Sirajudheen Ahsani
எழுத்தாளர்

சர்வதேச மீலாது விழா

திருநபியின் புகழும் மகத்துவமும் மழை போன்று பெய்த கோழிகோட்டினுடைய வரலாற்று பூமியில் ஜனலட்சங்களின்
மனோகர மஹா சங்கமம்.

கடந்த 2010 மார்ச் 11 வியாழக்கிழமையன்று கோழிகோடு தங்க நகரில்
நடந்த சர்வதேச மீலாது விழா திருநபிக்கெதிராக
செயல்படுபவர்களுக்கு ஒரு எதிர்ப்பலையாக அமைந்தது. அன்று விழா மைதானத்தை லட்சியமாக்கி திரு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமை அன்பு வைக்கும் உம்மத்துக்களின் சங்கமக் கடல் அலைப்போன்று திரண்டு வந்தது.

Jiddah islamic foundation Director டாக்டர் உமர் அப்துல்லா
அல் காமிலி சர்வதேச மீலாது விழாவில் துவக்க உரை நடத்தினார்.

திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமின் நன்னெறிகளை உலகில் பிரச்சாரம் செய்ய முஸ்லிம்கள் தயாராக வேண்டுமென்று அவர் அறிவுரை கூறினார்.

திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமிடம்
உள்ள அன்புதான் உலக மதக்காரர்களுடனும் மக்களை ஒன்று படுத்தும் எல்லா சகோதரத்துவ முறையில் வாழ வேண்டுமென்றுதான் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோழர்களுக்கு அறிவுரை நடத்தியுள்ளார்கள்.

திருநபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லமினுடைய தார்மீக பொருப்பு கருணையில் உருவானதாகும்.
அக்கிரமம் கொண்டு மற்றவர்களை சந்திப்பவன் திருநபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வல்லமோடு அன்பு இல்லாதவனாகும்.

தீவிரவாதிகளும், பயங்கரவாதிகளும் சுயநலத்திற்காக நிலை கொள்கிறார்களென்று அவர் சுட்டிக் காட்டினார்.
அவர்களுக்கு மதத்தை பிரச்சாரம் செய்ய உரிமை கிடையாது.
நவீன நாடுகளுக்கு மத்தியில் இன்று நடக்கிற உறவுகளுக்கு இஸ்லாம்தான் முன்மாதிரி என்று அவர் கூறினார்.

தாஜுல் உலமா ஸெய்யிது அப்துர்ரஹ்மான் அல்புகாரி தலைமை வகித்தார்கள்.
ஷைகு ஸக்கரிய்யா உமர் மக்கி, (சிரியா) ஷைகு உமர் இப்ராஹிம் (சிரியா) போன்றவர்களின் திருநபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லமின் புகழ் பாட்டுக்கள் மக்களின் மனங்களை கவர்ந்தது.

ஸெய்யிது அப்துல்லா அஹ்மது அல் பைத்தி (யமன்) தகவல் சமர்ப்பணம் நடத்தினார்.
அகில இந்திய ஜம்இய்யத்துல் உலமா செயலாளர் காந்தபுரம் ஏ.பி.அபூபக்கர் பாகவி ஹஸ்ரத் மாதிஹுர்ரசூல் சொற்பொழிவு நடத்தினார்.
ஸெய்யிது ஷைகு கலீஃப் முஹம்மது ஸ்வூதி (துபாய்) ஹாஜி அப்துல் கொஹ்லி (கொல்கத்தா)
ஹாஜி நூறுல் ஹுதா லய்க் (கொல்கத்தா)
மன்சூர் ஹாஜி (சென்னை) முனவ்விர் ஹுஸைன் (மஹாராஷ்டிரா)
லஹருத்தீன் அல் ஜஸரி (லட்சத்தீவு) போன்றவர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

தகவல் -
மெளலவி
M.Sirajudheen அஹ்ஸனி