ஈடு இணையில்லா சமூக சேவகர்
................யார்_இந்த
A.P.அபூபக்கர்_பாகவி_ஹஸ்ரத்
ஈடு_இணையில்லா_சமூக_சேவகர்..
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத் குடும்பங்களுக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடைதான் மவ்லானா A.P.அபூபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்கள்.
தமிழகத்தின் வேலூர் பாக்கியாத் ஸாலிஹாத்தில் பட்டம் பெற்று
தான் படித்த கல்லூரியைப் போன்ற ஒன்றை நிறுவி மக்களுக்கு இஸ்லாமிய ஞானத்தை எத்தி வைக்க வேண்டும் என்ற மகத்தான கனவுடன் புறப்பட்டவர்.
சுப்ஹானால்லாஹ்...
இன்று உலக இஸ்லாமிய அழைப்பாளர்களில் ஒருவராக திகழ்வதோடு இந்தியாவின் கிராண்ட் முஃப்தியாக வளர்ந்து மாபெரும் அறிஞராக அறியப்படுகிறார்.
தனது ஓய்வில்லா வாழ்க்கை முழுவதையும் இஸ்லாமிய மார்க்கத்திற்க்காகவும், சமூகத்திற்காகவும் மாற்றி வைத்திருக்கிறார்கள்.
கமருல் உலமா A.P.உஸ்தாதின் மகத்தான கரங்களால் அஹ்லுஸ்ஸுன்னா இயக்கம் நிறைவேற்றி கொண்டிருக்கும் அளப்பறிய சேவைகள்.👇👇👇
🔳🔳🔳🔳🔳🔳.......****......^^^^....^^^^^
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களிலும், உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய சமய, கல்வி நிறுவனங்கள், தொழிற்கல்வி நிறுவனங்களுக்கு தலைமை தாங்கி அழகிய முறையில் நடத்தி வருகின்றனர்.
பல்லாயிரக்கணக்கான அறிஞர்கள் மற்றும் லட்சக்கணக்கான மாணவர்கள் உஸ்தாதின் அறிவொளி பெற்று வருகின்றனர்.
கிராண்ட் மசூதி உட்பட இந்தியாவில் ஆயிரக்கணக்கான மசூதிகளை கட்டிக் கொடுத்து சமூகத்திற்கு சமர்ப்பணம் செய்துள்ளார்கள்.
ஆயிரமாயிரம் சுத்த தண்ணீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கான அனாதைகளை பராமரித்து, கல்வி வழங்குவதோடு பாதுகாத்து வருகின்றனர்.
மர்கஸ் அறிவு நகர பல்கலைக்கழகம்.. (MARKAZ KNOWLEDGE CITY)
என்னும் மகத்தான இஸ்லாமிய பல்கலை கழகத்தை சமூகத்திற்கு சமர்ப்பணம் செய்ய இருக்கிறார்கள்....
● மருத்துவமனைகள்.
மற்றும் வணிக ஸ்தாபனங்கள்.
●ஆன்மீக சந்திப்புகள்.
●ஆறுதல் உதவி மையங்கள்.
●ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டுமானம்.
●ஆம்புலன்ஸ் சேவை.
● ஏழை எளிய மக்களுக்கு உணவு பொதிகள் விநியோகம்.
● ஆடை விநியோகம்.
● கிராமப்புற வளர்ச்சி.
● விவசாய திட்டங்கள்.
● திருமண நிதி உதவி.
● வேலைவாய்ப்பு திட்டம்.
●மாற்றுத்திறனாளிக்குப் பயிற்சி.
● கழிப்பறைகள் அமைத்தல்.
● சுற்றுச்சூழல் பாதுகாப்பு.
● சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு & சுத்தம் செய்தல்..
● தொழில் உபகரணங்கள் விநியோகம்.
● தேவைப்படுபவர்களுக்கு
காது கேட்கும் கருவிகளின் விநியோகம்.
● சிறப்பு பள்ளி கட்டுமானம்.
● தையல் இயந்திரம் வழங்குதல்.
● இதய அறுவை சிகிச்சை உதவி.
●கனவு இல்லம் ஏழை எளிய அடித்தட்டு மக்களுக்கு வீடு கட்டி கொடுப்பது.
● மருத்துவ முகாம்கள்.
● கண்ணாடி விநியோகம்.
●கல்வி உபகரணங்களின் விநியோகம்.
● விதவைகளுக்கு உதவி.
● முதியோருக்கு உதவி.
● நீர் தொட்டிகள் மற்றும் மோட்டார்கள் வழங்குதல்.
● மதரஸாவின் கட்டுமானம்.
● மீன்பிடி படகுகளின் விநியோகம்.
● சக்கர நாற்காலி விநியோகம்.
● பேரிடர் உதவிகள்.
● விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி.
●தெருவோர ஏழைகளுக்கு உணவு வழங்குதல்..
● அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு வழங்குதல்.
● ஆதரவற்ற ஏழை குழந்தைகளை பராமரித்தல்.
இதுப்போன்ற எண்ணிலடங்கா செயல்பாடுகளை உஸ்தாதின் தலைமையிலுள்ளவர்கள் செய்து வருகின்றனர்.😍😍
குறைகூறுவதற்கும், கேலி செய்வதற்கும்,
பரிகாசம் செய்வதற்கும் நிறைய பேர் இருக்கலாம்.
ஆனால் அதற்கு முன் உஸ்தாத் அவர்கள் செய்து வரும் சேவைகளை குறித்து சற்று நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
இந்த மகத்தான அறிஞரின் தலைமையின் கீழ் இயங்கும் மர்கஸ் ஸக்காஃபத்திஸ் ஸுன்னிய்யாவும் மற்றும் உஸ்தாத் தலைமை தாங்கும் அஹ்லுஸ்ஸுன் சுன்னத் வல் ஜமாஅத் இயக்கங்களும் ஏராளமான இஸ்லாமிய சமூக சேவைகளை செய்து வருகின்றனர்.
இனியும் தளராமல்,சளைக்காமல் தொடர்ந்து இறையருளால் செய்வார்கள்.
இந்த மகத்தான பணிகளுக்காக ஓய்வின்றி கடுமையாக உழைத்து கொண்டிருக்கும் உஸ்தாத் அவர்களுக்கு ஆரோக்கியத்துடன் கூடிய நீண்ட ஆயுளையும், நிறைவான பறக்கத்தையும் வழங்கி அருள்புரிவானாக.
#தகவல்.....
✍️.M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி.
____________________________________