Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#இந்த_ஆலிமுக்கு_ஒரு_பழக்கம்_உண்டு.

✍️✍️இப்ராஹிம் டிஎன் புரம்*

*ஒரு திரைப்பட நட்சத்திரத்திடம் ஒரு ஆலிமுக்கு என்ன வேலை என்று கேட்காதீர்கள்.*

இந்த ஆலிமுக்கு ஒரு பழக்கம் உண்டு..

*எந்த ஜமாஅத்தில் பணிபுரிந்து வந்தாலும் அனைத்து நபர்களோடும் நட்பை ஏற்படுத்துவார்...அதில் அங்கே ஜாதி, மதத்திற்கு இடமில்லை..*
அவர்களின் சுக துக்கங்களை கேட்டறிந்து கொள்ளுவார்..*

*கிட்டத்தட்ட ஒரு #குஞ்ஞாயின் முஸ்லியாரின் பாணி.*
(கேரளாவில் பல்வேறு மக்களுடன் சகோதரத்துவத்துடன் பழகிய ஒரு பெரியவர்)

இந்நிலையில் ஒரு மாலை வேளை நாங்கள் நடிகர் #இன்னசென்ட் (கேரளாவின் பிரபல நகைச்சுவை நடிகர்) வீட்டை அடைந்தோம்.

அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்ததும், அவரை பார்க்க விருப்பம் தெரிவித்தோம்...

பார்வையாளர்கள் தடை செய்யப்பட்டிருந்தாலும் ஆலிம் என்று அறிந்தவுடன் அவர் கீழே இறங்கி எங்களை பார்க்க வந்தார்.

கோவிட் காலம் என்பதால் வீட்டுக்கு உள்ளே அழைக்க முடியவில்லை
என்று வருத்தப்பட்டார்..

பிறகு நாட்டு நிலவரம், அரசியல் மற்றும் சமூக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

#பிரார்த்தனை செய் என்று அவரது பாணியில் ஒரு வேண்டுகோள் விடுத்தார்..

பிறகு நாங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றோம்...

*தகவல்:M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி.*