முஹிம்மாத் பட்டமளிப்பு விழாவும் ஸெய்யித் தாஹிருல் தங்கள் உரூஸும் தமிழக பிரச்சார துவக்க விழா

முஹிம்மாத் பட்டமளிப்பு விழாவும் ஸெய்யித் தாஹிருல் தங்கள் உரூஸும் தமிழக பிரச்சார துவக்க விழா

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

முஹிம்மாத்_அஹ்தல்_தங்கள்
உரூஸ்.
முஹிம்மாத்_பட்டமளிப்பு_விழா

காசர்கோடு:

2026
ஜனவரி 28, 29, 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் புத்திகே காசர்கோடு முஹிம்மாத்தில் நடைபெறவுள்ள ஸெய்யித் தாஹிருல் அஹ்தல் தங்கள் உரூஸ் முபாரக் மற்றும் முஹிம்மாத் பட்டமளிப்பு விழா சம்மேளனத்தின் மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சாரத்திற்கு துவக்கம் குறிக்கப்பட்டது.

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் நேற்று முன்தினம் ஹமீதிய்யா மஜ்லிஸில் வைத்து
நடைபெற்ற இரண்டாம் கட்ட
பிரச்சார விழா நிகழ்வில்
தமிழக முஸ்லிம் ஜமாஅத் மாநில தலைவர்
மெளலானா மெளலவி
அல்ஹாஜ் S.அஸ்ஸெய்யித் அப்துர்ரஹ்மான்‌ பாகவி ஃபாழில் அஹ்ஸனி தங்கள் ஹஸ்ரத் அவர்கள் போஸ்டர் வெளியிட்டு விழாவை தொடங்கி வைத்தார்கள்.

தமிழக முஸ்லிம் ஜமாஅத் குமரி மாவட்ட தலைவர் ஹாபிழ் அகமது கபீர் அல்தாஃபி,
TMJ குமரி மாவட்ட செயலாளர்
மாலிக் முஹம்மது
TMJ பொருளாளர்
சித்தீக் குளச்சல்
மணவை இமாம் அன்சார் ரியாஜி, சுவாமியார்மடம் இமாம்
நௌஃபல் ஸகாஃபி,
கோட்டார் செய்யிதுனா இப்றாஹீம்
அரபிக் கல்லூரி முதல்வர்
மெளலானா மெளலவி
ஜவ்ஹர் ஷா அன்வரி ஃபாழில் அஹ்ஸனி
குமரி மாவட்ட சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பு தலைவர்
மெளலானா மெளலவி
M.சிராஜுதீன் அஹ்சனி,
மணவை நூருல் அமீன் ஹாஜியார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.