Sirajudheen Ahsani
எழுத்தாளர்

......#உலகின்_மிகப்பெரிய_அதிசயம்.....

இந்த இளைஞர் பெயர் #அப்துல்_கரீம்..
எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்..
சின்ன வயதிலேயே குர்ஆன் முழுவதையும் மனப்பாடம் செய்தவர்.
துரதிர்ஷ்டவசமாக சிறு பிராயத்தில் ஒரு விபத்தில் சிக்கி பேசும் திறனை இழந்து ஊமையாகி விட்டார்..

அந்த விபத்திற்கு பின்னர் அவரால் எதுவும் தெளிவாக பேச இயலாது.
ஊமைகள் பேசுவது போல் தான் அவரால் பேச முடியும்..

திடீரென ஒரு நாள் குர்ஆன் ஓத ஆரம்பித்தார்.
அதிலும் குறிப்பாக

: ۞ لَّيْسَ ٱلْبِرَّ أَن تُوَلُّواْ وُجُوهَكُمْ قِبَلَ ٱلْمَشْرِقِ وَٱلْمَغْرِبِ وَلَٰكِنَّ ٱلْبِرَّ مَنْ ءَامَنَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ وَٱلْمَلَٰٓئِكَةِ وَٱلْكِتَٰبِ وَٱلنَّبِيِّۦنَ وَءَاتَى ٱلْمَالَ عَلَىٰ حُبِّهِۦ ذَوِى ٱلْقُرْبَىٰ وَٱلْيَتَٰمَىٰ وَٱلْمَسَٰكِينَ وَٱبْنَ ٱلسَّبِيلِ وَٱلسَّآئِلِينَ وَفِى ٱلرِّقَابِ وَأَقَامَ ٱلصَّلَوٰةَ وَءَاتَى ٱلزَّكَوٰةَ وَٱلْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَٰهَدُواْ ۖ وَٱلصَّٰبِرِينَ فِى ٱلْبَأْسَآءِ وَٱلضَّرَّآءِ وَحِينَ ٱلْبَأْسِ ۗ أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ صَدَقُواْ ۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلْمُتَّقُونَ

இந்த வசனத்தை
(Surah baqara 177) திரும்ப திரும்ப
ஓத துவங்கினார்.
மட்டுமல்லாமல் குர்ஆனினுடைய
மொத்த பகுதியையும் அவரால்
ஓத இயன்றது..

இது எப்படி இவரால் சாத்தியமானது
என்பதைப் பார்க்கும் போது ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை காண இயலும்..

அதாவது ஒரு நாள் இந்த இளைஞர் தூங்கிக் கொண்டிருந்தார்.
தூக்க வேளையில் ஒரு கனவைக் கண்டார்.
அந்த கனவில் நீளமான உடலமைப்பைக் கொண்ட, தாடி வைத்த, நல்ல ஒரு அழகான தோற்றமுடைய
நபரை பார்த்தார்.
அந்த நபர் இவரிடம் கூறினார்.
இளைஞனே! நீ கவலைக் கொள்ளாதே.
அல்லாஹ்வின் விதியை நீ பொருந்திக் கொள்.
நீ குர்ஆனை திறந்து இந்த வசனத்தை : ۞

(لَّيْسَ ٱلْبِرَّ أَن تُوَلُّواْ وُجُوهَكُمْ قِبَلَ ٱلْمَشْرِقِ وَٱلْمَغْرِبِ وَلَٰكِنَّ ٱلْبِرَّ مَنْ ءَامَنَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ وَٱلْمَلَٰٓئِكَةِ وَٱلْكِتَٰبِ وَٱلنَّبِيِّۦنَ وَءَاتَى ٱلْمَالَ عَلَىٰ حُبِّهِۦ ذَوِى ٱلْقُرْبَىٰ وَٱلْيَتَٰمَىٰ وَٱلْمَسَٰكِينَ وَٱبْنَ ٱلسَّبِيلِ وَٱلسَّآئِلِينَ وَفِى ٱلرِّقَابِ وَأَقَامَ ٱلصَّلَوٰةَ وَءَاتَى ٱلزَّكَوٰةَ وَٱلْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَٰهَدُواْ ۖ وَٱلصَّٰبِرِينَ فِى ٱلْبَأْسَآءِ وَٱلضَّرَّآءِ وَحِينَ ٱلْبَأْسِ ۗ أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ صَدَقُواْ ۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلْمُتَّقُونَ)

ஓது என்றார்..
அவரும் அந்த வசனத்தை ஓதினார்.
இந்த கனவுக்கு பின்னர் அவரால் குர்ஆனின் எந்த வசனத்தையும் ஓதுவதற்கு முடியும்..
ஆனால் அதே நேரம் குர்ஆன் அல்லாத எதையும் அவரால் மொழியவோ,
உச்சரிக்கவோ இயலாது..
சுப்ஹானல்லாஹ்....
இது அல்லாஹ் அந்த இளைஞனுக்கு வழங்கிய பேராற்றல் அல்லாது வேறு என்ன சொல்ல.. ?
எகிப்தின் மிகப் பிரபலமான பத்திரிகையாளர் அம்ருல் லெய்ஸி அவர்கள் இந்த இளைஞனிடம் பேட்டி காணும் போது இந்த விஷயத்தை (கனவு) கூறுவதை பார்க்க முடியும்....

இதுபோன்ற சம்பவங்கள் நம் முன்னோர்களான இமாம் பெருமக்களின் வாழ்க்கையிலும் காண இயலும்...

மிகப்பெரிய காரியாக (சிறந்த முறையில் குர்ஆன் ஓதுபவர்)திகழ்ந்தவர் காலூன் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள்..
இவர்களுக்கு காது கேட்காது.
ஆனால் அதேசமயம்
குர்ஆனுடைய வசனங்களை யார் ஓதினாலும் அவர்களுக்கு தெளிவாக கேட்குமாம்.
சுப்ஹானல்லாஹ்...

ﻗﺎﻟﻮﻥ ﺭاﻭﻱ اﻹﻣﺎﻡ ﻧﺎﻓﻊ اﻟﻤﺪﻧﻲ

ﻭﻛﺎﻥ ﻗﺎﻟﻮﻥ ﺃﺻﻢ ﻻ ﻳﺴﻤﻊ اﻟﺒﻮﻕ ﻓﺈﺫا ﻗﺮﺃ ﻋﻠﻴﻪ ﻗﺎﺭﺉ ﻓﺈﻧﻪ ﻳﺴﻤﻌﻪ ﻭﺗﻮﻓﻲ ﻗﺎﻟﻮﻥ ﺳﻨﺔ ﻋﺸﺮﻳﻦ ﻭﻣﺎﺋﺘﻴﻦ ﻋﻠﻰ اﻷﺻﺢ ﺭﺣﻤﻪ اﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ

هداية القارى

அல்லாஹ் நம் அனைவரையும் குர்ஆனை நேசிக்கும் கூட்டத்தில் ஆக்கியருள்வானாக.. ஆமீன்.✍🏼

தமிழில்:
✍️M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி.