குர்ஆன் கூறும் தஃவத் பாகம் _2

குர்ஆன் கூறும் தஃவத் பாகம் _2

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

குர்ஆன் கூறும் தஃவத்

பாகம் _2

பிரச்சாரம் செய்ய வேண்டிய முறை...

விவேகத்துடனும் அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன் அவன்
நேர் வழி பெற்றோரையும் அறிந்தவன்
(அந்நஹ்ல் - 125)

மேற்கூறிய ஆயத்திலிருந்து இந்த மார்க்கவரிகள் வெளிப்படையாகும். தஃவத் நடத்துவது அறிவுபூர்வமாக இருக்க வேண்டும் அதாவது சிந்திக்கின்ற மக்களுக்கு விளங்கும்விதம் தத்துவங்களும் ஆதாரங்களும் விளக்கி கொடுக்க வேண்டும். தாழ்மையை கடைப்பிடிக்க வேண்டும். தேவைப்பட்டால் விவாதம் நடத்தவும் விவாதம் ஒருவரையொருவர் குறைகூறாமலும் குறுக்கு பாதையை கடைபிடிக்காமலும் நடத்த வேண்டும். அனைத்து நபிமார்களின் பிரச்சாரங்களும் மேற்கூறிய அடிப்படையில்தான் நடைபெற்றது. உதாரணமாக யூசுப்நபி (அலை) ஜெயிலில் வைத்து இரு கைதிகளோடு நடத்திய தஃவத் யூசுப் சூரத்திலே 30 முதல் 41 வரையுள்ள ஆயத்தில் இதை விவரிப்பதை பார்க்க முடியும்.

சுலைஹா பீவியினுடையை அவதூறு கேஸில் யூசுப் நபி தூயவரென்று எல்லாவருக்கும் தெரிந்த விஷயம்.
பிறகும் அவர்கள் சிறை கூடத்தில் அடைக்கப்பட்டார்கள். சுலைஹா பீவியை மக்களின் இழிவான பேச்சிலிருந்து தப்ப வைக்க மந்திரி அஸீசுக்கு இது அல்லாது வேறு வழி அறியவில்லை யூசுப் நபி (அலை) ஜெயிலில் சென்றபோது அங்கெயிருந்த கைதிகள் யூசுப் நபி (அலை)வுக்கு மிகவும் கண்ணியமும், ஆதரவும் கொடுத்தார்கள்.
யூசுப் நபி (அலை)யின் மிகுந்த பணிவும், உயர்ந்த தோற்றமும், அவர்களுக்கு செல்வாக்கை கொடுத்தது.

அங்கே அவர்கள் கவலையுள்ளவர்களை தேற்றினார்கள். பாவப்பட்டவர்களுக்கு
உதவியாக இருந்தார்கள். நோயுள்ளவர்களை கவனித்தார்கள். இரவெல்லாம் இறை தியானத்தில் முழ்கினார்கள் மட்டுமல்லாமல் கனவுகளுக்கு விளக்கம் கொடுக்கவும் முற்ப்பட்டார்கள் (கனவுகளுக்கு விளக்கம் கொடுப்பது அவர்களுக்கு இறைவன் நல்கிய பேரருளாகும்) இந்த விஷயம் கைதிகள் அறிந்த வேளையில் மேலும் யூசுப்நபி (அலை) நன்றாக மதிக்கப்படத் தொடங்கினார்கள்
யூசுப் நபி (அலை) சிறையில் அடைத்த அதே நாளில் சிறையில் வந்த இரு கைதிகளுக்கு இந்த விஷயம் அறிய நேரிட்டது அவர்கள் இருவரும் ராஜாவின் அரண்மனையில் வேலைப்பார்த்து வந்தவர்கள் ஒருவர் ரொட்டி தயார் செய்யும் வகுப்பின் தலைவர் மற்றொருவர் இனிப்பு வகையான பண்டங்களை தயார் செய்யும் வகுப்பின் தலைவர்..
ராஜாவின் உணவில் விஷம் கலக்க முயற்சித்தார்கள் என்ற வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
தாங்கள் இருவரும் இருவிதமான கனவுகள் கண்டிருக்கிறோம் அதற்கு விளக்கமளிக்க வேண்டுமென யூசுப் நபியோடு முறையிட்டனர், 35 36 ஆயத்துகளில் இதுதான் சாராம்சம் யூசுப் நபி இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டார்கள். கேள்வியாளர்களின் கவனத்தை இஸ்லாமின் பக்கமும் தவ்ஹீதின் பக்கமும் திருப்புவதற்கு முயற்சித்தார்கள். உடனே இஸ்லாமிற்கு அழைப்பதற்கும் அல்லாஹ்வைப்பற்றி சொல்லுவதற்கும் முன் தன்னுடைய தகுதியைப்பற்றி விவரிக்கிறார்கள் அதுதான் 37,38 ஆயத்துகளிலே சொல்லப்படுகிற விஷயம்.

யூசுப்நபி (அலை) சொன்னார்கள். நீங்களிருவரும் எதை உணவாக வழங்கப்படுகிறீர்களோ அது உங்களிருவருக்கும் வந்து சேரும் முன் அதன் விளக்கத்தை உங்களிருவருக்கும் நான் அறிவித்தே அல்லாது (அந்த) உணவு உங்களிருவருக்கும் வருவதில்லை. இவ்விரண்டுக்குரிய விளக்கமும் என் இரட்சகன் எனக்குக் கற்றுக் கொடுத்தவற்றில் உள்ளவையாகும். அல்லாஹ்வை விசுவசிக்காத சமூகத்தின் மார்க்கத்தை நிச்சயமாக நான் விட்டுவிட்டேன் இன்னும் அவர்கள் மறுமையை நிராகரிக்ககூடியவர்கள்.

யூசுப் (நபி) தன்னுடையை தகுதியைப்பற்றி அவர்களை சிந்திக்க தூண்டும் விதமாக கேட்கிறார்கள்.

சிறைச்சாலையின் என்னிரு தோழர்களே! (யாதொரு சக்தியுமற்ற) பல்வேறு தெய்வங்கள் மேலா? அல்லது யாவற்றையும் அடக்கி வாழ்கின்ற ஒருவனான அல்லாஹ் மேலா..?

தொடர்ந்து வருகின்ற 40-41 ஆயத்துகளிலும் யூசுப்நபி (அலை) அவர்களோடு நல்லுபதேசம் தொடருவதை பார்க்கமுடியும். சிந்திக்கத்தூண்டும் உபதேசம்! உபதேசிக்கும் வேளையில் அவர்களின் கனவுகளுக்கு விளக்கமும் கொடுக்கிறார்கள். முஷ்ரிக்குகளான அவர்களைப் படைத்த இறைவன் யாரென்றும் அவனுடைய சக்திகள் என்னவென்றும் அவனுடையை சிறப்புகள் என்னவெல்லாமென்றும் யூசுப் நபி (அலை) கற்றுக் கொடுக்கிறார்கள் பிரச்சாரகனுக்கு புறக்கனிக்க முடியாத நியாயங்களை எடுத்துச் சொல்லியும் சிந்திக்கத் தூண்டும் விஷயங்களை விளக்கிக் கொடுத்தும் தவ்ஹீதின் பக்கம் அழைக்கிறார்கள். அவர்கள் எடுத்து சொன்ன விஷயங்களில் மறைஞானம் என் சக்தியில் உட்பட்டதல்ல என்ற வாக்கியம் முக்கியம் வாய்ந்ததாக அமையும். (கனவுகளுக்கு விளக்கம் கூறும்) இது என் இறைவனே எனக்கு கற்றுக்கொடுத்திருக்கிறான் என்றும்,

மேலும் தன்னுடைய மூதாதையர்களான இப்ராஹிம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தையே நானும் பின்பற்றுகிறேன் என்றும் நிலை நாட்டுகிறார்கள்.

மதப்பிரச்சாரத்தில் தந்திரமும் யுக்தியும் பயன்படுத்தி தஃவத் நடத்தியதற்க்கு ஏராளமான உதாரணங்களை பார்க்கமுடியும் நபி (ஸல்) யை சந்தித்த ஒரு இளைஞன் தன்னுடைய தேவையை நிறைவேற்றி தருமாறு கோரிக்கை விடுக்கிறான்.
நபியே எனக்கு விபச்சாரம் செய்வதற்க்கு அனுமதி தாருங்கள். இளைஞனின் கோரிக்கையில் கோபமடைந்த சஹாபிகள் அவனை தாக்க முற்பட்டார்கள் அதை தடுத்த நபி (ஸல்) அவர்கள் அந்த இளைஞனை அருகே அழைத்து அன்போடு கேட்டார்கள் உன்னுடைய தாயை யாராது விபச்சாரம் செய்வதை நீ விரும்புவாயா ? இளைஞன் சொன்னான் இல்லை நான் விரும்பமாட்டேன் நபி (ஸல்) மீண்டும் கேட்டார்கள் உன்னுடைய மகளை யாராவது விபச்சாரம் செய்தால் நீ விரும்புவாயா ? இளைஞன் சொன்னான். இல்லை நான் அதை சம்மதிக்கமாட்டேன்
நபி (ஸல்) மீண்டும் தொடர்ந்தர்கள் உன்னுடைய சகோதிரியாக இருந்தால்? இல்லை நான் சம்மதிக்க மாட்டேன் என்று சொன்னார்.
நபி (ஸல்) சொன்னார்கள் அதுப்போன்றுதான் எல்லா மனிதர்களும் அவர்களில் ஒருவரும் விபச்சாத்தை விரும்பமாட்டார்கள்.

நீ விபச்சாரம் செய்வது யாருடையாவது தாயாகவோ, மகளாகவோ அல்லது சகோதரியாகவோ அல்லவா இருப்பவர்கள் தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள் இளைஞனின் மார்பில் கை வைத்து துவூ செய்தார்கள். இறைவா இந்த இளைஞனின் மனதை சுத்தப்படுத்துவயாக, பாவத்தை மன்னித்து விடுவாயாக அதற்க்குப் பிறகு அவருக்கு விபச்சாரம் மிகவும் வெறுப்புள்ளதாக ஆகிவிட்டது.

பெரிய பெரிய சர்வாதிகாரிகளையும் நிராகரிப்பாளர்களையும் நேர்வழியின் பக்கம் அழைப்பதற்க்கு நபிமார்கள் எடுத்துக் கொண்ட நிலைப்பாடுகளும் அவர்கள் கூறுகின்ற சிந்தனை தீபங்களான கேள்விகளும் விஷயங்களும்
அவர்கள் நடத்திய உரையாடல்களும் குர்ஆன் பல இடங்களிலும் அழகான முறையில் எடுத்து கூறுகின்றது. சொற்பொழிவாளர்களும் மத பிரச்சாரகர்களும் எப்படி பேச வேண்டுமென்பதை அவைகள் நமக்கு உணர்த்துகின்றன.

உலக அகங்காரியும் எல்லை மீறிய அநீதியாளனும்,
பெரும் தீயவனும், நான்தான் இறைவனென்று கூறிக்கொண்டிருந்தவனுமான ஃபிர்அவ்னை நேர்வழியின் பக்கம் அழைப்பதற்காக மூஸாநபியையும் ஹாரூன்நபியையும் அனுப்பி வைத்த சம்பவத்தை சூரத்துதாஹாவில் 41 முதலுள்ள (ஆயத்துகளில்) வசனங்களில் அல்லாஹ் விவரிக்கின்றான். தஃவதிற்க்கு போகின்ற இரண்டு நபிமார்களோடும் அல்லாஹ்வினுடையை ஒன்றாவது உபதேசத்தை இப்படி வாசிக்கலாம்.

இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள் அவன் வரம்பு மீறிவிட்டான். அவனிடம் மென்மையான சொல்லையே இருவரும் சொல்லுங்கள் அவன் படிப்பினை பெறலாம் அல்லது அஞ்சலாம்.


பிரச்சாரத்தின் போது கடை பிடிக்க வேண்டிய முக்கியமான ஒன்றுதான் மேலே ஆயத்தில் சொன்ன விஷயம்.
பெரிய எதிரியை நேரிடும் போதும்,
வலிய ரவுடிகளை சந்திக்கும் போதும் மென்மையான பேச்சையும், நல்ல சுபாவத்தையும்,
நல்ல நல்ல ரீதியையும் மட்டுமே கடைபிடிக்க வேண்டும். உபதேசிக்கப்படுகிறவனுக்கு விருப்பமில்லாத ஒன்றையும் சொல்லக்கூடாது. ஆனால் கவுரவம் காண்பிக்க வேண்டிய நேரத்தில் காண்பிக்க கூடாது என்று சொல்லவில்லை.

கடுமையான சோதனைகளுக்கு பிறகுதான் ஃபிர்அவ்னின் மாளிகையில் நபிமார்களுக்கு நுழைவு அனுமதி கிடைத்தது. இப்னு அப்பாஸ் (ரலி) விலிருந்து நஸாயி அறிவிக்கின்ற சம்பவத்தில் இப்படி பார்க்க முடியும் மூஸாநபியும் ஹாரூன் நபியும் ஃபிர்அவ்னின் மாளிகையின் வாசலில் நிறையை காலம் நின்றார்கள் அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை.
பிறகு அதிகமான ராணுவ வீரர்களின் பாதுகாப்பில் அனுமதி கிடைத்தது.
இப்னு இஸ்ஹாக் சொல்லுகிறார்கள். இரண்டு வருடம் ஃபிர்அவ்னின் மாளிகையின் வாசலில் மூஸா நபியும் ஹாரூன் நபியும் போயும் வந்தும் கொண்டிருந்தார்கள் அதற்க்கு பிறகுதான் அனுமதி கிடைத்தது (இப்னுகஸீர் 3/154).

உரையாடுவதற்க்கு அனுமதி கிடைத்த வேளையில் முதல் உரையாடலே ஃபிர்அவனின் கழுத்தை வெட்டு வதைப்போலுள்ள உணர்ச்சி அவனுக்கு ஏற்படும் விதத்தில் விவேகபூர்வமாக நடைபெற்றது 47 வது அத்தியாத்தில் விவரிப்பது அந்த முதல் பேச்சுதான்.

நாங்கள் இருவரும் உன் ரப்பின் தூதர்கள் (தாஹா 47). என்னுடைய ரப்பா ? என்னைத்தவிர வலிய ரப்பா ? பிறகும் ஏன் இவர்கள் என்னோடு இப்படி பேசுகிறார்கள் என்று ஃபிர்அவன் சிந்திக்க தொடங்கினான்.

நபிமார்கள் தொடர்ந்தார்கள் நாங்களிருவரும் உன்னுடைய இறைவனிடமிருந்து உன்னிடம் சான்று கொண்டு வந்துள்ளோம். உன்னைப் படைத்து படிப்படியாக வளர்த்து பாதுகாக்கின்ற ஒரு இறைவன் உனக்கு உண்டு என்பதை படிப்பிக்கின்றார்கள்.


நளினமான பிரச்சாரம், வீரமான அணுகுமுறை,
அழகான உரையாடல் பயந்து விறைத்து கூறுபவர்களாக இருந்தால் எங்களுடையரப்பு என்றுதான் சொல்லியருப்பார்கள் மாறாக அவர்கள் கூறியது உன்னுடையை ரப்பு என்றுதான் சொன்னார்கள். நபிமார்கள் நினைத்ததுபோன்று ஃபிர்அவன் பதில் கொடுக்க ஆரம்பித்தான்.

மூஸா! அப்படியென்றால் உங்கள் இருவரின் ரப்பு யார்? நீங்கள் சொல்லும் இரட்சகளை நான் அறியமாட்டேன்.
அந்த இரட்சகன் யார்? அப்படி ஒரு இரட்சகன் இருக்கிறானா? போன்ற கேள்விகளுக்கு மூஸா நபி கொடுத்த பதில் ஃபிர்அவனை சிந்திக்கத் தூண்டியது.
சுருக்கமான வார்த்தைகள்,
ஆழமான அர்த்தம்.

ஒவ்வொரு பொருளுக்கும் அதனுடையை அடிஸ்தானத்தை கொடுத்தவனும் அவைகளின் வாழ்விற்கும் நிரந்தர நிலைமைக்கும் தேவையான வழிகளையெல்லாம் வகுத்து கொடுத்த மகாசக்தி யாரோ அவன்தான் எங்களுடைய இரட்சகன் என்று முழக்கமிட்டார்கள்.

மூஸாநபியின் பதிலைகேட்ட நேரத்தில் ஃபிர்அவன் விஷயத்தை மாற்ற தொடங்கினான். காரணம் உலகில் காணுகின்ற பொருள்களுக்கு அவையின்
ரூப பாவங்களையும் இயற்கையையும் கொடுத்தது தானல்லயென்பது அவனுக்கு நன்றாக தெரியும்.

பிரச்சாரகனின் சுபாவங்கள்

பிரச்சாரவேளை ஒரு போதும் சுகத்தை தராது. கல்லும் முள்ளும் வீசப்பட்ட பாதையில் நடந்து போகவேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்ப்புகளும் சண்டைச் சச்சரவுகளும் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும். எனவே எப்போதும் தியாக மனப்பாண்மைடன்
சரிவ ஜாக்கிரதையையும் கடைபிடிக்க வேண்டும். பணமும் ஆடம்பர வசதிகளும் தந்து பிரச்சாரத்தை முறியடிப்பதற்க்கு முயற்சி நடந்து கொண்டிருக்கும்
அந்த வலையில் நாம் அகப்பட்டு போகக்கூடாது.

1) நிரந்தரமுயற்சி கடினமான உழைப்பு

2) அல்லாஹ்தான் பாதுகாவலன் என்ற உறுதியான நம்பிக்கை அவனின் உதவியை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
கட்டாயமாக பிரச்சாரகர்கள் கடைபிடிக்க வேண்டிய குணங்கள் இவைகளாகும்.

3)மூடநம்பிக்கைள், அனாச்சாரங்கள் போன்றவையிலிருந்து விலகி மற்றவர்கள் நம்மை பின்பற்றும் விதத்தில் முன்மாதிரி வாழ்க்கை வாழ வேண்டும்.

4) புறம் சுத்தமுள்ளதைப் போன்று அகத்தையும் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

5) ஜனங்களின்
ஏதாவது விதத்திலுள்ள அன்பளிப்புகளில் கண் வைக்க கூடாது. (ஆசைப்படக் கூடாது) பரிபூரணமான இக்லாஸ் உள்ளவராக இருக்க வேண்டும்.

6) இடைஞ்சல் ஏற்படுத்துகின்ற எல்லா சூழ்நிலைகளையும் ஏற்றுக்கொண்டு செயல்படவேண்டும்.

மேற்கூறிய விஷயங்களின் பக்கம் வெளிச்சம் வீசுகிறது முத்தஸிர் சூரத்திலே ஒன்று முதல் ஆறுவரையுள்ள ஆயத்துகள்.

சூரத்து நம்லில் 35-36 ஆயத்துகளில் சுலைமான் நபி பல்கீஸ் ராணியை இஸ்லாமில் நுழையை செய்வதற்காக நடத்திய பிரச்சாரகடிதமும் அந்த வேளையில் நடத்த சம்பங்களையும் மேற்கூறிய ஆயத்துகளில் விவரிப்பதை காணமுடியும்.

பணமும் அன்பளிப்பும் கொடுத்து மயக்கி செயல்பாட்டிலிருந்து பின்வாங்க செய்வதற்ககுரிய மகத்தான உதாரணங்களை உள்ளடக்கியது மேற்கூரிய ஆயத்துகள்.

விலைமதிப்புள்ள வைரங்கள்,
தங்க பாத்திரங்கள், போன்றவைகளை சுலைமான் நபிக்கு பல்கீஸ் ராணி கொடுத்து அனுப்பினார்கள்.
நாம் காத்திருந்து காணலாம் - அன்பளிப்பில் மயங்கி விடுவாரா சுலைமான் நபி ? மாறாக அவையெல்லாம் புறக்கணித்து பிரச்சார பாதையை மேற்கொண்டு நடத்துவாரா? என்னவாயிரிக்கும் அவரின் நடவடிக்கை ? என்று மனக்கோட்டை கட்டிக் கொண்டு பல்கீஸ் ராணி சாமான்களுடன் தூதர்களை அனுப்பினார்கள் ஆனால் நடந்தது என்ன ?

அன்பளிப்புமாக தூதர்கள் சுலைமான் நபியின் அருகில் வந்த வேளையில் சுலைமான் நபி கேட்டார்கள்:

பணம் தந்து எனக்கு உதவி செய்யவா உங்கள் முயற்சி?

அப்படியென்றால் அல்லாஹ் எனக்கு தந்த அருட்கொடைகள் நீங்கள் எனக்கு வழங்கியதைவிட மகத்தானதாகும் இருந்தாலும் நீங்கள் உங்களின் அன்பளிப்பைப் பற்றி மதிமறக்க கூடியவர்களுாகும்.

ஒளிருகின்ற மஞ்சள் உலோகங்களில் கண்பதிக்காமல் அவைகளை அப்படியே நிராகரித்து சுலைமான் நபி கேட்டார்கள் உங்களின் அன்பளிப்புகளில் மயங்கி உங்களுடைய ஷிர்க்கிலும் மூடநம்பிக்கையிலும்
துணை நிற்பேனென்று நினைக்கிறீர்களா ?

(நன்றி - ரிஸால -
குர்ஆன் பதிப்பு - செப்டம்பர் -)

ஆக்கம்..
M.சிராஜுத்தீன்
அஹ்ஸனி...
திருவிதாங்கோடு.
குமரி மாவட்டம்
7598769505....