முஹிம்மாத் அஹ்தல் தங்கள் உரூஸ் முபாரக்கும் முஹிம்மாத்தின் பட்டமளிப்பு விழாவும் தமிழக பிரச்சார துவக்க விழா

முஹிம்மாத் அஹ்தல் தங்கள் உரூஸ் முபாரக்கும் முஹிம்மாத்தின் பட்டமளிப்பு விழாவும் தமிழக பிரச்சார துவக்க விழா

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#முஹிம்மாத்_அஹ்தல்_தங்கள்
உரூஸ்.
தமிழக பிரச்சார துவக்க விழா..

காசர்கோடு:

2026
ஜனவரி 28, 29, 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் புத்திகே காசர்கோடு முஹிம்மாத்தில் நடைபெறவுள்ள ஸெய்யித் தாஹிருல் அஹ்தல் தங்கள் உரூஸ் முபாரக் மற்றும் முஹிம்மாத் பட்டமளிப்பு விழா சம்மேளனத்தின் மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சாரத்திற்கு துவக்கம் குறிக்கப்பட்டது.

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் *திருவிதாங்கோட்டில்* நடைபெற்ற பிரச்சார துவக்க விழா நிகழ்வில் மார்த்தாண்டம் ஜமாஅத் முஹ்யித்தீன் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவரும்,
அல் ஜாமியுல் அன்வர் அரபிக் கல்லூரியின் பேராசிரியரும
மெளலானா மெளலவி S.ஷரஃபுத்தீன் அஹ்ஸனி அவர்கள் போஸ்டர் வெளியிட்டு விழாவை தொடங்கி வைத்தார்கள்.

மார்த்தாண்டம் ஜமாஅத் தலைமை இமாம் அஸ்ஹர் ஸகாபி,
தமிழக முஸ்லிம் ஜமாஅத் குமரி மாவட்ட தலைவர் ஹாபிழ் அகமது கபீர் அல்தாஃபி,
மணவை இமாம் அன்சார் ரியாஜி, சுவாமியார்மடம் இமாம்
நௌஃபல் ஸகாஃபி, குளச்சல்
ஹலீமத்துஸ் ஸஃதிய்யா பெண்கள் அரபிக் கல்லூரி முதல்வர் Sஷரஃபுதீன் அஸ்ஹரி, குமரி மாவட்ட சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பு தலைவர் மெளலானா மெளலவி M.சிராஜுதீன் அஹ்சனி, நௌஷாத் ஹிமமி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.