நண்பரின் புதிய முயற்சி.
நண்பரின் புதிய முயற்சி
இவர் என் நண்பர் பீர் ஹிஸ்னி.
திருவை அல் ஜாமிஉல் அன்வர் அரபிக் கல்லூரியில் ஓதி பிறகு ஏர்வாடி ஹிஸ்னுல் உலூம் அரபிக் கல்லூரியில் ஹிஸ்னி பட்டம் பெற்றார்.
தற்போது தக்கலை பீர் முஹம்மதிய்யா ஜும்ஆ மஸ்ஜிதில் துனண இமாமாக பணியாற்றி வருகிறார்.
சமீபத்தில் இவர்
hisni media எனும் you tube channel_லை துவங்கி தமிழகத்தின் தலைசிறந்த சுன்னத் வல் ஜமாஅத் உலமா பெருமக்களின் பயான் நிகழ்ச்சிகளை பதிவு செய்து வருகின்றார்.
மகத்தான முயற்சி.
நிறைய நேரம் இதற்காகவே செலவழிக்கிறார்.
நல்ல கருத்துக்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தை குறிக்கோளாகக் கொண்டு இப்பணிகளை செய்கிறார்.
சமீபத்தில் திருவை அஞ்சுவன்னம் இமாம் S.ஷறஃபுத்தீன் அஸ்ஹரி அவர்களின் முன்மாதிரி முஸ்லிம் எனும் தலைப்பில் ஒரு தொடர் சொற்பொழிவை பதிவு செய்திருந்தார்.
ஏராளமான மக்கள் அதைக் கண்டு பயனடைந்து வருகின்றனர்.
இப்போது முன்மாதிரி முஸ்லிம், ஈமானிய்ய புரட்சி, நபிகளாரின் மீது பேரன்பு கொள்வோம்..என்ற தலைப்பின் கீழ் உலமாக்களை வைத்து பயான் நிகழ்ச்சிகளை யூ டியூபில் பதிவு செய்து வருகின்றார்.
சமீபத்தில் என்னிடமும் வாரத்தில் மூன்று நாட்கள் பயான் செய்யுமாறு அன்புடன் வேண்டினார்.
அவரை நம்மிடம் வந்து வீடியோ பதிவு செய்து, பிறகு அழகிய முறையில் எடிட்டிங் செய்து, கண்கவரும் விதத்தில் விளம்பர பேனர் அமைத்து யூ டியூபில் பதிவு செய்து வருகின்றார்.
பல ஆலிம்களிடமும் இதுபோன்று பயான் செய்ய சொல்லி அவர்கள் இருக்கும் இடத்துக்கேச் சென்று இம்முயற்சியை மேற்கொள்கின்றார்.
பொறுமையாக அனைத்து காரியங்களையும் தனி நபராக சிறப்பாக செய்து வருகின்றார்.
நீங்கள் அனைவரும் அவரது யூ டியூப் சேனலில் வெளிவரும் இஸ்லாமிய நிகழ்ச்சிகளை தவறாமல் பாருங்கள்.
Hisni media எனும் அவரது யூ டியூப் சேனலை இதுவரை Subscribe செய்யாதவர் செய்யுங்கள்.
அல்லாஹ் நம் அனைவரது எண்ணங்களையும், செயல்களையும் கபூல் செய்வானாக!
நம் நேரங்களை தீனுக்காக செலவழிக்கும் பாக்கியத்தை வழங்கி அருள்புரிவானாக!
✍️ M.சிராஜுத்தீன் அஹ்ஸனி.