ஒரு ஆலிமின் கடின உழைப்பு
ஆலிமின்_கடின_உழைப்பு..
கோழிக்கோடு என்.ஐ.டியில்
வெப்ப அறிவியலில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக ஸ்காலர்ஷிப்புடன்
அட்மிஷன் கிடைக்கப் பெற்ற
C. M.#ஸாபிர்
ஸகாஃபிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
மனித சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும், நலனுக்கும் உதவும் வகையில் ஆய்வுகளை மேற்கொள்ள இறைவன் அவருக்கு அருள்
புரிவானாக என்று பிரார்த்திக்கிறோம்.
என்.ஐ.டி-யில் எரிசக்தி பொறியியலில் முதல் மதிப்பெண்களுடன் தனது எம்.டெக் படிப்பை பூர்த்தி செய்த இவர் 2018_ஆம் ஆண்டு மர்கஸில் முதல் தரத்துடன் #ஸகாஃபி பட்டம் பெற்றார்.
கடின உழைப்பும் மன உறுதியும் யாரையும் உச்சத்திற்கு கொண்டு செல்லும் அதற்கு மகத்தான உதாரணமாக திகழ்பவர் ஸகாஃபி. அதனால்தான் NITயில் பி.டெக் படிப்புடன் அருகிலுள்ள அல்மகரில் மத படிப்பையும் கற்றுக் கொண்டு இரண்டு படிப்பிலும் எந்தத் தடையுமின்றி அதிக மதிப்பெண்களைப் பெற முடிந்தது.
தனது படிப்புடன், SSF_ன் பல்வேறு நிலைகளிலும் மற்றும் Markaz_ன் மாணவர் அமைப்பான Ihyaussunna _ன் செயலாளர் பதவியிலும்
செயலாற்றிய ஸாபிர் ஸகாஃபி,
தற்போது அல் மகர் காம்பஸின் முதர்ரிஸாகவும், SSF இன் மாநில நிர்வாக உறுப்பினராகவும் பணியாற்றுகிறார். இரு கல்வியையும் ஒரே மாதிரியாக கொண்டு செல்வதில் அவரது தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் தன்னம்பிக்கையை மாணவர்கள் முன்மாதிரியாக எடுத்து பின்பற்ற வேண்டும்.
இந்தியன் கிராண்ட் முஃப்தி
A. P. #அபூபக்கர்_பாகவி_ஹஸ்ரத்..
தமிழில்:M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி