ரமளான் வினா விடை பாகம்.. 15
ரமளான் வினா விடை

ரமளான் வினா விடை பாகம்.. 15

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#புனித_ரமளான்
வினா_விடை
பாகம்_15

71: ரமளான் மாதம் வந்தும் அதை கண்ணியம் செய்யாதவரின் நிலை..?

பெருமானார் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் வானவர் ஜிப்ரயீல் (அலை) வருகை தந்தார். வந்தவர்,
“யார் ரமலான் மாதத்தை அடைந்தும் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட வில்லையோ அவர் நரகம் நுழைவார்; அல்லாஹ்வின் அருளை விட்டும் அவர் தூரமாகிவிடட்டும்” எனக் கூறிவிட்டு, ”ஆமீன்” கூறுங்கள் என்றார்.
எனவே, நான் முதல் முறை “ஆமீன்” கூறினேன் என்றார்கள்...

72 : நோன்பாளிக்கு வேண்டி மறுமையில் நோன்பு பரிந்துரை செய்யுமா...?

ஆம்.. பரிந்துரை செய்யும்..

عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الصِّيَامُ وَالْقُرْآنُ يَشْفَعَانِ لِلْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ يَقُولُ الصِّيَامُ أَيْ رَبِّ مَنَعْتُهُ الطَّعَامَ وَالشَّهَوَاتِ بِالنَّهَارِ فَشَفِّعْنِي فِيهِ وَيَقُولُ الْقُرْآنُ مَنَعْتُهُ النَّوْمَ بِاللَّيْلِ فَشَفِّعْنِي فِيهِ قَالَ فَيُشَفَّعَانِ احمد

73 : இஃப்தாரை விரைவுப் படுத்துவதின் மகத்துவம்...?

என் அடியார்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர் (சூரியன் மறைந்தவுடன்) விரைந்து நோன்பு துறப்பவர்களாவர்
என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- திர்மிதீ, அஹ்மத்.

74 : ரமளான் மாதத்தில் இரவில் தராவீஹ் தொழுதால் கிடைக்கும் பிரதிபலன்...?

عن أبي هريرة أن النبي صلى الله عليه وسلم قال من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه- نسائي

75 : தராவீஹ் தொழுகை எத்தனை ரக்அத்...?

இருபது ரக்அத்...
*****************************

இன்ஷா அல்லாஹ்
தொடரும்...

வெளியீடு
M.P.H.
திருவிதாங்கோடு...
குமரி மாவட்டம்.....