக்ஃப் செய்த நிலத்தில் தனது அன்புக்குரிய மனைவி கதீஜாவின் பெயரில் "கதீஜா ஆங்கிலப் பள்ளி" மற்றும் ஹிகமிய்யா கலைக் கல்லூரியையும் தொடங்கினார்.
ஷரீத் கல்லூரி, தஃவா கல்லூரி,
மலையாள மீடியம் பள்ளி மற்றும் அகதி அனாதை இல்லம் என எல்லாவற்றையும் சேர்த்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் நிறுவனங்களின் வளாகமாக அது வளர்ந்து வந்தது.
இந்நிறுவனத்தின் மாணவர்களும் ஆசிரியர்களும் கதீஜா உம்மாவை "உம்மா" என்றும் முஹம்மது ஹாஜியை "வாப்பா" என்றும் அழைத்தனர்.
தன் சொந்தம் தந்தையை போல் தாயைப் போல் அவர்கள் இருவரையும் நேசித்தனர்.
ஒருமுறை நானும்,
என் வாப்பாவும், உம்மாவும் மர்ஹும் குஞ்சாலன் சாஹிபும் சேர்ந்து வட இந்தியாவுக்கு சுற்றுலா சென்றோம்
டெல்லி, அஜ்மீர் தர்கா மற்றும் தாஜ்மஹாலை பார்வையிட்டோம்.
அது குளிர்காலம். குளிரில் இருந்து தப்பிக்க நாம் அனைவரும் ஸ்வெட்டர், கையுறை, கம்பளி போன்றவற்றைப் பயன்படுத்தினோம். ஆனால் உம்மாவுக்கு கம்பளியோ கையுறைகளோ தேவைப்படவில்லை வெப்பமும் குளிரும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என்று சொன்னது நினைவிருக்கிறது.
அது ஒரு மறக்க முடியாத பயணம்.
உம்மாவுக்கு வயிற்றில் புற்றுநோய் வந்தது. கோவையில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது.
சிகிச்சையின் போது பத்து பாட்டில்கள் இரத்தம் வேண்டும் என மருத்துவர்கள் கோரினர்.
எத்தனை பாட்டில்கள் ரத்தம் தேவைப்பட்டாலும்
கொடுக்க ஏராளமான குழந்தைகள் தயாராக இருந்தனர்.
உம்மாவுக்கு ரத்த தானம் செய்ய குழந்தைகளுடன்
ஒரு ஜீப் கோவையை நோக்கி விரைந்தது.
ஸ்கூலிருந்து குழந்தைகள் உம்மாவின் சமையல் அறைக்குச் சென்று தேவையான உணவு மற்றும் தின்பண்டங்களை எடுத்துச் சாப்பிடுவார்கள். கேம்பஸ் கேன்டீனில் தயாரிக்கப்படும் உணவை குழந்தைகளும் உம்மாவுக்கு எடுத்துச் செல்வார்கள். உம்மாவைப் பார்க்க அவ்வப்போது முன்னாள் மாணவர்கள் வருவார்கள்.
ஒரு பெற்றடுத்த தாய் போல் அனைவரின் தகவல்களையும் கேட்டறிந்து கொள்வார்கள்.
உம்மாவின் மறுமை வெற்றிக்காகவும்,
பயமற்ற கப்ர் வாழ்க்கைக்கும் வேண்டி உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள அவரது குழந்தைகள் பிரார்த்தனைகள் நடத்துகின்றனர்.
அந்த குழுவில் சிறந்த அறிஞர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள் உள்ளனர்.
ஜாமியா ஹிகமிய்யா வளாக பள்ளிவாசலுக்கு அருகில் குழந்தைகளின் இடைவிடாத குர்ஆன் பாராயணமும், தாலாட்டு பாடல்களையும் கேட்டுக்கொண்டே உம்மாவும், வாப்பாவும் இனி எப்போதும் தூங்கிக் கொண்டிருப்பார்கள். அவர்களது கப்ருக்கு பல நாடுகளில் இருந்து பிரார்த்தனைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்...
தமிழில்:
M.சிராஜுத்தீன்
அஹ்ஸனி...