மீலாத் விழாவும் துபாய் போலீஸும் பின்னே நம்மூர் வஹ்ஹாபிகளும்

மீலாத் விழாவும் துபாய் போலீஸும் பின்னே நம்மூர் வஹ்ஹாபிகளும்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

மீலாது விழாவும்
துபாய் காவல்துறையும்
பின்னே இங்கே உள்ள அறிவு ஜீவிகளும்.
*******************************************

அரசியல் மற்றும் சமுதாயத் தலைவர்கள் பலர் சமூக ஊடகங்களில் நபிகள் நாயகம் முஹம்மத் முஸ்தஃபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீலாதையொட்டி வாழ்த்துக்கள் தெரிவித்து குறிப்புகளையும், வாழ்த்து அட்டைகளையும் பதிவிட்டுள்ளனர். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீலாத் தின வாழ்த்துப் பதிவுகளின் கீழ் பதியப்பட்ட கமன்டுகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இஸ்லாமில் அப்படி ஒரு நாளே இல்லை என்றும், ஸுன்னத் ஜமாஅத்தினர் மற்ற சமூகங்களைப் பின்பற்றிச் செயல்படுகின்றனர் என்றும் சிலர் ஒப்பாரி வைப்பதை வாசித்தேன். இதே போன்ற வேறு பல கருத்துகளையும் பார்த்தேன்.

அப்படி வாசித்துக் கொண்டிருக்கும்போது நேற்று பதிவிடப்பட்ட துபாய் காவல் துறையின் ஃபேஸ்புக் பக்கத்தில் மவ்லிதுன் நபவி ஷரீஃப் வாழ்த்து அட்டையைப் பார்த்தேன். அந்த வாழ்த்தின் கமன்ட் பாக்ஸைத் திறந்து பார்த்தேன்.
அதில் எந்த அவதூறு வார்த்தைகளும் காணப்படவில்லை. நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீலாது தினக் கொண்டாட்டம் இஸ்லாமுக்கு எதிரானது,
அது பிற மதக் கலாச்சாரம், யூதர்களைப் பின்பற்றிச் செய்யப்படுபவை என்ற எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லை,

தவ்ஹீத் ஜமாஅத்தின் பல்வேறு பிரிவினரும், ஜமாஅத்தே இஸ்லாமியும் துபாயில் வேலை செய்யவில்லையா? மீலாது தினக் கொண்டாட்டம் இஸ்லாமுக்கு எதிரானது என்று அனைத்து இடுகைகளின் கீழும் வலிந்து நுழைந்து பக்கம் பக்கமாக எழுதுபவர்கள், கருத்துரைப்பவர்கள், ஷிர்க், பித்அத் ஃபத்வா வெளியிடுபவர்கள் துபாய் காவல்துறைக்கு அதைக் கற்பிக்க வேண்டாமா? அதைப் பற்றிய இறை வசனங்களையும், ஹதீஸ்களையும் அவர்களிடமும் சொல்லுங்கள். அங்குள்ள காவல்துறை அவற்றைப் புரிந்துக் கொண்டால் உங்கள் வேலை எளிதாகிவிடும். உண்மையை மறைப்பது குற்றம் இல்லையா? தயவு செய்து அமைதியாக இருக்காதீர்கள்...

அனைவருக்கும் மீலாத் தின நல்வாழ்த்துக்கள்.

اللَّهُمَّ صَلِّ وسلِم وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّد

நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிப்பவர்கள் இந்நாளை உற்சாகமாக, மகிழ்வோடு கொண்டாடுங்கள்! அல்லாதவர்கள் உட்கார்ந்து கதறிக் கதறி அழட்டும்!

முஹம்மதலி கினாலூர் கேரளா