ஒரு நாடே கை விட்ட போது
ஒரு முழு நாடும் நிராயுதபாணியாக இனி எதுவும் செய்வதிற்கில்லை என்ற கையறு நிலையில் நிற்கும்போது,
ஒரு பிரகாசமான நம்பிக்கைச் சுடர் உள்ளே நுழைகிறது.
சாத்தியமான அனைத்து பாதைகளும் இருளில் மூழ்கிய நேரத்தில், இல்லை! வழிகள் மொத்தமும் மூடப்படவில்லை என அவர் வாக்குறுதி எனும் ஒளிக் கீற்றை ஒளிரச் செய்கிறார்.
இப்படியொரு வாக்குறுதி தரும் ஒரு நபர் இருக்கிறார் என்ற செய்தி, இன்னும் ஒரு முயற்சி மீதமுள்ளது என்ற அறிவு, உயிரைப் போலவே மதிப்புமிக்கதாகிறது.
தொண்ணூற்று நான்கு வயதில் உறுதியுடன் அவர் வாழ்க்கைக்கும், மரணத்திற்கும் மத்தியில் ஒரு பாலத்தை உருவாக்குகிறார்.
அதனூடாக நாம் கேட்க விரும்பும் நல்ல செய்தியை பாதுகாப்பாக வாழ்க்கையின் கரைக்குக் கொண்டு வருகிறார்.
உஸ்தாத் அவர்களே! மரணத்திற்கும், வாழ்க்கைக்கும் மத்தியில் மத்தியஸ்தம் செய்ததற்கு மிக்க நன்றி! மனிதன் மீது மனிதன் நேசத்தோடு இருப்பதற்கு ஒரு உன்னதமான முன்மாதிரி இம்மகத்தான செயல்!