மரண தருவாயில் கலிமா சொல்லிக் கொடுத்த மருத்துவர்

மரண தருவாயில் கலிமா சொல்லிக் கொடுத்த மருத்துவர்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

மரண_தருவாயில்_கலிமா
சொல்லிக் கொடுத்த_டாக்டர்
ரேகா_கிருஷ்ணன்....
◾◾◾◾◾◾◾◾◾◾◾◾◾◾

கேரள மாநிலம் பட்டாம்பி சேனா மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ரேகா கிருஷ்ணன் ஒரு முஸ்லிம் சகோதரிக்கு மரண வேளையில் ஷஹாதத் கலிமா சொல்லிக் கொடுத்த செய்தி நேற்று பரப்பாக பேசப்பட்டது...

சமூக ஊடகங்களில் பல பொய்யான வதந்திகளும், செய்திகளும் உலா வருவதால் முதலில் இதை பலரும் நம்பவில்லை.. பலரும் இது பொய் என்று சொல்லி புறக்கணித்தனர்..

ஆனால் நேற்று அவர்களுடனான நேர்காணல் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது..

"கடந்த 17_ நாட்களாக வெண்டிலேட்டரில் இருந்த கோவிட் பாதித்த நோயாளியின் மரணம் நெருங்குகிறது என்பதை புரிந்து கொண்டு குடும்பத்தினருடன் பேசிய பின்னர் நோயாளியை வெண்டிலேட்டரிலிருந்து மாற்றினோம்..

நோயாளியை சந்திக்க குடும்பத்தினருக்கு அனுமதி இல்லாத காரணத்தால் நான்தான் அவர்களிடம் நோயாளியின் உடல்நலன் குறித்து தெரிவித்து வந்தேன்..

நான் U.A.E.யில் படித்ததால் கலிமாவையும்,அதன் அர்த்தத்தையும் புரிந்து வைத்திருந்தேன்..

ஒரு நமிடம்...

(( لا إله إلا الله محمد رسول الله )

லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ் என்ற திருக்கலிமாவை அந்த நோயாளி பெண்மணிக்கு சொல்லி கொடுத்தேன்..

இது நோயாளியின் இறுதி வேளை என்பதை புரிந்து கொண்டு கலிமா சொல்லி கொடுப்பதின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டு இதைச் செய்தேன்..

அந்நேரம் அப்பெண்மணி மூன்று தடவை பெருமூச்சு விட்டு இவ்வுலகை வாழக்கையிலிருந்து விடைப் பெற்றார்..

உறவினர்கள் அருகில் இருந்திருந்தால் மிக முக்கியத்துவம் வழங்கி செய்திருக்கும் ஒரு நற்காரியத்தை என்னால் செய்து கொடுக்க முடிந்ததை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருந்தது.

மேற்கூறியவை அனைத்தும் மருத்துவரின் நேர்காணலின் முக்கிய பகுதியாகும்..

ஒரு இந்து மருத்துவர் ஒரு முஸ்லீம் நோயாளி மரணிக்கும் வேளையில் கலிமாவை சொல்லிக் கொடுக்கிறார்.
எவ்வளவு ஒரு அற்புதமான அனுபவம்.

அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை என்றும், முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் உறுதி மொழி அளிக்கிறேன் என்பதுதான் கலிமாவின் கருத்து.

ஒருவரின் மதத்தை தேடிப் பிடித்து கொடூர கொலை செய்யும் இந்நாட்டில் டாக்டர் ரேகா கிருஷ்ணனின் இச்செயல் மன ஆறுதலையும், மதச்சார்பற்ற இந்தியாவுக்கு பெருமையையும், வலிமையையும் சேர்க்கிறது என்று சொன்னால் மிகையாகாது...

மதீனாவில் உள்ள மஸ்ஜித்-உன்-நபவியில் பிரார்த்தனை செய்ய நஜ்ரானில் இருந்து வருகைப் புரிந்த கிறிஸ்தவ தூதுக்குழுவிற்கு வசதி செய்து கொடுத்த புனித நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரியும், முஸ்லிம்களுடன் இணக்கமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பிற மதத்தவரை அநியாயமாக கொலை செய்தால் அவன் (கொலை செய்தவன்) சொர்க்கத்தின் நறுமணத்தை கூட அனுபவிக்க முடியாது என்ற நாயகம் (ஸல்) அவர்களின் திரு வசனமும் மாற்று மதத்தவர்களுடன் எப்படி இருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்துகிறது...

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வெறுப்புடன் பார்ப்பவர்கள் இஸ்லாத்தைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்துக்கொண்டால் நன்றாக இருந்திருக்குமே என்று நினைக்க தோன்றுகிறது...

மருத்துவர் ரேகா கிருஷ்ணனின் வீடியோவைப் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில்
செல்லவும்👇👇👇.

https://m.youtube.com/watch?v=ONW0KHq8O8A..

தகவல்.M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி.

மீள் பதிவு....