புரட்சி_நாயகன்.
சுப்ரபாதம் தினசரி செய்தித்தாளின் முன்னாள் ஆசிரியர்
முபாரக்_ராவுத்தரின் முகநூல் பதிவு...
ஒரு காலத்தில் தொப்பியும், தலைப்பாகையும் அணிந்த முஸ்லிம் அறிஞர்களை மரவெட்டிகளாக,தண்ணீர் சுமப்பவர்களாக மட்டுமே சமூகம் பார்த்திருந்தது.இன்றும் இதை எண்ணங்கள் மாற்றமின்றி தொடரும் மஹல்லாக்கள் பல இருக்கத்தான் செய்கிறது.
2500₹ ரூபாய் சம்பளத்திற்கு மதரசாவில் வேலை செய்கிற ஒரு அறிஞரின் சோகத்தை கேட்டு சமீபத்தில் அழுதேன்.இந்த ஊரடங்கு காலம் அவரது வாழ்க்கையை மாற்றியது.இவ்வேளையில் தான் வேலையுடன் சிறிய வருமானம் என்று சிந்திக்க துவங்கி இப்போது ஒரு சிறிய கடை நடத்தி வருகிறார்.
முன் காலத்தில் ஒரு வீட்டில் இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் நன்றாக படிப்பவனே டாக்டராக, வழக்கறிஞராக,பொறியாளராக, ஆசிரியராக உருவாக்கி எடுப்பார்கள்.ஆனால் படிப்பு தலையில் ஏறாதவனே நேராக கொண்டு போய் மதரசாவில் சேர்ப்பார்கள். இப்படிப்பட்ட ஏராளமான நபர்கள் பட்டம் பெற்று மதரசாவிலிருந்து வெளியேறியதை நாம் பார்த்துள்ளோம்...
நான் சொல்ல வருவது காந்தபுரம் A.P. அபூபக்கர் பாகவி என்ற ஒரு மார்க்க அறிஞர் ஒரு சமூகத்தை புரட்சிகரமாக மாற்றியதை குறித்தாகும்.
இன்று அவரை சுற்றியிருப்பவர்கள் வெறும் தலைப்பாகை அணிந்த ஒரு சங்கம் மரவெட்டிகளும், தண்ணீர் சுமப்பவர்களுமான அறிஞர் கூட்டமல்ல இது.
மாறாக எல்லா அர்த்தத்திலும் கல்வியும், அதிகாரமும் பெற்ற சமூகமாகும்......
தன்னுடைய சொந்த நிறுவனத்தில் படித்து, வளர்ந்து, பட்டம் பெற்ற ஒரு சங்கம் வழக்கறிஞர் களுக்கு மத்தியில் கம்பீரமாக சிரித்து மகிழக்கூடிய ஒரு இஸ்லாமிய தலைமையை உஸ்தாதை தவிர உங்களுக்கு இந்திய நாட்டில் பார்ப்பது கடினம்.....
காந்தபுரம் உஸ்தாத் சென்ற வழியில், நீங்கள் பல்வேறு மனகசப்புகளும், சில வெறுப்புகளும் இருப்பது போன்று உங்களுக்கு தோன்றும்.
ஆனால் அவரது புரட்சிகர நடவடிக்கையை நீங்கள் ஒருபோதும் மறுக்க முடியாது.
இது தலைமுறைகளை ஒரு முழுமையான மரபுவழி மத வட்டத்திற்குள் வாழவும், படிக்கவும், சமூகத்தின் முன் தங்கள் சொந்த கால்களில் நிற்கவும் உதவியது என்றால் அது மிகையாகாது.
அவர் செய்த அந்த புரட்சியை நீங்கள் செய்ய விரும்பினால், அது உங்களுக்கு இன்னும் இரண்டு நூற்றாண்டுகள் தேவைப்படும்.
இந்த சிறிய மாநிலமான கேரளாவிலிருந்து அவர் உலக முஸ்லீம் அறிவார்ந்த சமூகத்தில் ஒரு திட்டவட்டமான இடத்தைப் பெற்றுள்ளார்.
அவர் தன்னை பலப்படுத்தியது மட்டுமல்லாமல், அவரது சிஷ்யர்களையும் இன்னும் பலப்படுத்தினார்.
இன்று, இந்தியா முழுவதும், அந்த சீடர்கள் அவர் செதுக்கிய பாதையில் புதிய புரட்சிகளை எழுதுகிறார்கள்.
ஒரு காலத்தில் அரசியல் கட்சிகளால் கண்டுகொள்ளாமல் இருந்த, அறிவார்ந்த சமூகத்தை (உலமா) அரசியல் தலைவர்கள் தேடும் மற்றும் பார்க்கக் காத்திருக்கும் ஒரு கட்டத்திற்கு கொண்டு வருவதில் காந்தபுரத்தின் பங்கு தனித்துவமானது.
புதிய ஸகாஃபி சட்ட பட்டதாரிகளுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள். இந்த சமூகத்திற்காக குரல் கொடுக்கும் ஒரு நல்ல தலைவர்களாக உங்கள் ஒவ்வொருவரையும் இறைவன் ஆக்கி அருள்பாலிப்பானாக!.
*தகவல் :M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி.*