இதுதாண்டா எங்கள் மலப்புறம்
இதுதான்டா எங்கள் மலப்புறம்.
அவர்கள் லக்கேஜ்களை கொள்ளையடிக்கவில்லை.
எதிர்ப்பில்லாத அவர்களின் பைகளில் எதுவும் கிடைக்குமா என துளாவவில்லை.
தொப்பியிட்டவரா.. திருநீரு பூசியவரா..
சிலுவை அணிந்தவரா.. என
அவர்களின் கண்கள்
துளைத்து துளைத்து தேடிப்பார்க்கவில்லை
பெட்ரோலின் விலையைப்பற்றியும்
கவலை கொள்ளாமல்
பைக், ஆட்டோ, கார்களின்
பின் சீட்டுகள் கேடாகுமென்று
கவலை கொள்ளாமல்
டு, த்ரி வீலர்களும்
ஃபோர் வீலர்களும்
ஹாஸ்பிடலும்
ஏர்போர்ட்டுமாக
பறந்துகொண்டேயிருந்தன...
#கோவிட் #19 ஐ பற்றி பயப்படவில்லை.
ரத்த வங்கிகளின் முன்பில்
அவர்கள் வரிசையில்
நின்றனர்.
வரிசையில் நிற்கும் நேரமும்
இது நடுநிசி
என யோசிக்கவேயில்லை.
அடை மழையையும்
காரிருளையும்
கவனமே கொள்ளாமல்
மீட்பு பணிகளில்
அவர்கள் பம்பரமாய்
சுழன்றனர்.
மாநில பேரிடர் குழுவோ...
மத்திய பேரிடர் குழுவோ....
வருவதற்கு முன்பே
பல உயிர்களை பாதுகாத்த
அவர்கள் யார்...??
அவர்கள்தான்
நாட்டின் சுதந்திரத்தில்
தொடர் மூன்று தலைமுறையாக
பாடுபட்டவர்களான #மாப்பிள்ளை வம்சத்தை சார்ந்த
#மலப்புர #கேரள #வாசிகள்
#கோழிக்கோடு_விமான_விபத்து.
தகவல்:M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி