குர்ஆன் கூறும் தஃவத்

குர்ஆன் கூறும் தஃவத்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

குர்ஆன் கூறும் தஃவத்

சத்திய நிராகரிப்பையும், அனாச்சாரத்தையும், அதர்மத்தையும் சமூகத்திலிருந்து நீக்குவதற்க்குத்தான் பிரச்சாரம்.
குர்ஆன் இறங்கியது கூட ஒரு பிரச்சாரமாகும்.
பிரச்சாரத்தின் கட்டாயம், அதனுடையை வழிகள், அதனுடைய உள்ளடக்கம். பிரச்சாரகனின் சுபாவங்கள்,
நபி மார்களின் பிரச்சாரமுறை போன்றவையெல்லாம் குர்ஆன் சொல்கிகிறது ஸுரத் ஆலு இம்ரானிலுள்ள ஆயத்தை இப்படி வாசிக்கலாம்.

இன்னும் விசுவாசங்கொண்டோரே! உங்களில் ஒரு கூட்டத்தார் அவர்கள் (மனிதர்களை) நன்மையின்பால் அழைக்கின்றவர்களாகவும் நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுகின்றவர்களாகவும், தீயசெயல்களிலிருந்து (அவர்களை) விலக்குகின்றவர்களாகவும் இருக்கட்டும் அவர்களே தாம் வெற்றி பெற்றோர் (ஆலுஇம்ரான் : 104)

இந்த ஆயத்து பிரச்சாரத்தினுடைய முக்கியத்துவத்தை எடுத்து கூறுகிறது வையகத்தின் தொடக்கம் முதல் நபிமார்கள் அந்தந்த காலங்களில் கடைபிடித்து வந்த அந்த மகத்தான வேலை கடைசி வரை தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த மகத்தான வேலையை செய்வதற்க்கு நபிமார்களின் பின் தலைமுறையினரான ஆலிம்களை அல்லாஹ் நியமித்துள்ளான் சமூகத்தினுடைய பொதுக் கடைமைதான் தஃவத். நன்மையின்பக்கம் மக்களை அழைப்பதும் தீமையை விட்டுவிட மக்களிடம் எடுத்து கூறுவதும் தீமையை தடுப்பதும்தான் தஃவத்.
இதை கடைப்பிடிப்பது சமூகத்தினுடைய கட்டாயக் கடமையென இமாம்கள் கூறுகிறார்கள்.

இமாம் நவவி (ரலியல்லாஹு அன்ஹு) மின்ஹாஜில் கூறுகிறார்கள்.
தஃப்ஸீர், ஹதீஸ்,
மார்க்கச்சட்டம் போன்ற மதகல்விகள் படிப்பது, படிப்பித்தல்,
மதத்தில் தேவையான கல்விகளுக்கு ஆதாரங்கள் நிலைநாட்டுவது,
நன்மையை ஏவுவது,
தீமையை தடுப்பது போன்றவை சமூகத்தின் கட்டாய கடமையாகும் (மின்ஹாஜ்)..

சமூகத்தில் உருவாகின்ற மூடநம்பிக்கை, அனாச்சாரம்.
அநீதி, அட்டூழியம்,
ஆபாசம்,
இழிச்செயல்கள்,
பித்அத் போன்றவைகளை தடுப்பதற்க்கு தகுதி வாய் ஆலிம்கள், தலைவர்கள், பெற்றோர்கள், அவைகளை தடுக்காமல் எப்படியும் போகட்டும் என்ற ரீதியில் மௌனமாக இருப்பதை நபி
(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) எச்சரித்துள்ளார்கள்.

என் ஆன்மாவை சுமக்கின்ற இறைவன் மீது சத்தியமாக!!! உங்களில் நன்மையை எடுத்துகூறி தீமையை தடுத்து கொள்ளுங்கள் இல்லையெனில் அல்லாஹ்வின் தண்டைனை வரும், பிறகு அல்லாஹ்வோடு பிரார்த்தனை செய்து பலன் இருக்காது.
இஸ்ராயீல் சந்ததிகளுக்கு ஏற்பட்ட கஷ்டத்தின்
காரணத்தை விவரிக்கும்
போது குர்ஆன் கூறுகிறது.

அவர்கள் செய்து வந்த தீய செயல்களை விட்டும் ஒருவரையொருவர் தடுக்காமலிருந்தனர் அவர்கள் செய்தது மிகவும் கெட்டது. (5-79)

#பிரச்சாரகர்

முதலில் பிரச்சாரம் செய்யமுற்ப்படும்போது ஜனங்களுடைய மனதை புரிந்துகொள்ள வேண்டும்.
ஏனென்றால் பலவிதமான நம்பிக்கையுள்ளவர்களல்லவா மக்கள்.
பலதரமான விசுவாசமுள்ளவர்கள், நாத்திகர்கள், நம்பிக்கையுள்ளவர்களிலே பல்வேறு கொள்கையுள்ளவர்கள் அனைத்து கூட்டத்தாரைப்பற்றியும் படித்து அறிந்து மருந்து கொடுக்கும் போதுதான் நோய் குணமாகும். இந்தக் கூட்டத்தார்களை நாம் ஏழாக பிரிக்கலாம்.

1) தன்னுடைய மனோ இச்சையை மார்க்கமாக நினைக்கும் நாத்திகர்கள். இவர்களுக்கு இறைவனும் ரசுலும் குர்ஆனும் ஒன்றும் பாதகமல்ல.
யுக்தியை கடைப்பிடித்தும் அறிவியலை பின்பற்றியும் நடப்பவர்கள்.
ஒரு பிரச்சாரகனுக்கு இவர்களை மாற்றி நிறுத்த முடியாது
எனவே இவர்களை இலட்சியம் வைத்து தகுதிவாய்ந்த சான்றுடன் இவர்களுடன் விவாதித்து பிரச்சாரம் செய்யவேண்டும்.

2) முஷ்ரிக்குகள் : உலகத்தைப் படைத்து அதை பரிபாலிக்கும் இறைவனுடைய விதிவிலக்குகளை நிராகரித்து மற்றுள்ள
விதிவிலக்குகளை அங்கீகரித்து அதுதான் சரியென்று நம்பிக்கையில் வாழ்கின்ற சிலை வழிப்பாட்டுக்காரர்கள்.

3 : மனதில் நயவஞ்சகத்தை போர்த்திக்கொண்டு முஸ்லிம்கள் மத்தியில் நடமாடுகின்ற முனாஃபிக்குகள்

4) : இறைகட்டளைகளையும் விதிவிலக்குகளையும் தங்களின் சுருங்கிய அறிவைக் கொண்டு ஆய்வு நடத்தி அதன்படி செயல்பட்டு மக்களை வழிகெடுக்கும் நவீனவாதிகள்.

5) பூரணமாக இஸ்லாமை அங்கீகரித்தாலும்
அதை நடைமுறைக்கு கொண்டு வந்து வாழ்வதில் கவனமில்லாதவர்கள். அவர்கள்தான் அறிவில்லா விசுவாசிகள்.

6) பாவச் செயல்கள் சில வேளைகளில் நடந்தாலும் அவர்களுடைய நம்பிக்கை தவறவோ,
சட்டத்தில் இடைசெருகல் நடத்தவோ,
குர்ஆன் சுன்னாவை
சுய ஆராய்ச்சி நடத்தவோ செய்யவில்லை.
இவர்களை குர்ஆன் முக்தளித் என்று கூறுகிறது இவர்களில் ஏராளமான விபத்துகளை ஏற்ப்படுத்தும் கூட்டமும் இருக்கிறது.
அவர்கள்தான்
ளாலிமுன்னஃப்ஸ்
இவர்கள்தான்
ஆறாவது கூட்டம்.

7 : பயபக்தியோடு வாழ்பவர்கள், நம்பிக்கையிலும் செயல்பாட்டிலும் வெற்றியடைந்தவர்கள். இவர்களை ஸாபிக்குன் ஃபில் கைராத் என்று குர்ஆன் கூறுகிறது கடைசியில் சொன்ன மூன்று கூட்டங்களைப்பற்றி சூரத்துல் பாத்திர் 32 ஆம் ஆயத்தில் இப்படிப் பார்க்க முடியும்.

பின்னர் நமது அடியார்களில் நாம் தேர்வு செய்து கொண்டோரை வேதத்துக்கு வாரிசுகளாக்கினோம். அவர்களில் தமக்கு தாமே தீங்கு இழைத்தோரும் உள்ளனர்.
அவர்களில் நடுநிலையாளர்களும் உள்ளனர்.
அவர்களில் நன்மையை
நோக்கி விரைந்து செல்வோரும் உள்ளனர் இதுவே பேரருள் (பாத்திர் 32)

யுக்திவாதிகள், முஷ்ரிக்குகள், முனாஃபிக்குகள், போன்ற கூட்டத்தாரோடு நடத்த வேண்டிய பிரச்சாரத்திற்க்கு தயாராக்குகின்ற திட்டங்களும் செயல்பாடுமல்ல கடைசியில்
சொன்ன கூட்டத்தார்களுக்கு தயாராக்க வேண்டியது. ஏனென்றால் அவர்கள் மறுமையில் பாதுகாப்புள்ளவர்கள் என்ற ஆயத்தை விளக்கி கூறி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) சொல்லுகிறார்கள்.

இவர்களில் நன்மையான செயல்களை கொண்டு முன்நிற்ப்பவர்கள் சொர்க்கத்திலும் முன்நிற்ப்பார்கள்.
மிதமான நன்மை செய்தவர்கள்
தப்பித்து விடுவார்கள்.
பாவம் செய்தவர்கள் வெறுக்கப்படுவார்கள்.

(தப்ஸீர் குர்துபி 221/14)...

ஆக்கம்..
M.சிராஜுத்தீன்
அஹ்ஸனி...
குமரி மாவட்டம்..
திருவிதாங்கோடு..
தொடர்பு..7598769505