Sirajudheen Ahsani
எழுத்தாளர்

இது யார் என்று உங்களுக்கு தெரியுமா?

SSF_ன் தேசிய செயலாளரும் கேரளாவின் தலைசிறந்த இஸ்லாமிய பேச்சாளருமான டாக்டர்.ஃபாரூத் நயீமி உஸ்தாத்.

அவர் கடந்த ஒரு மாத காலமாக SSF_ன் பல்வேறு மாநில சபைகளுடன் தொடர்பு கொண்டு வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலுள்ள சுன்னத் வல் ஜமாஅத் மாணவர் இயக்கத்தின் எழுச்சிக்காக அயராது உழைத்து கொண்டிருக்கிறார்.

இங்கே பதியப்பட்டுள்ள சொற்பொழிவு வீடியோ பஞ்சாபிலுள்ள பாசிகலாவில் பேசியதாகும்.

கேரள சுன்னத் வல் ஜமாஅத் அறிஞர்களின் இஸ்லாமிய பிரச்சாரத் துறையில் இது ஒரு சிறந்த உதாரணம்.

எங்கள் சுன்னத் வல் ஜமாஅத் அறிஞர்கள், பேச்சாளர்கள், சமூக ஆர்வலர்கள், தாயிகள் கேரளாவின் எல்லைகளுக்கு அப்பாலும் தஃவாவில் ஈடுபடுகின்றனர்.

மதிப்புக்குரிய உலமாக்களின் பெரும் முயற்சியால் கேரளாவின் எண்ணற்ற ஸ்தாபனங்களின் மூலம் பட்டம் பெற்ற உலமாக்கள் இந்தியா முழுவதும் அதற்கு அப்பாலும் தீன் மணத்தை பரப்பச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்திய முஸ்லிம்களின் அரசியல் வலுவூட்டுக்கு இரவு பகல் போராட்டங்களும், தெரு முனை கூட்டங்களும் மட்டும் போதாது.

ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வி புரட்சி தேவை.

கண்ணியமிகு A.P.அபூபக்கர் பாகவி ஹழ்ரத் அவர்களின் விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் உருவாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஸ்தாபனங்கள் மூலமாக பட்டம் பெற்ற ஆயிரக்கணக்கான ஆலிம் பெருமக்கள் கேரளாவிலிருந்து வட இந்தியாவுக்கு தங்களது வாழ்க்கையை இடமாற்றம் செய்துள்ளனர்.

இஸ்லாமிய உம்மத்திற்க்காக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்துள்ளார்கள்.

இன்று SSF_ன் கீழ் ஜம்மு_காஷ்மீர், அசாம்,மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட், ஹரியானா, மற்றும் ராஜஸ்தான் உட்பட இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் நூற்றுக்கணக்கான கல்வி நிறுவனங்கள் உள்ளன.
ஒவ்வொரு கிராமத்திலும் கேரளா மாடல் நிறுவன கட்டமைப்புகள் பலப்படுத்தப்படுகின்றன.

சாதாரண ஒரு அரபிக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்று இன்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்தி, உருது, ஆங்கிலம் என பல மொழிகளில் மக்களுக்கு தீனை எடுத்து சொல்லும் மகத்தான புரட்சியை சத்தமில்லாமல் செய்துகொண்டிருக்கிறார் பாரூக் நயீமி உஸ்தாத் அவர்கள்.

சமீபத்தில் துபாய் அரசாங்கம் சார்பாக நடைபெற்ற ரமளான் சிறப்பு பயான் நிகழ்ச்சியில் சிறப்புரை யாற்றினார்கள்.

அல்லாஹ் உஸ்தாத் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும், நிம்மதியான வாழ்க்கையையும், நிறைவான ஆரோக்கியத்தையும் வழங்கி அருள்புரிவானாக!.

இன்ஷா அல்லாஹ் நேரம் கிடைக்கும் போது உஸ்தாதைப் பற்றி விரிவாக எழுதுகிறேன்.

தகவல்:
M.சிராஜுத்தீன்அஹ்ஸனி.