ரமளான் வினா விடை பாகம்.. 14
ரமளான் வினா விடை

ரமளான் வினா விடை பாகம்.. 14

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#புனித_ரமளான்
வினா_விடை
பாகம்_14

66 : நோன்பு மாதத்தில் உம்ராச் செய்வதால் கிடைக்கும் பிரதிபலன்..?

ரமளான் மாதத்தில் உமரா செய்வதுஹஜ் செய்வதற்குச் சமமாகும்.
ஆகவே நோன்பில் உம்ரா செய்து கொள் என ஒரு அன்சாரிப் பெண்ணுக்கு நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறினார்கள்.

67 : ரமளான் மாதம் வந்துவிட்டால் என்னவெல்லாம் நிகழும்..?

ரமளான் மாதம் வந்து விட்டால் சுவனத்தின் கதவுகள் திறக்கப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும், ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

68 : ரமளான் நோன்பு கடமையாகும் யாருக்கு..?

ரமளான் மாதத்தின் நோன்பு முஸ்லிமான புத்தியுள்ள, வயது வந்த ஆண் பெண் ஒவ்வொருவருக்கும் கடமையாகும்.

69 : நாம் நோன்பு பிடித்திருக்கும் நிலையில் நம்மிடம் யாராவது சண்டைக்கு வந்தால் என்ன செய்ய வேண்டும்...?

யாராவது சண்டையிட்டால் அல்லது ஏசினால் "நிச்சயமாக நான் நோன்பாளி, நான் நோன்பாளி" என்று கூறிக்கொள்ளட்டும்.

70 : ரமளான் மாதம் லைலத்துல் கத்ர் இரவில் நின்று வணங்கினால் என்ன நன்மை கிடைக்கும்...?

லைலத்துல் கத்ர் இரவில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்ப்பவராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
*****************************

இன்ஷா அல்லாஹ்
தொடரும்...

வெளியீடு
M.P.H.
திருவிதாங்கோடு...
குமரி மாவட்டம்.....