அனைவர் மீதும் அன்பு காட்டுவோம்..
........#அன்பை_விதைப்போம்......
கர்நாடக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்..
மகந்தேஷ் பானப்ப கவுடர்...✍️🥰
மதியம் மூன்று மணி கழிந்தது..
ஒரு குழந்தை வெறிச்சோடிய தெருவில் தனியாக நடந்து செல்கிறது.
இதைப் பார்த்த இன்ஸ்பெக்டர் குழந்தையை அருகில் அழைத்து எங்கே செல்கிறாய் என்று கேட்கிறார்.
குழந்தை பயப்படுவதை உணர்ந்த மகந்தேஷ் அவனிடம் மிக அன்பாக கேட்கிறார்.
அவன் சொல்கிறான்..எனக்கு தந்தை கிடையாது..அம்மா வீடுகளில் வேலைக்கு செல்கிறார்கள்..
நண்பனின் வீட்டுக்கு சென்று படிக்க அம்மா அனுப்பினார் என்று சொல்லி சமூக அறிவியல் பாட புத்தகத்தை காட்டுகிறான்...
உணர்ச்சி வசப்பட்ட போலீஸ் அதிகாரி அந்த குழந்தையிடம் நீ என்னவாக ஆகவேண்டுமென விரும்புகிறாய் என கேட்க..
நான் ஒரு போலீஸ்காரனாக இருக்க விரும்புகிறேன் என்று கூறுகிறது.
இதைக் கேட்ட இன்ஸ்பெக்டர் மகந்தேஷுக்கு தனது குழந்தைப் பருவம் நினைவுக்கு வருகிறது.
அந்த குழந்தையை அன்பாக அணைத்துக்கொண்டு தனது பணப்பையில் இருந்து 100 ரூபாயை எடுத்து சாக்லேட் வாங்கச் சொல்கிறார்.
அவர் தலையிலிருந்து தொப்பியை எடுத்து அவன் தலையில் வைத்து அவனுக்கு பெருமை சேர்க்கிறார்..
மகந்தேஷ் பானப்ப கவுடர் எழுதுகிறார்...
சிலர் ஒரு சமூகத்திற்கு எதிராக பகைமையை உருவாக்குகிறார்கள்.
அவர்களை இப்படி சமூக மத்தியில் பிளவுப்படுத்த வேண்டாம்...
ஒரு சமூகத்தை தவறானவர்கள் என்று சொல்வது சரியல்ல.
நமது நாட்டை ஆங்கிலேயர்களிடமிருந்து விடுவிக்க இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து போராடினர்...
நாம் மேலும் முன்னேறிச் செல்வோம்.. நாட்டுக்குத் தேவை வெறுப்புப் பிரச்சாரம் அல்ல.
அனைவரும் வீட்டில் இருந்து லாக்டவுனை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தகவல் பகிர்வு.M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி