மர்கஸ் ஸகாஃபாத்துஸ் ஸுன்னியா கல்வி நிறுவனம் நாற்பது வருடம் சாதித்தது என்ன..?

மர்கஸ் ஸகாஃபாத்துஸ் ஸுன்னியா கல்வி நிறுவனம் நாற்பது வருடம் சாதித்தது என்ன..?

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#மர்கஸ்_நாற்பது_வருடம்_செய்ததுஎன்ன ?

அறிவுலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். கல்வி பெற்றவர்களுக்கே இன்று வாய்ப்புகள் பல உள்ளன. அனைவருக்கும் அடிப்படை கல்வியை மர்கஸ் உறுதி செய்கிறது. எல்லா தரப்பு மக்களுக்கும் கல்வி மற்றும் வாய்ப்புகளை வழங்குகிற ஈடிணையற்ற கல்வி மையம் மர்கஸ். மகத்தான இந்நிறுவனம் இன்று நாற்பது வருடங்களை நிறைவு செய்கிறது.

நூற்றாண்டுகளின் கனவுகளை மர்கஸ் நிறைவேற்றியுள்ளது. அனாதைகள். அகதிகள், சேரி குழந்தைகள் போன்றவர்களின் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான மையம்தான் மர்கஸ், கல்வி ஆழத்தில் கற்பதற்கும் உயர்ந்த பதவிகளில் வருவதற்கும் மர்கஸ் வசதிகள் செய்து கொடுக்கிறது.

பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உலமாக்களை மர்கஸ் உருவாக்கியுள்ளது. ஸக்காஃபிகள் உலகின் பல பகுதிகளில் சேவைகளில் மூழ்கியுள்ளனர். பாரம்பரிய மற்றும் சத்திய இஸ்லாமின் அழகியலை கல்வித் தொடர்பு சாதனங்களின் உதவியுடன் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர். இஸ்லாம் தவறாக சித்தரிக்கப்படும் இந்த காலத்தில் திறமைசாலிகளான உலமாக்கள் செய்யும் இந்த தஃவா பணி சிறிய விஷயமல்ல.

ஆயிரக்கணக்கான யத்தீம் குழந்தைகள் மர்கஸிலிருந்து கல்விகற்று வெளியே வந்துள்ளனர் எதிர்காலத்தைப் பற்றிய பயம் கொண்டிருந்த அவர்கள்
இன்று ஆயிரக்கணக்கான நபர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுகின்றனர். கனவுகளை விதைக்கின்றனர். அனாதைகளுக்கு பரிபூரண பாதுகாப்பை மர்கஸ் உறுதிப்படுத்துகிறது.

பெண்கல்வி விஷயத்தில் மர்கஸ் ஆரம்பம் முதலே பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி உயர்ந்த கல்வி கற்பதற்கான வழிகளை திறந்து வைத்துள்ளது.

அக்காதமிக் அங்கீகாரமுள்ள ஏராளமான பள்ளிகூடங்கள் மர்கஸிற்குக் கீழ் செயல்பட்டு வருகின்றன. பல மொழிகளில் திறமை பெற்றிடும் வகையிலான நவீன கல்வியை உயர்தர வசதிகளுடன் கற்றிட வகை செய்கிறது மர்கஸ்.

உயர்ந்த கல்வி துறைகளில் மர்கஸ் ஏராளமான நிறுவனங்களை நடத்துகிறது. சட்டக்கல்லூரி, கலைக்கல்லூரி, யுனானி மருத்துவக்கல்லூரி போன்றவைகள் மிக உயர்ந்த நிறுவனங்களாகும். ஒழுக்க விஷயத்திலும் மர்கஸ் முன்னிலை வகிக்கிறது.

இந்தியா முழுக்க பரந்து விரிந்து கிடக்கிற மகத்தான நிறுவன சங்கிலித்தொடர் மர்கஸ். 21 மாநிலங்களில் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள், பள்ளிகூடங்கள், தஃவா கல்லூரிகள், பெண் கல்வி மையங்கள் மர்கஸின் கீழ் செயல்படுகின்றன.

வேற்றுமையில் ஒற்றுமை என்கிற அழகிய தத்துவத்தை மர்கஸ் உயர்த்தி பிடிக்கிறது. எல்லா மத நம்பிக்கையாளர்களும் கல்வி பயிலுவதற்கு ஏற்ற இடமான மர்கஸ் நிறுவனங்கள். நாட்டின் எல்லா இடங்களிலும் இத்தத்துவத்தை எடுத்து சொல்லுகிறது.

கல்வி விஷயத்தில் முன்மாதிரியாக நிற்கும் அதே வேளையில் சமூக முன்னேற்றத்திலும் மர்கஸ் மகத்தானஅன்பளிப்புகள் வழங்கி வருகிறது. வீடு இல்லாதவர்களுக்கு வீடு, கிணறுகள், உணவு, ஆடை, பேரிடர் நிவாரண உதவிகள் போன்ற திட்டங்களை இந்தியா முழுக்க செயலாற்றி வருகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

மகத்தான சேவைகளின் உறைவிடமாகத் திகழும் மர்கஸ் 2018 ஜனவரி 5,6,7 தேதிகளில் ரூபி ஜூபிலி விழாவைக் (நாற்பதாவது ஆண்டு விழாவை) கொண்டாடியது. ஆன்மீகத் தலைவர்கள் சமய நம்பிக்கையாளர்களின் பரிபூரண ஆதரவுதான் இவ்வளவு மகத்தான வளர்ச்சியை மர்கஸ் எட்டக் காரணமாகும்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமுள்ள ஆயிரக் கணக்கானவர்கள் மர்கஸில் பயிலும் மாணவக் கண்மணிளை சொந்தம், வீட்டிலுள்ளவர்களைப் போன்று எண்ணி தாராளமான உதவிகள் வழங்கி பக்கபலமாக இருந்து வருகின்றனர். இவ்வேளையில் நாளேஜ் ஸிற்றி போன்ற முக்கியம் வாய்ந்த திட்டங்களையும் நிறைவேற்ற தயாராகியுள்ளது மர்கஸ், உங்களின் உதவிக்கரம் இனியும் மர்கஸிற்கு தேவைப்படுகிறது. அனைவருக்கும் அல்லாஹ் முழுமையான நன்மைகளை வழங்குவானாக!

#மர்கஸ்_நாளேஜ்_ஸிற்றி

இஸ்லாமிய புராதன நாகரீக மையங்களை உட்கொண்டு மர்கஸ் உருவாக்கிய நவீன கல்வி, ஆய்வு திட்டங்களின் குழுமம், நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் இக்கல்வி நகரம் மிக கம்பீரமாக உயர்ந்து வருகிறது.

#ஷரீஅத்_கல்லூரி

குர்ஆன், ஹதீஸ்,
மார்க்க சட்டம், அக்கீதா, ஃபிலாஸஃபி, அரபி இலக்கியம் போன்றவிஷயங்களில் இஸ்லாமிய அடிப்படை ஆரம்ப கல்வி முதல் பட்டப்படிப்பு வரை வழங்குகிற மையம். ஷரீஆ கல்வி பூர்த்தி செய்த 10,000 க்கும் மேற்பட்ட ஸக்காபிகள் உலகின் பல பகுதிகளில் சேவை செய்கின்றனர். கல்வி மற்றும் ஆன்மீக லயிப்பும் அனுபவமும் வழங்குகிற காம்பஸ். எகிப்து நாட்டின் அல்அஸ்ஹர் பல்கலை கழகத்திற்கு நிகரான அங்கீகாரம் கொண்ட மர்கஸ் குல்லிய்யா, இஸ்லாமிய படிப்பில் பிஜி வழங்குகிற தகஸ்ஸூஸ், சீனியர் தஃவா கல்லூரி போன்றவை ஷரீஆ கல்லூரியின் ஒரு பகுதியாக செயல்பட்டு வருகிறது.

#மர்கஸ்_சட்டக்கல்லூரி

ப்ரொஃபஷனல் தரத்துடன் உருவாக்கப்பட்ட மர்கஸ் சட்டக்கல்லூரி நாளேஜ் சிட்டியின் முதல் திட்டமாகும் . திறமைமிகு ஆசிரியர்கள், விசாலமான நூலகம் முழுமைய ஒழுக்க விதிமுறைகளுடன் செயல்பட்டு வரும் இக்கல்லூரியில் 300 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

#மர்கஸ்_ரைஹான்_வாலி

மர்கஸின் முதல் நிறுவனம் அனாதை எனும் மன அழுத்தத்திலிருந்து விடுதலை செய்து அறிவு, சகோதரத்துவம் நன்மையின் வழியில் முன்னேற வழி வகுத்து 2000 குழந்தைகளை கரம்பிடித்து உயர்த்தி கொண்டு வந்தது. ஒன்று முதல் கல்வியின் கடைசி அத்தியாயம் வரை இக்குழந்தைகளின் கல்விக்கு மர்கஸ் பொறுப்பு வகிக்கிறது.

#மர்கஸ்_ஆன்றி_கிராப்ட்ஸ்

கல்வியுடன் சம்பாதிக்கவும் கைத்தொழில் துறையில் வித்தியாசமான பல உற்பத்திகளை உருவாக்குவதற்கு மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. 12 வருடங்களில் 12,000 பேர் இந்நிறுவனத்திலிருந்து கல்வி பயின்றுள்ளனர்.

#மர்கஸ்_யூனானி_மருத்துவக்கல்லூரி

கேரளாவின் முதல் யூனானி மருத்துவக்கல்லூரி, நவீன வசதிகளுடன் மர்கஸ் நாளேஜ் ஸிற்றியின் மையப்பகுதியில் அமைந்துள்ள காம்பஸில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலுகின்றனர். மிக அனுபவம் வாய்ந்த திறமைசாலிகளான பேராசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர்.

#மர்கஸ்_காஷ்மீரி_ஹோம்

சகோதரத்துவம் மற்றும் சமாதானத்தின் மையமாகத்திகழும் மர்கஸ் செண்டரில் காஷ்மீரின் கொடுமை வாய்ந்த சூழ்நிலைகளிலிருந்து விடுபட்டு கல்வி பயின்று பட்டம் பெற்று 600 மாணவர்கள் வெளியே வந்துள்ளனர். பிறந்த ஊரில் சொந்தம் சகோதரர்களை கல்வி மற்றும் ஆன்மீகத்தின் பக்கம் கொண்டுவர இவர்கள் இன்று கடின முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

#மர்கஸ்_உர்து_ஷரீஆ_கல்லூரி

இந்தியாவின் 22 மாநிலங்களிலுள்ள மாணவர்கள் கல்வி பயிலும் நிறுவனம். உர்து, அரபி, மொழிகளில் இஸ்லாமியக்கல்வியில் எட்டு வருட கோர்ஸ், 1500 உலமாக்கள் பட்டம் பெற்றுள்ளனர். கேரளாவுக்குவெளியே முஸ்லீம்களை கல்வி மற்றும் சமூக முன்னேற்ற பாதையில் கொண்டு வருவதற்கு இங்கு பட்டம் பெற்ற மாணவர்கள் கடின முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

#மர்கஸ்_நூலகம்

ஆயிரம் வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட கல்வி நூல்களின் களஞ்சியம், இஸ்லாமிய மார்க்க சம்பந்தப்பட்ட பல தலைப்புகளிலான நூல்கள் வரிசை முறையில் வைக்கப்பட்டுள்ளன. கல்வியை தேடும் மாணவர்களுக்கு அவர்கள் மனதை கவரும் விதத்தில் கேரளாவிலேயே மிகப்பெரிய அரபி நூல்களின் கருவூலமாக இந்நூலகம் விளங்குகிறது.

#மர்கஸ்_கார்டன்_புனூர்

மதீனத்துன்னூர் ஆப் இஸ்லாமியக் லயன்ஸ்
கல்வி வளர்ச்சியின் பாரம்பரியமும் புதுமையும் ஒருங்கிணைந்த கல்விகூடம், ஒன்பது வருடத்தில் இஸ்லாமிய மார்க்க கல்வி மற்றும் அக்காதமிக் துறைகளில் பட்டப்படிப்பு ஆழமான சிந்தனைகளுடன் உயர்ந்த அக்காதமிக் குணமும் ஆன்மீக ஈடுபாடும் உள்ள நூராணிகளை உருவாக்குகிறது. ஒன்பது காம்பஸிகளில் 1000 மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். 200 நூராணிகள் கல்வி கற்று முடித்துள்ளனர்.

#மர்கஸ்_இன்றகிரேட்டட்_இஸ்லாமிக்
ஆண்ட் இன்ஜினியரிங் புரோகிராம்...

மர்கஸிற்கு கீழ் தஃவா படிப்புடன் என்ஜினியரிங் பாலிடெக்னிக், கீழக்கரை முஹம்மத் ஸதக் என்ஜினியரிங் கல்லூரியில் பல கோர்ஸ்களில்அறிஞர்களுடைய தலைமையில் நடைபெற்று வருகிறது. கல்விகற்க வாய்ப்பு. நல்ல திறமைசாலிகளான

#மர்கஸ்_ஹாதியா

அக்காதமிக் -மற்றும் ஆன்மீகத்தில் உயர்கல்வி ஊட்டி பெண்குழந்தைகளை உருவாக்குகின்ற நிறுவனம் கேரளாவில் மொத்தமாக 72 காம்பஸில் 4000 பெண்கள் பயிலுகின்றனர்.

10-ம் வகுப்பு முடித்த பின் சேர்க்கப்பவர்

#மர்கஸ்_க்ரீன்_வாலி_ஃபார்_கேள்ஸ்

ஐந்தாம் வகுப்பு முதல் தங்கும் வசதியுடன் பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்று கொடுக்கப்படும். கல்வியும் உணவும் இலவசம், தேவையான ஆன்மீக வழிகாட்டுதல்களுடன் கண்ணியமான முறையில் வாழ்ந்து வருகின்றனர்.

2000 மாணவிகள் படித்து முடித்துள்ளனர். இந்த காம்பஸிலுள்ள ஏராளமான மாணவர்களின் திருமணத்தையும் மர்கஸ் நடத்தி கொடுத்துள்ளது.

#மர்கஸ்_சுத்தமான_குடிநீர்_திட்டம்

நாட்டின் 22 மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் அன்றாடம் சுத்த குடிநீருக்காக கஷ்டப்படுகின்றவர்களுக்கு மர்கஸ் வழங்கும். 5731 தூய்மையான குடிநீர் திட்டங்கள்.
இதன் மூலம் ஐந்து லட்சம் நபர்கள் பயன் பெற்றுள்ளனர்.

#மர்கஸ்_பள்ளி_வாசல்கள்.

இந்தியா முழுவதிலும் 4000 பள்ளிவாசல்கள் ஒவ்வொரு பகுதிகளிலும், கல்வி, கலாச்சார, சமூக முன்னேற்றங்களை சக்திப்படுத்தும் மையங்கள் பெயர் அளவில் முஸ்லீமாக இருந்து இஸ்லாத்தைப்பற்றி ஒன்றும் தெரியாதவர்களான வட இந்தியாவின் லட்சக்கணக்கானவர்களுக்கு மார்க்க கல்வியும் நல்வாழ்வும் கற்று கொடுப்பதற்கு மர்கஸ் நடத்துகின்ற மஸ்ஜித்துகள் முக்கிய காரணமாக அமைகிறது.

#மர்கஸ்_வேலை_வாய்ப்பு_திட்டம்

வசதியான வாழ்க்கையை அடைவதற்கு குடும்பங்களுக்கு வழிவகுத்த மர்கஸின் திட்டம் U.A.E.யின் முக்கிய பெட்ரோலிய கம்பெனியான அட்னோக்கிலும் பலதரப்பட்ட பள்ளிவாசல்களில் இமாம் துறையிலும் மர்கஸ் மூலம் 4800 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

#மர்கஸ்_ஃபக்கா_இன்ஸிடிடியூட்
ஆஃப் ஹயர் இஸ்லாமிக் ஸ்டடிஸ் பெங்களூர்*

பத்தாம் வகுப்பிற்கு பிறகு மார்க்க கல்வியும் உலக கல்வியும் ஒரே நிலையில் முக்கியத்தும் அளிக்கப்பட்டு பெங்களூர் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது இக்கல்விகூடம். உயர்ந்த தரம் வாய்ந்த நூலகம் I.T. வசதிகள், ஆன்மீக மஜ்லிசுகள் போன்றவை காம்பஸை வேறுபடுத்திக்காட்டுகிறது.

#மர்கஸ்_பனாத்து

மர்கஸின் கல்வி கூடங்களில் படிக்க வருகின்ற மாணவிகளுக்கு தங்குவதற்கான பெண்கள் தங்கும் விடுதி. மார்க்க கல்விக்கு தனியான வகுப்புகள் மனநலம் சார்ந்த பயிற்சி வகுப்புகளும் உண்டு. இங்கு படிப்பை முடித்தவர் 3000 மாணவிகள்.

#மர்கஸ்_ஹிஃப்ளுல்_குர்ஆன்_கல்லூரி

குர்ஆன் மனனம் செய்வதற்காக மர்கள் உருவாக்கிய கோர்ஸ். உலக சுல்வி கற்கும் வேளையில் சூர்ஆனையும் மனனம் செய்கின்றனர். நான்கு காம்பஸ்களில் 500 மாணவர்கள் படிக்கின்றனர்.

#ஆர்ஃபன்_ஹோம்_கேர்

இந்தியாவின் இருபது மாநிலங்களிலுள்ள அனாதை குழந்தைகளை தத்து எடுத்து தாய்களின் அருகில் வசிக்க செய்து அவர்களுக்கு தேவையான கல்வியும் பாதுகாப்பும் வழங்கி பொருளாதார வசதிகள் வழங்கும் திட்டம். இந்தியா முழுக்க ஐய்யாயிரம் குழந்தைகள் இத்திட்டம் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.

#ஆன்மீக_சங்கமங்கள்

ஆன்மீக தலைவர்களின் நிழலில்தான் மர்கஸின் ஆரம்பமும் வளர்ச்சியும். எல்லா ஆங்கில மாதம் இரண்டாம் சனிக்கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு நடக்கிற அஹ்தலிய்யா திக்ர் மஜ்ஸில், நான்கு மாதத்திற்கு ஒரு முறை நடக்கிற தவ்ரத்துல் குர்ஆன் போன்வைகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கிறார்கள்.

#சஹ்ரத்துல்_குர்ஆன்

மர்கஸ் நர்சரி ஸ்கூல் நர்சரி படிப்புடன் திருக்குர்ஆன் ஓதுவதற்கும் மனனம் செய்வதற்கும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. கேரளாவின் 36 காம்பஸிகளில் 1092 மாணவர்களுக்கு உயர்ந்த தேர்ச்சி பெற்ற ஆசிரியைகள் பயிற்சி அளிக்கின்றனர்.

#மர்கஸ் I.T.I*

Technology மற்றும் தொழில் வாய்ப்புகள் உள்ள கல்விதுறையில் மிக உயர்ந்த வசதிகள் கொண்ட கேரள மற்றும் மத்திய அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்ற ஐம்பத்துக்கும் மேற்பட்ட குறுகிய நீண்ட கால கோர்ஸ்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. 750 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
5187- பேர் கல்வி கற்று வெளிவந்துள்ளனர்.

#ஸைத்தூன்_வாலி

ஐந்தாம் வகுப்பு முதல் +2 வரை மர்கஸ்பள்ளி கூடங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இயற்கைச் சுற்றுச்சூழலில் உருவாக்கப்பட்ட தங்கும் விடுதி 6500 முன்னாள் மாணவர்கள்.

#இஹ்றாம்

மர்கஸ் finishing School, தனிநபர் முன்னேற்றம் Spoken English, ஸைக்காலஜி, கவுன்சிலிங், ஃப்ரீ மாரிற்றல், கப்பிள்ஸ் பயிற்சி, மனநோய்களுக்கான பரிகாரம் மாணவர்களுக்கு கோடைகால வகுப்புகள், டி அடின்ஸா தெரப்பி, T.N.N.L.P. போன்ற எண்ணற்ற திட்டங்கள் இஹ்றாமுக்கு கீழ் செயல்பட்டு வருகின்றன. 14,000 நபர்கள் கல்வி முடித்து வெளியேற்றியுள்ளனர்.

#மர்கஸ்_கார்டன்_ஸ்கூல்_ஆஃப் மானேஜ்மெண்ட்

மானேஜ்மெண்ட் கல்வியில் மிக உயர்ந்த எதிர்காலம் எதிர்பார்ப்பவர்களுக்கான அக்காதமிக் மையம், பத்தாம் வகுப்பிற்கு பிறகு அனுமதி அளிக்கப்படுகிறது. மத அக்காடமிக் பட்டம் பெற்ற உலமாக்களுக்கு கீழில் தார்மீக ஒழுக்கமுள்ள காம்பஸ்,நூற்று கணக்கான மாணவர்கள் கல்வி கற்று வெளியேறியுள்ளனர்.

#மர்கஸ்_பெண்கள்_கல்லூரி (வயநாடு)

பெண்மணிகளுக்கு இலவசமாக உயர்ந்த கல்வியை வழங்குகிறது. மர்கஸ் வயநாடு காம்பஸ், பத்தாம் வகுப்பிற்கு பிறகு ஐந்தாண்டு கோர்ஸ், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களிலுள்ள ஏழை குடும்பங்களிலிருந்து 300 மாணவிகள் கல்வி பயிலுகின்றனர்.

#மர்கஸ்_ஆர்ட்ஸ்_ஸயன்ஸ்_கல்லூரி

காலிகட் பல்கலைகழகத்திற்கு கீழ்-ஆர்ட்ஸ் ஸயன்ஸ் விஷயங்களில் டிகிரி, பிஜி, கல்வி வழங்கும் ஸ்தாபனம், ஒழுக்கமும் அக்காதமிக் உயர்வும் கொண்டு முன்னிலை வகிக்கிறது.
இங்கிருந்து 700 பட்டதாரிகள் வெளிவந்துள்ளனர்.

#மர்கஸ்_ட்ரீம்_ஹோம்ஸ்

கஷ்டபடுபவர்களுக்கு மர்கஸின் தணலில் உருவாக்கப்படும் கனவு இல்லங்கள் ஐந்து லட்சம் செலவில் 100 வீடுகள் இதுவரை மர்கஸ் கட்டி கொடுத்துள்ளது.

#உணவு_ஆடை_கல்வி_உதவி_வழங்குதல்*

இந்தியா முழுவதிலும் 5,46,542 உணவு கிற்றுகள் 75,000 ஆடை கிற்றுகள் 37, 550 கல்வி உபகரணங்கள் போன்றவை ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மர்கஸ் வழங்கியுள்ளது. வட இந்தியாவில் ஏழை கிராமங்களில் சாதி மத வித்தியாசமில்லாமல் லட்ச கணக்கான மக்கள இதன் மூலம் பயன் பெற்றுள்ளனர்.

#மர்கஸ்_எய்டஸ்_ஸ்கூல்கள்

நான்கு மேல்நிலை பள்ளிகள் உட்பட ஒன்பது எய்டஸ் ஸ்வல்கள், ஸயனஸ், காமேழ்ஸ், ஹியூமானிட்டிஸ் விஷயங்களில் உயர்ந்த கல்வி, தரம்வாய்ந்த லாப், நூலகம், ஸ்மார்ட் வகுப்பறை போன்றவைக் கொண்டு தலைநிமிர்ந்து நிற்கிறது.

6000 மாணவர்கள் இந்த காம்பஸில் பயின்று வருகின்றனர்

#மர்கஸ்_பப்ளிக்_ஸ்கூல்கள்

L.K.G முதல் பத்தாம் வகுப்புவரை மர்கஸிற்கு கீழ் (செயல்படுகின்றன)

20க்கும் மேற்பட்ட பப்ளிக் ஸ்கூல்கள் செயல்படுகின்றன. டிஜிட்டல் வகுப்பறை, விளையாட்டு மைதானம், கலைத்திறமைகளை வெளிப்படுத்தும் அரங்கங்கள், போன்ற வசதி வாய்ப்புகளுள்ள காம்பஸ்கள், மாநில தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் மர்கஸ் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.
1200 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

#மர்கஸ்_சர்வதேச_ஸ்தாபனங்கள்

இந்தியாவுக்கு வெளியேயும் கால்பதித்துள்ள நிறுவனம் மர்கஸ். சவுதி அரேபியாவில் மஹ்துல் உலூம் இன்டர் நேஷ்னல் ஸ்கூளும் U.A.E. யில் துபை மர்கஸும் கல்வி மையங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த இரு நிறுவனங்களில்
2000 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

#மர்கஸ்_ஸ்பெஷல்_ஸ்கூல்

உடல் மற்றும் மனரீதியான குறைபாடுகள் உள்ளவர்களுக்கு கல்வியும் பயிற்சியும் கல்வி உதவியும்வழங்கி வருகிற நிறுவனங்கள்

புனூரில் ஹெல்த் கெயர் சொசைட்டி, திருச்சூர் தலகோட்டுகரயில் அருட்கொடை ஸ்பெஷல் ஸ்கூல், போன்றவை மர்கஸிற்குக் கீழ் செயல்பட்டு வரும் ஸ்தாபனங்களாகும். 100 மாணவர்கள் இப்போது கல்வி கற்கின்றனர்.

#மர்கஸ்_மஸ்ரா

விவசாயக்கலாச்சாரத்தின் புதிய தொடக்கம். கேரளாவின் பாரம்பரிய விவசாய கால்நடை பரிபாலன ரீதிகளை நவீன கால வசதிகளின் உதவியுடன் செய்து வருகிறது. இப்போது ஆறு விவசாய திட்டங்களை செயலாற்றி வருகிறது.

#தைய்பா_கார்டன்

சமூக வளர்ச்சியில் பின்தங்கி நிற்கும் மேற்கு வங்காள முஸ்லீம்களை கல்வி, மற்றும் சமூக மறுமலர்ச்சி பாதையில் கொண்டுவரும் விதத்தில் மர்கஸ் துவங்கிய நிறுவனம் ஒருங்கிணைந்த கல்வித்துறையில் 100 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

#மர்கஸ்_யூனானி_மருத்துவக்கல்லூரிகள்*

கேரளாவின் காரந்தூரிலும் புதுப்பாடியிலுமாக திறமை வாய்ந்த மருத்துவர்களின் தலைமையில் மர்கஸ் இரண்டு மருத்துவமனைகளை நடத்தி வருகிறது. ஹிஜாமாபோன்ற யூனானி சிகிட்சை முறைகளுக்கு இவை புகழ்பெற்றவை. நபி மருத்துவ முறைகளை தூய்மையுடன் கேரளாவில் இம்மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றது.

ஆக்கம்...
M.மௌலவி. #கமாலுத்தீன்_ஸகாஃபி, சென்னை
Mob: 9600903222...

மர்கஸ் 2018_ஆண்டு
ஜனவரி 5,6,7 தேதிகளில் ரூபி ஜூபிலி (நாற்பதாவது ஆண்டு விழாவை) முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறு படைப்பு....