கண்பார்வை இழந்த இருசகோதரர்களும் ஒரு பாசம் நிறைந்த உஸ்தாதும்
கண்களில் கண்ணீர் மல்க இதை நான் எழுதுகிறேன். ஜலாலுதீன் அதனி மற்றும் ஹாபிழ் ஹபீப் தாஹா மெஹபூப் இருவரும் எனது அன்பான மாணவர்கள். இன்று அவர்கள் இருவரது திருமண நாள். இருள் உலகத்திலிருந்து அறிவின் வெளிச்சத்தில் காலடி வைத்த இரு மேதைகளின் சுப மங்கல்ய தினம். இரண்டு திருமணங்களும் ஒரே நாளில் நடந்தது தற்செயலான ஒரு அழகிய நிகழ்வு. எல்லா புகழும் அல்லாஹுவுக்கே.
இருவரும் பார்வையற்றவர்கள் என்றாலும், தடைகளையும், நெருக்கடிகளையும், இன்னல்களையும் தாண்டி வெல்லும் மனதைரியம் இருந்தது. இந்த மனதைரியம் அவர்கள் பல துறைகளில் சாதனைகளின் உச்சத்தை அடைய காரணமாக இருந்தது. மஃதின் அகாடமி மற்றும் அவர்கள் இருவரது குடும்பங்களின் எதிர்பார்ப்புகள் எதுவும் தவறவில்லை. அல்ஹம்துலில்லாஹ்.
மஃதின் அகாடமியிலிருந்து அதனி பட்டம் பெற்ற ஜலாலுதீன் அதனி, மேலும் அரபி மொழியில் சிறப்பான பட்டம் பெற்றார். மற்றொரு சகோதரரான அல்ஹாபிழ் தாஹா மெஹபூப் துபாய் சர்வதேச புனித குர்ஆன் விருது போட்டியில் பங்கேற்றார். 160 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
மதீனா பிளைண்ட் பள்ளியில் அட்மிஷன் கிடைத்த அல் ஹாபிழ் தாஹா மெஹபூப், பின்னர் மஃதின் தஹ்ஃபீளுல் குர்ஆன் கல்லூரியில் குர்ஆனை மனப்பாடம் செய்து, நிறுவனத்துக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெருமை சேர்த்தார். அரபி எழுத்துக்கள் கூட தெரியாமல் நிறுவனத்திற்கு வந்த ஜலாலுதீன் அதனி இப்போது கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி செய்யத் தயாராகி வருகிறார்.
பார்வை குறைபாடுகள் மற்றும் ஊனம் உள்ளவர்களுக்கான சிறப்பு நிறுவனத்தை தொடங்கும் நேரத்தில் சிலர் ஊக்கமளித்தனர், பலர் எதிர்வினை கருத்துகள் கூறினர். எனினும், அல்லாஹ்வின் உதவியுடன் சிறப்பு பள்ளிகள் தொடங்கப்பட்டன. இத்தகைய திறமைகளின் வெளிப்பாட்டை கண்டு ஆச்சரியப்படுகிறோம்.
மஃதின் அகாடமியின் 24 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஊனமுற்றவர்களுக்கான சேவைகளை ஏபிள் வேர்ல்ட் என்ற குடையின் கீழ் அதிக பகுதிகளில் விரிவுபடுத்தி மகிழ்ச்சி அடைகிறோம். இந்த சேவைகளுக்கு உதவியவர்களுக்கும், ஊனமுற்றோருக்கு உதவி செய்ய முயல்பவர்களுக்கும் அல்லாஹ்வின் அருள் கிடைக்கப் பெறட்டும்.
அவர்களின் குறைபாடுகளை சுட்டிக்காட்டாமல், நம்பிக்கையுடன் அவர்களுடன் இணைந்து, வாழ்வில் முன்னேற உதவியுங்கள். நமது உதவியால் அவர்கள் நமக்காக துஆ செய்ய மாறுவர். நன்மைக்காக நம்முடன் நின்ற அனைவருக்கும் அல்லாஹ் அன்பும் அருளும் வழங்கட்டும்.