நாட்டார் வரலாறு சிறப்பு ஆய்வரங்கம்

நாட்டார் வரலாறு சிறப்பு ஆய்வரங்கம்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

குமரி மாவட்ட வட்டார வரலாற்று ஆய்வியல் பேரவை மற்றும் UNTOLD
ஹிஸ்டரி கலெக்டிவ்
அமைப்பும் இணைந்து
நாட்டார் வரலாறு எனும் தலைப்பில் நேற்றைய தினம் கோட்டாறு மாலிக் தீனார் பள்ளி அருகே அமைந்துள்ள தியாகி அப்துர்ரஹீம் சேவு சாஹிப் அரங்கில் வைத்து ஒருநாள் ஆய்வியல் பயிலரங்கு
மிகவும் சிறப்பான முறையில்
நடத்தினார்கள்..

வட்டார வரலாற்று ஆய்வியல் பேரவையின் தலைவர்
இலக்கிய சுடர் அமது கபீர் அவர்கள் தலைமையுரையாற்றி நிகழ்ச்சி நெறியாளராக செயல்பட்டார்..

நாட்டார் வழக்காறுகளும் வரலாறும் எனும் தலைப்புல் முனைவர்
ஆ.#தனஞ்செயன் அவர்களும்
வாய்மொழி / நாட்டார் வரலாறு தரவுகள் சேகரித்தலும் முறையியலும் எனும் தலைப்பில் முனைவர்
ச.#கார்மேகம் அவர்களும்
பயிலரங்க
வகுப்புகள் எடுத்தனர்.

இரு வகுப்புகளும் நாட்டார் வரலாற்று ஆய்வியல் மாணவர்களுக்கு
பயன் தரும் வகுப்புகளாக அமைந்தது.

வரலாறு எழுதும் முறையில் வாய்வழி மரபின் முக்கியத்துவம், அவசியம்,
அதன் சாத்தியக்கூறுகளும்,
அதனை ஆவணப்படுத்தும் வழிமுறைகளும் இந்தப் பயிலரங்கின் மையமாக இருந்தன.

வரலாறு அறியாத சமுதாயம் வரலாறு படைக்க முடியாது.
சில தீயவர்களின் சூழ்ச்சியால் பல்வேறு நெருக்கடிகள்
இடர்கள், துன்பங்களுக்கு மத்தியில் வாழ்க்கையை
நகர்த்தும் இக்கால சூழ்நிலையில் நாம் ஒவ்வொருவரும் அவரவர் வரலாறுகளை தேடிப் படிப்பதும், தெரிந்து கொள்வதும்
பாதுகாப்பதும் மிகவும் அவசியமான ஒன்றாகும்..

குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து உள்ளூர் வரலாற்று ஆய்வாளர்கள் கலந்துகொண்டதுடன், கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களின் வரலாற்றாசிரியர்களும் ஆய்வு மாணவர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனைவரும் பம்பரமாக சுழன்று கொண்டே ஒவ்வொரு விஷயங்களையும் மிகவும் சிறப்பாக செய்தனர்..

நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டதைப் போன்று குறித்த நேரத்தில் நிகழ்வை துவங்கி சரியான நேரத்தில் முடித்தும் வைத்தனர்..

மேலும் சிறப்பு என்னவெனில்
நேற்றையை நாட்டார் வரலாறு
ஆய்வியல் பயிலரங்கில் வைத்து
குமரி மாவட்டத்தின் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஜமாஅத்களின்
வரலாற்றை சுமார் 20 வருடங்களுக்கு முன்னால் கடினமான களப்பணியில் தனி நபராக தொகுத்து #பெட்டகம் என்ற அரிய பொக்கிஷத்தை தந்த நமது முற்றம் இதழின் ஆசிரியரும் கவிஞருமான இலக்கியச்சுடர் கோட்டாறு
#அபூஹாஷிமா அவர்களை பாராட்டி
கவுரவிக்கும் வகையில் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தனர்..

இந்த மகத்தான நிகழ்வுக்கு ஏராளமான பேர் பல்வேறு உதவிகள் சேவைகள் செய்துள்ளனர்..

அனைவருக்கும் அன்பும் வாழ்த்தும் நன்றியும்..

இந்த நிகழ்வின் வெற்றிக்கு உழைத்த
சகோதரர் சாளை பஷீர்,
குளச்சல் அஸ்கர் அலி
மிடாலம் அன்சார் ஆகியோரை
நினைவுக் கூற கடமைப்பட்டுள்ளேன்..