தஞ்சையில் சுன்னத் வல் ஜமாத் வெற்றி மாநாடு
அல்லாஹ்வின் திருநாமத்தால்
தஞ்சையில்
மாபெரும்
| சுன்னத் ஜமாஅத் வெற்றி மாநாடு
சுன்னத் வல் ஜமாஅத் என்பது குர்ஆனையும் ஹதிஸையும் பற்றிப்பிடித்து குர்ஆனும் ஹதீஸும் யாரையெல்லாம் பின்பற்றவும் கண்ணியப்படுத்தவும் சொல்கிறதோ அவர்களை பின்பற்றியும் கண்ணியப்படுத்தியும் வாழும் முறையாகும். இதுதான் இஸ்லாம் மார்க்கத்தின் உண்மை வடிவம்
சுன்னத் வல் ஜமாஅத்திற்கு எதிராக பல நவீனவாதங்களை குழப்பவாதிகள் பரப்பினார்கள்.
ஆனால் அவைகளெல்லாம் பலமிழந்து இப்போது சுன்னத்வல் ஜமா அத்தின் உண்மை நிரூபிக்கப்பட்டுவருகிறது.
* மத்ஹபுகள் மார்க்கத்தை பிரித்துவிட்டது என்றார்கள்.
இப்போது மத்ஹபுகளை மறுத்தவர்கள் நான்காக, எட்டாக, பதினாறாக உடைந்து கொண்டிருக்கிறார்கள்.
* மத்ஹபுகளை பின்பற்றியவர்கள் தங்களுக்குள் சகோதரத்துவ உணர்வுடன் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். மத்ஹபுகளை மறுத்தவர்கள் தங்களுக்குள் பகைமை உணர்வுடன் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
* சுன்னத் வல் ஜமாஅத்தை மக்கள் கடைபிடித்த காலமெல்லாம் முஸ்லிம்கள் உலகுக்கு முன்னால் தலைநிமிர்ந்து நின்றார்கள். வஹாபிஸம் உருவானதற்கு பிறகு முஸ்லிம்கள் மற்றவர்களுக்கு முன்னால் அவமானப்பட்டு நிற்கிறார்கள்.
* சுன்னத்வல் ஜமா அத்தை கடைபிடித்தவர்கள் தங்கள் பெண்களை ஒழுக்கத்துடன் வாழவைத்தார்கள். வஹாபிகள் முஸ்லிம் பெண்களை நடுத்தெருவுக்கு இழுத்து காட்சிப்பொருளாக்கி விட்டார்கள். வல்லத்தில் நடந்த வஹாபிய மாநாடு இஸ்லாமிய ஒழுக்க மரபுகளை தகர்க்கும் மாநாடாக அமைந்தது.
* மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதையெல்லாம் ஷிர்க் என்று பழித்தவர்கள் இதுவரை ஷிர்க்கிற்கு விளக்கம் சொல்லாமல் நழுவிக்கொண்டிருக்கிறார்கள்.
* எளிமையின் அடையாளங்களான சுன்னத்வல் ஜமாஅத் ஆலிம்களை பணத்துக்காக வாழ்பவர்கள் என்று குறைசொன்னார்கள். ஆனால் வஹாபிகள் பணத்துக்காக போடும் சண்டைகளைப் பார்த்து சந்தி சிரிக்கிறது.
* நபி (ஸல்) அவர்களின் மாண்புகளை வெளிப்படுத்தும் மீலாது விழாக்களை மறுத்தவர்கள் தங்களின் இயக்கங்களுக்காக விழாக்கள் வர நடத்துகிறார்கள்.
★ மத்ஹப் சட்டங்களை மறுத்தவர்கள் பிறை போன்ற விஷயங்களில் மத்ஹபுகளின் பக்கம் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
* வஹாபிகள் மக்களிடம் சொல்லாமல் மறைத்த ஆதாரங்களையெல்லாம் சுன்னத்வல் ஜமாஅத் ஆலிம்கள் மக்களிடம் தெளிவுபடுத்தும் போது வஹாபிகள் அதிர்ந்து போய் நிற்கிறார்கள்.
இவைகனெல்லாம் சுன்னத் வல் ஜமாஅத்தின் உண்மையயையும் வலிமையையும் நிரூபிக்கும் அம்சங்கள். சுன்னத்வல் ஜமாஅத் வலிமையுடன் தலைநிமிர்ந்து நிற்பது -இதுதான் இஸ்லாமின் உண்மைவடிவம் என்பதைப் பறைசாற்றுகிறது.
ஆனால் முஸ்லிம்களில் பலர் இந்த உண்மையை உணராமல் இருக்கிறார்கள். வஹாபிகளின் கவர்ச்சிகரமான பிரச்சாரங்களில் மயங்கி ஈமானை இழக்கிறார்கள்.
சுன்னத் வல் ஜமாஅத்தின் இந்த மகத்தான வெற்றியை உலகுக்கு முன்னால் உணர்த்திட
வஹாபிஸத்தின் பொய்மையை மக்களுக்கு தெளிவுபடுத்திட
முஸ்லிம்களின் ஈமானைப் பாதுகாத்திட
சுன்னத் ஜமாஅத்
ஐக்கியப் பேரவை
(SJAP) & ஜம்இய்யத்து அஹ்லிஸ் ஸுன்னா (JAS)
இணைந்து நடத்தும்
மாபெரும்
சுன்னத் ஜமாஅத் வெற்றி மாநாடு
இடம் : தஞ்சாவூர்
நாள் : ஆகஸ்ட் 24
ஞாயிற்றுக்கிழமை