Sirajudheen Ahsani
எழுத்தாளர்

தேசிய_கலை
இலக்கியப்_போட்டி....
நிச்சயம் காஷ்மீர் ஒரு நாள் கேரளாவை வெல்லும்...

எஸ்.எஸ்.எஃப் தேசிய கலை இலக்கிய விழாவில் காஷ்மீர் கோப்பையை வெல்லும் போது இவரை நினைக்காமல் இருக்க முடியாது..
அவர் பெயர் ஷவ்கத் புகாரி நயீமி

கரடுமுரடான இமயமலைப் பள்ளத்தாக்குகளில் தனியாக நடந்து சென்று அவர் அடைந்த அறிவுசார் முன்னேற்றத்திற்கு இந்த வெற்றி நேரடிச் சான்று.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, காஷ்மீரின் யாசீன் பாடசாலைகளில் நடந்த கலை இலக்கியப் போட்டியில் நடுவராக பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சியின் இறுதியில் அவர் கூறிய ஒரு வார்த்தை இன்று யதார்த்த மாகிவிட்டது..

அவர் கூறினார்..
தேசிய அளவில் கலை இலக்கிய போட்டி நடத்தினால் நிச்சயம் காஷ்மீர் கேரளாவை வென்று முதல் இடம் பிடிக்கும்

இதனை பார்வையாளர்கள் தக்பீர் முழக்கத்துடன் ஏற்றுக்கொண்டனர்.

நடுவராக இருந்த போது காஷ்மீர் மக்களின் திறமையைக் கண்டு நிச்சயம் இம்மக்கள் வெற்றி பெறுவார்கள் என்று அவர் புரிந்து கொண்ட காரணத்தினால் தான் இப்படியொரு வார்த்தையை வெளிப்படுத்தினார்...

ஷவ்கத் புகாரி நயீமி தலைமையிலான குழு காஷ்மீரில் ஏற்படுத்திய கல்விப் புரட்சியை நாம் ஒவ்வொருவரும் நேரடியாக அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்..

துயரங்களும், கஷ்டங்களும், வேதனைகளும் நிறைந்த அம்மக்கள் மீது நம் கவனத்தை செலுத்த வேண்டும்..

இன்னும் நிறைய முன்னேறும் வலிமை அந்த அணிக்கு உண்டு....

நாம் அனைவரும் அவர்களுடன் ஒன்றாக இருந்தால்...

தமிழில்:M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி..
7598769505