அஹ்லு பைத்... ஒரு மஹல்லாவின் வெளிச்சம்
.............அஹ்லு_பைத்..................
ஒரு_மஹல்லாவின்_வெளிச்சம்
நேற்றைய தினம் அஹ்லு பைத்தினர்களின்
வாழ்வில் மிகவும் மகிழ்ச்சி
அளித்த தினம்..
ஒவ்வொரு ஸெய்யித்மார்களும் வல்லோனின்
கிருபை
பெற்றவர்கள்.
மார்க்க அறிஞர்களான ஸெய்யித்மார்கள்
தீனின் எழுச்சிக்காக அயராது பாடுபட்டவர்கள்.
எப்போதும் தனது வாழ்வை அதற்காகவே அர்பணிப்பவர்கள்.
நமது நேற்றைய கதாநாயகனான
ஸெய்யித் அலி பாஃபகி தங்கள்..
மகத்தான சுபாவத்திற்கு
சொந்தக்காரர்கள்..
அமைதியை விரும்பும் சாந்த சொரூபி.
தீன் சேவையில் அறுபது ஆண்டுகளை
பூர்த்தி செய்த தங்கள் அவர்களுக்கு
கெளரவிப்பு விழா நடத்த வேண்டும் என்று கொயிலாண்டிகாரர்கள் முடிவு எடுத்து அதை கம்பீரமாக நேற்றைய தினம் நிறைவேற்றி உள்ளனர்..
தங்கள் அவர்களை கெளரவிக்கும் விழா அறிந்து ஏராளமான மக்கள் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்...
வல்லோன் அல்லாஹ் அஹ்லு பைத்தினரை கண்ணியப்படுத்தும் கூட்டத்தில் நம்மை சேர்த்து அருள்வானாக...
தகவல்:M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி.