தெற்கு கேரள ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் கெ.பி.அபுபக்கர் ஹஸ்ரத் அவர்கள் மரணம்

தெற்கு கேரள ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் கெ.பி.அபுபக்கர் ஹஸ்ரத் அவர்கள் மரணம்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

தெற்கு கேரள ஜம்இய்யத்துல் உலமா சபையின் மதிப்பிற்குரிய தலைவர்
கே.பி. #அபூபக்கர்_ஹஸ்ரத்_அவர்கள்
இன்று அதிகாலை வேளையில் வஃபாத்தானார்கள்.

தெற்கு கேரளாவில் ஆயிரக்கணக்கான மார்க்க அறிஞர்களை சீடராக கொண்டிருந்த அவர் தலைமுறை தலைமுறையாக அறிவின் ஒளியைப் பரப்பி நம்மை விட்டுப் பிரிகிறார்.

எர்ணாகுளத்தில் பிறந்து கொல்லம் மாவட்டத்தில் குடியேறிய அவர்
முற்றிலும் சூஃபி வாழ்க்கையை நடத்தினார். அனைவரையும் புன்னகையுடனும் அன்புடனும் அணுகியவர்.

தெற்கு கேரள ஜம்இய்யத்துல் உலமா சபையின் வலுவான தலைவராக இருந்தபோதும் ஸமஸ்த உள்ளிட்ட பிற உலமா சபையுடனும் நட்புறவைப் பேணி வந்தார்.

மன்னானியா அரபிக் கல்லூரியின் தலைவராக நீண்ட காலமாக இருந்தார், மேலும் சமூகத்தில் அறிவின்
வெளிச்சத்தையும் வலிமையையும் பரப்பிட தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார்.

பெரும் அறிஞரான அவரது மறைவு சமூகத்திற்கும் அறிஞர்
மக்களுக்கும் பெரும் இழப்பாகும்.

அல்லாஹ் அவரது மறுமை வாழ்வை வெற்றியாக்குவானாக...