அருள்பொழியும் ஸலவாத்தை அகம் குளிர ஓதுவோம்
#அருள்_பொழியும்
#ஸலவாத்தை
#அகம்_குளிர_ஓதுவோம்---
#நபிகள் பெருமானார் கூறினார்கள்.
"வியாழன் வெள்ளி இரவுகளில்
என் மீது அதிகமாக
ஸலவாத்துச் சொல்லுங்கள். உங்களுடைய லைவாத்துகள் எனக்கு எடுத்துக் காட்டப்படுகின்றன.
நூல்: முஃஜமுல் அவ்ஸத், தப்ரானி.
#நபிகள் பெருமானார் கூறினார்கள்..
பூமியில் சுற்றி நடக்கிற மலக்குகள் அல்லாஹ்வுக்கு உண்டு. அவர்கள் எனது சமுதாயத்தினர் எனக்கு சொல்லும் ஸலாம்களை என்னிடம் அறிவிக்கின்றனர்.
நூல்: தஃப்ஸீர் குர்துபி
#நபிகள் பெருமானார் கூறினார்கள்.
என்மீது ஒருவர் ஒரு லைவாத்து சொன்னால் அவர் மீது அல்லாஹ்
ஸலவாத்துகள் சொல்கின்றான்
அவரது பத்து தவறுகளை
அழிகின்றான்.
அவருக்கு அந்தஸ்துகளை உயர்த்துகின்றான்.
நூல்: நஸஈ
#அன்னை_ஆயிஷா சித்தீகா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்..
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்து சொல்வது மூலமாக உங்களுடைய மஜ்லிஸ்களை அழகு படுத்துங்கள்..
#நபிகள்_பெருமானார் கூறினார்கள்..
யார் புத்தகத்தில் என் மீது ஸலவாத்தை எழுதுகின்றாரோ அந்த புத்தகத்தில் எனது பெயர் இருக்கும் காலமெல்லாம் மலக்குகள் அவருக்காக பாவமன்னிப்பு கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.
நூல்: முஃஜமுல் அவ்ஸத்,தப்ரானி
டாக்டர் எம்.#கமாலுதீன்_ஸகாஃபி அல்ஹிகமி
சேர்மன்: ஸலவாத் பவுண்டேசன்
சென்னை
தொடர்புக்கு 9600903222