ரமளான் பற்றிய நாயகத்தின் பொன்மொழிகள் பாகம் 27

ரமளான் பற்றிய நாயகத்தின் பொன்மொழிகள் பாகம் 27

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#ரமளான்_பற்றிய...
#நாயகத்தின்_நபிமொழிகள்...
#பிறை_27....

#ஆயிரம்_மாதங்களை_விட #சிறப்புக்குரியது....

அலீ பின் உர்வா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருநாள் அருமை நாயகம் (ஸல்) அவர்கள்..

( أَرْبَعَةً مِنْ بَنِي إِسْرَائِيلَ، عَبَدُوا اللَّهَ ثَمَانِينَ عَامًا، لَمْ يَعْصوه طَرْفَةَ عَيْنٍ: فَذَكَرَ أَيُّوبَ، وَزَكَرِيَّا، وحزْقيل بْنَ الْعَجُوزِ، وَيُوشَعَ بْنَ نُونٍ )

"பனூ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த நான்கு நல்லடியார்கள் எண்பது ஆண்டுகள் ஒரு நொடிபொழுது கூட அல்லாஹ்விற்கு மாற்றம் செய்யாமல், வணக்க வழிபாடுகளில் கழித்தார்கள். அந்த நான்கு பேர் அய்யூப் (அலை), ஸக்கரியா (அலை), ஹிஸ்கீல் பின் அல்அஜூஸ் (அலை), யூஷஃ பின் நூன் (அலை)" என்று கூறினார்கள்.

இத்தகவலை செவியுற்ற நபித்தோழர்கள் ஆச்சரியப்பட்டனர். அப்போது வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து....

( يَا مُحَمَّدُ، عَجِبَتْ أُمَّتُكَ مِنْ عِبَادَةِ هَؤُلَاءِ النَّفَرِ ثَمَانِينَ سَنَةً، لَمْ يَعْصُوه طَرْفَةَ عَيْنٍ؛ فَقَدَ أَنْزَلَ اللَّهُ خَيْرًا مِنْ ذَلِكَ. فَقَرَأَ عَلَيْهِ: ﴿إِنَّا أَنزلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ﴾ هَذَا أَفْضَلُ مِمَّا عَجِبْتَ أَنْتَ وَأُمَّتُكَ )

"முஹம்மத் (ஸல்) அவர்களே!
உங்கள் சமுதாயத்தினரை அந்த நான்கு நல்லடியார்கள் எண்பது ஆண்டுகள் ஒரு நொடிபொழுது கூட அல்லாஹ்விற்கு மாற்றம் செய்யாமல், வணக்க வழிபாடுகளில் கழித்தார்கள் என்ற தகவல் ஆச்சரியப்படுத்திவிட்டது. அல்லாஹுத்தஆலா அதைவிடச் சிறந்ததை இப்போது இறக்கி இருக்கின்றான் என்று கூறினார்கள். பிறகு நபியவர்களுக்கு கத்ர் அத்தியாயத்தை ஓதி காட்டிவிட்டு, நீங்களும் உங்கள் சமுதாயத்தினரும் ஆச்சரியப்பட்டதை விட இது சிறந்ததாகும்" என்று கூறினார்கள்.
இதைக் கேட்ட நபியவர்களும் நபித்தோழர்களும் மிகவும் மகிழ்ச்சியுற்றனர்.
நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்,
தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்....