உங்களில் யாராவது மரணித்துவிட்டால் அவரது நற்செயல்களை பற்றி பேசுங்கள்:
நபி மொழி !!!!
நண்பர் Mohamed Abdul Kader ன் வாப்பா எனக்கு அண்ணண் உறவுமுறை.
இரு தினங்களுக்கு முன் நம்மை விட்டு பிரிந்து சென்ற மர்ஹூம் RPM.பீர்மும்மது அவர்களை பற்றி அவர் கல்விக்கு கொடுத்த முக்கியத்துவம்,தனது பிள்ளைகளைகளையும்,பிள்ளைகளின் நண்பர்களையும்,ஒரு நண்பனை போன்று பாவிக்கும் இனிய குணம்,தேவையுள்ளவர்களுக்கு உதவும் உன்னத பண்பு இப்படி அவரிடம் நிறைந்து காணப்பட்ட நற்பண்புகளை அண்ணண் #Jalaludheen_Colachel அவர்கள் எளிய நடையில் வரைந்த ஒரு பதிவு ஒரு வாட்சப் குழுமத்தில் காணமுடிந்தது,,,
அதை நண்பர்களின் பார்வைக்காய் பகிருகிறேன்!!!
யா அல்லாஹ் அந்த நல்ல மனிதரின் பாவங்களை மன்னித்து அவருக்கு சொர்க்கப் பூஞ்சோலையை பரிசளிப்பாயாக!!!
..........#முஜீப்_ரஹ்மான்_குளச்சல்.........
********************************************
*"#நண்பனின்_வாப்பா"*
*மர்ஹூம் R. P. M. #பீர்_முகம்மது_சாகிப்.*
*இலப்பவிளை பள்ளி கூடத்தின் 10 ஆம் வகுப்பு (1987) மாணவர்களான எங்களுக்கு மறக்க முடியாத மனிதர்.*
*பள்ளிக்கூடத்திற்கு வெளியே எங்களை காத்திருந்த உத்தியோகம் பார்க்காத ஆசிரியர் அவர்.*
*பரீட்சை எழுதி முடித்து, நண்பர்கள் எல்லாம் ஒன்றாக குழுமி எவ்வாறு எழுதினோம் என்று அவரிடம் சொல்லி காட்ட வேண்டி இருந்தது எங்களுக்கு.*
*தனது மகனை பயிற்றுவிக்கும் அதே ஆர்வத்துடன் எல்லா நண்பர்களுக்கும் அவர் பயிற்சி தந்தார்.*
*ஒவ்வொருவரின் முன்னேற்றத்திலும் ஆர்வம் காட்டினார்.*
*காலங்கள் கழிந்து பெரியவர்கள் ஆனோம்...*
*தனிப்பட்ட முறையில் எவ்வளவோ நல்ல அனுபவங்கள்..*
*வெளி நாட்டில் இருந்து முதல் முறை விடுமுறைக்கு சென்ற போது நண்பர்களுடன் திருவனந்தபுரத்தில் உள்ள அவர்கள் வீட்டுக்கு சென்று இருந்தோம்.*
*சிறப்பான முறையில் விருந்து தந்து எங்களை அனுப்பி வைத்தார்.*
*பின்னொரு நாளில் தம்பதியராக சென்று இருந்தேன்..*
*அது ஒரு மாலை நேரம், இருந்தபோதும் கட்டாய படுத்தி சாப்பாடு செய்து அருகிலேயே இருந்து பரிமாறி சாப்பிட வைத்து, எங்களது சின்ன மகனுக்கு வாஞ்சையுடன் பொறுமையாக உணவு ஊட்டி விட்ட அழகு எப்போதும் என் கண் முன்னால் வரும்.*
*தனது மகனுடைய நண்பர்களை இவ்வளவு விமரிசையாக உபசரிப்பு செய்யும் மற்றொரு தந்தையை நான் பார்த்ததே இல்லை.*
*தனது மகன் காதர் திருச்சியில் கல்லூரியில் படித்து வந்த நேரம்....*
*ஜமாலியன்ஸ் என்று அழைக்கப்படும் அவனது நண்பர்கள் எல்லாம் விடுமுறை நாட்களில் திருவனந்தபுரம் வருவார்கள்...*
*பொருளாதார நெருக்கடி இருந்த அந்த நாட்களில் கூட இந்த உபசரிப்பில் எந்த குறையும் வைக்கவில்லை.*
*உண்டு, உறங்கி, ஊரெல்லாம் கண்டு களித்து அவர்கள் சந்தோஷத்துடன் ஊருக்கு திரும்பி செல்வார்கள்.*
*இன்று ஐம்பது வயதை நெருங்கி, வாழ்க்கையில் நல்ல நிலையில் இருக்கும் அவர்களின் கல்லூரி கால நினைவுகளில் காதருடைய வாப்பா வுக்கு நிச்சயம் ஒரு இடம் இருக்கும்.*
*அலட்சியமாக கலைந்து கிடக்கும் கேசத்துடன், மடித்து கட்டிய வேட்டியுடன் எந்த வித பாசாங்கும் இல்லாமல் நடந்து சென்ற எளிய மனிதர்.*
*உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் உதவ நினைக்கும் மகனுடைய எண்ணங்களுக்கு மறுப்பேதும் சொல்லாமல் இருப்பது மட்டுமல்ல, உவப்போடு உற்சாக படுத்தும் உயர்ந்த மனிதர்.*
*அவருடைய ஞாபகங்கள் மாய்ந்து போன கடைசி நாட்களில் ஒரு நாள் வீடியோ கால் பேசினேன்..*
*என்னை காட்டி, இவனை தெரிகிறதா என்று கேட்ட போது கொஞ்சம் கூட தாமதிக்காமல் எனது பெயரை சொல்லி அழைத்தபோது நெகிழ்ந்து போனேன்.*
*எவ்வளவோ சொல்லலாம்...*
*அவரது மரணம் குறித்து அறிந்த போது, நமது குழுமத்தில் இல்லாத வெளிநாட்டு நண்பன் ஒருவன் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான்.. அதில் ஒரு வாசகம் "அவர் எனக்கு கல்வி வழி காட்டியாக இருந்தார்".*
*உங்களில் யாராவது மரணித்து விட்டால் அவர்களது நன்மைகளை பற்றி பேசுங்கள் என்று அர்த்தம் வரும் நபிமொழி ஒன்று உண்டு.*
*கொஞ்சமாவது சொல்ல ணும்னு தோணுச்சு.*
*கருணையாளன் அல்லாஹ் நண்பனுடைய வாப்பாவை பொருந்தி கொள்வானாக.*
*அவர்களின் மண்ணறை வாழ்க்கையை மகிழ்ச்சி நிறைந்ததாக ஆக்குவானாக.*
*அவனது மேலான சுவனத்தில் உயர்ந்த அந்தஸ்துகளை வழங்குவானாக.*
*அவர்களது பிரிவால் வாடும் நண்பனுக்கும், அவர்களின் குடும்பத்தினர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.*
*ஆமீன் யா ரப்பல் ஆலமீன்..............*
*#jalaludheen...Colachel*
*From Riyadh ...*
*தகவல்:M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி.*