நிமிஷ பிரியாவுக்கு குரல் கொடுக்கும் உஸ்தாத் ஏன் அவர்களுக்கு குரல் கொடுக்கவில்லை

நிமிஷ பிரியாவுக்கு குரல் கொடுக்கும் உஸ்தாத் ஏன் அவர்களுக்கு குரல் கொடுக்கவில்லை

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

சவூதி அரேபிய சிறைச்சாலையில் தண்டனை கைதியாக இருக்கும்
அப்துல் ரஹீமீன் விடுதலைக்காக எல்லோரும்
ஒன்றாக நின்றபோது இல்லாத கூச்சலும்,அலறலும், கூட்டு அழுகையும்
ஏ.பி. உஸ்தாத் நிமிஷ பிரியாவின் விடுதலைக்காக முன்வந்தபோது ஏன் ஏற்படுகிறது....
எதனால் உருவாக்குகிறது...

பதில் எளிது:
ஏ.பி. உஸ்தாத் மீதான முழு விரோதம்.
வன்மம், காழ்ப்புணர்ச்சி..

ஆனால் இந்த வெறுப்பாளர்கள் உண்மையில் வகுப்புவாதத்தைப் பரப்புகிறார்கள்.

அவர்களின் முதல் கூக்குரல் பெங்களூரில் கைது செய்யப்பட்ட அவர்களின் சகோதரர் திரூர் ஜக்கரிய்யாவுக்காக...!

ஆனால் இவர்கள் அல்லது அந்த ஜக்கரிய்யாவின் குடும்பத்தினர் இன்று வரை அந்த ஜக்கரிய்யாவின் விடுதலைக்காக
ஏ.பி. உஸ்தாதைப் பார்க்கச் சென்றார்களா?
இல்லை, இல்லை.

அதே வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் நாசர்
மதானியின் குடும்பத்தினர் உஸ்தாதைப் பார்த்திருந்தார்கள். உஸ்தாத் அந்த மதானிக்காக பல முறை பெங்களூருக்குச் சென்று, அதிகாரிகளைச் சந்தித்து, அவர்களிடம் பேசி, தன்னால் முடிந்ததைச் செய்துள்ளார்கள்..

அடுத்த கூக்குரல்
வட இந்தியாவில் முஸ்லிம்கள் வேட்டையாடப்படுகிறார்கள்,
உஸ்தாத் அவர்கள் அதற்கு எதிராக குரல் எழுப்பவில்லை எனும் குற்றச்சாட்டு..

ஏ.பி. உஸ்தாத் மற்றும் அவரது மகன் ஹக்கீம் அஸ்ஹரி ஆகியோர்
இந்திய முஸ்லிம்களின் பிரச்சினைகளை குறித்து
மோடியையும்
அமித் ஷாவையும் நேரடியாக
பல முறை சந்தித்துப் பேசினார்கள்.

ஆனால், அந்த நேரத்தில், இதே எதிரிகள்தான் அவர்களை சந்திக்க போனதை
குற்றம் சாட்டி உஸ்தாத் அவர்களுக்கு
சங்கி பட்டம் கொடுத்தார்கள் இப்போது அவர்கள்
ஏன் உஸ்தாத் குரல் எழுப்பவில்லை என்று அவதூறும் பொய்யும் பரப்புகிறார்கள்..

நான் அவர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், நீங்கள் பிரகாசிக்கும் முழு நிலவைப் பார்த்து குரைத்துக் கொண்டே இருங்கள்.
சந்திரன் அப்போதும் தன்னுடைய ஒளியை அனைவருக்கும் பிரகாசிக்க செய்து கொண்டே இருக்கும்...

✍️ஜலீல் வல்லப்புழா