Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#பெரும்_பாக்கியசாலி

நாயகம் (ﷺ) அவர்களின் ரவ்ளா ஷரீஃப் தூய்மை பணியாளர் வஃபாத்தானார்கள்.

பல ஆண்டுகளாக நபி (ﷺ) அவர்களின் ரவ்ளா ஷரீஃபை தூய்மைப்படுத்தி வந்த அஹ்மது அலி யாஸீன் அவர்கள் தமது 95 _ம் வயதில் வஃபத்தானார்கள்.மஸ்ஜிதுன் நபவியில் நடைபெற்ற மய்யித் தொழுகைக்கு பின் அவரது ஜனாஸா ஜன்னத்துல் பகீஃஇல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அகாத்துகள் (ஆகாமார்) என்று அழைக்கப்படும் குடும்பத்தினருக்கு இப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது..

நாட்டின் முக்கியஸ்தர்கள், மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் மஸ்ஜிதுன் நபவிக்கு வருகை தருகிற போது ஊது புகைத்து, ஸம்ஸம் நீர் வழங்கி வரவேற்பது இவர்களின் பொறுப்பாகும்..

ஜும்ஆ நாளன்று மஸ்ஜிதில் புகைத்தல், குறிப்பாக ஜிப்ரீல் வாசலுக்கு அருகில் ஊது புகைத்தல், ஜும்ஆ நாளில் இமாமுக்கு மிம்பர் திறந்து கொடுத்தல், எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் நபி (ﷺ) அவர்களின் கப்று ஷரீஃபையும், ஏனைய கப்றுகளையும் சுத்தம் செய்தல் போன்ற காரியங்களை வழக்கமாக செய்து வந்தார்.

அய்யூபி அரச பரம்பரையைச் சார்ந்த மன்னர் நாசர் பின் சலாஹுத்தீன் முதன் முதலாக வயோதிகர்களான ஆகாத்துகளை இப்பணிக்கு நியமித்தார்.இப்போது ஆகாத்துகளின் பரம்பரையில் மூவர் மட்டுமே எஞ்சியுள்ளனர்.

ஆகாத்துகள் எத்தியோப்பியாவை பூர்வீகமாக கொண்டவர்கள்.

வயது முதிர்ந்தவர்களாக இருக்க வேண்டும், ஹரம் ஷரீஃபில் ஏழு ஆண்டுகள் பணியாற்ற வேண்டும், தலைவர்களை அனுசரிக்க வேண்டும், ஆரோக்கியமானவர்களாக இருக்க வேண்டும் ஆகியவை இப்பதவிக்கான நிபந்தனைகளாகும்.

மேற் சொன்ன தகுதியுள்ளவர்கள் தமது கோத்திரத் தலைவரிடம் விவரம் சொல்ல வேண்டும்.தலைவரது அனுமதி கிடைத்தால் சவூதி அரசின் ஹஜ் அவ்காஃப் அமைச்சர் அவருக்கு சவூதி குடியுரிமை வழங்கி பணி நியமனம் செய்வார்.கடைசி பணி நியமனம் நடந்து 45 வருடங்கள் ஆகின்றன.
நன்றி: #மலபார்_ஃபிளாஷ்.
தகவல்: M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி.

‏انتقل إلى رحمة الله تعالى اليوم
احد خدام الحجرة النبوية الشريفة
في الحرم النبوي الشريف
الآغا أحمد علي ياسين
وهو أحد الأربعة المتبقين من أغوات المدينة.
رحمه الله جزاء ما قدم من عناية ورعاية للحجرة النبوية والروضة الشريفة والحرم النبوي
واسكنه الله فسيح جناته ورفع درجته في عليين.

رحمه الله رحمة واسعة وأسكنه فسيح جناته مع النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا

إلي خدمة الجناب في دار البقاء إن شاء الله تعالى