புனித உம்ரா பயணம் மேற்கொள்ளும் சிராஜுத்தீன் அஹ்ஸனி
அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்புள்ள
உறவுகளே,
இனிய ஆலிம்
நண்பர்களே,
என் பிரியமான
சொந்தங்களே!!!
அல்லாஹ்வின் மாபெரும் கருணையினாலும்,
அளப்பரிய உதவியாலும் இன்ஷா அல்லாஹ்
வரும் சனிக்கிழமை இரவு நானும் என் மனைவியும், எனது உறவுகள் சிலரும் உம்ரா
பயணம் செய்ய நாடியுள்ளோம் எனும் செய்தி தாங்கள் அறிவீர்கள்..
எங்களது பயணம் எந்தவித தடங்கல், சிக்கல், நெருக்கடிகள்
இல்லாமல் இருக்கவும்,
பூரண ஆரோக்கியத்துடன் உம்ராவின்
எல்லா அமல்களையும்
சுறுசுறுப்பாக மனநிறைவோடு நிர்வகித்திடவும்,
மதீனா பூந்தோப்பில் அந்தி உறங்கும் முத்து நபியின் ஹழ்ரத்தில் சென்று மாநபியின் அன்பைப் பெற்றிடவும்
எங்களது உம்ராவின் அமல்கள் ஏற்றுக்கொள்ளப்படவும்
உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் துஆவை ஆதரவு வைக்கிறேன்..
இன்ஷா அல்லாஹ்
நானும் அங்கே
இபாதத்திற்க்காக
செல்லும் எல்லா இடங்களிலும் உங்களுக்காக மனதார
துஆச் செய்வேன்..
வல்லோன் அல்லாஹ் நம் அனைவருக்கும் வெகு சீக்கிரத்தில் ஹஜ், உம்ரா, ஸியாரத் செய்யும் பாக்கியத்தை அளித்தருள்வானாக.
ஆமீன் யா றப்பல் ஆலமீன்.🤲🤲`
அன்புடன்.
M.சிராஜுத்தீன் அஹ்ஸனி.
இயக்குனர்: மைமூன் பப்ளிஷிங் ஹவுஸ்
திருவிதாங்கோடு.
குமரி மாவட்டம்.
Phone: 7598769505.