நம் பிள்ளைகளுக்கு நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுப்போம்...
நல்ல பழக்கங்களை
நாம் நம் அன்பு
பிள்ளைகளுக்கு கற்றுக்
கொடுப்போம்
அன்பான அல்லாஹ்வின்
நல்லடியார்களே!
கொஞ்ச காலம் நம்முடன் வாழ்ந்து
நிரந்தரமான மறுமை வாழ்விர்க்காக
இவ்வுலகை விட்டும்
இடம் பெயர்ந்த
நம் அன்பான கப்ராளிகள்
அவர்களை பற்றி
நாம் சில போது
நமக்குள் தன்னம் தனியாக
நினைவு கூறுவதுண்டு..
மற்று சிலபோது கூட்டாகவும்
நினைவு கூறுவதுண்டு
எனது வாப்பா
எனது உம்மா
எனது உஸ்தாத்
எனது.................
எனது.............
அவர்கள் அப்படி கூறினார்கள்
அவர்கள் இப்படி செய்தார்கள்
என்று வெறுமனே கூறாமல்
அவர்களை பற்றி கூறும் போது குறைந்த பட்சம் ஒரு தடவையாவது அவர்களுக்காக நாம் துஆ செய்ய வேண்டும்
ஒரு #ஆணைப் பற்றி நினைவு கூறும் போது
*اللهم اغفر له وارحمه واعف عنه*
என்றும்
ஒரு #பெண்ணைப் பற்றி நினைவு கூறுவதாயின்
*اللهم اغفر لها وارحمها واعف عنها*
என்றும்
இரு #நபரை பற்றி
*اللهم اغفر لهما وارحمهما واعف عنهما*
என்றும்
#பலரை பற்றியாயின்
*اللهم اغفر لهم وارحمهم واعف عنهم*
என்றும் நாம் துஆ செய்தால்
அது
நம் அன்பான கப்ராளிகளுக்கு
நாம் வழங்கும் மாபெரும் அன்பளிப்பாகும்
இப்படி நாம் சொல்வதை கேட்டு
நம் பிள்ளைகளும் வளர்ந்தால்
நாளை நாம் கப்ரில் கிடக்கும்போது அவர்கள் நம்மை நினைவு கூறும் வேளையில் அவர்களும்
இப்படி துஆ செய்வார்கள்
நம் கப்ராளிகள் உயிருடன்
நம்முடன் வாழ்ந்தால்
நாம் அவர்களுக்கு
நிறைய அன்பளிப்பு
கொடுப்போம் இல்லையா
அப்போது
அதை பெற்று அவர்களும்
மகிழ்ச்சி பெறுவார்கள் அல்லவா
அந்த மகிழ்ச்சி நம் கப்ராளிகள்
கப்ரிலும் பெறவேண்டும் அல்லாஹ் துணை புரிவானாக
ஆமீன் யா றப்பல் ஆலமீன்..
H.சாகுல்_ஹமீது_பைஸி.
தலைமை இமாம்
தக்கலை அஞ்சு வன்னம் பீர்முஹம்மது ஜும்ஆ பள்ளிவாசல்..
துணைத் தலைவர்
குமரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை
தகவல்.
M.சிராஜுத்தீன் அஹ்ஸனி.