இப்படியும் ஒரு ஆஷிக் ரஸுல்
வெறுங்காலுடன் நாயகத்தின்_தர்பாரை
சந்திக்க வந்த ஒரு
ஆஷிக்கே றஸுல்
தமிழில்:✍️.M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி
திரு ரவ்ழா ஷெரீஃபுக்கு வெறுங்காலுடன் நடந்து வந்த ஒரு முதியவரை அரபு ஊடகங்கள் தேடிக் கண்டுபிடித்தன.
முதியவர் ஒருவர் செருப்பு அணியாமல் நடந்துச் சென்று மதீனாவை முனவ்வராவை அடைந்தார்.
திரு ரவ்ழா ஷெரீஃபுக்கு வெறுங்காலுடன் வந்த அந்த முதியவர் யார்? அரபு சமூக ஊடகங்கள் ஒரு வாரமாக விசாரணை நடத்தி இறுதியில் அந்த முதியவரைக் கண்டுபிடித்தன.
பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அப்துல் காதர் பக்ஷி என்ற ஆடு மேய்ப்பாளரான அந்த முதியவரை சவுதி அரேபியாவின் ஆங்கில மொழிப் பத்திரிகையான அரப் நியூஸ் நிருபர் கண்டுபிடித்தார்.
வெறுங்காலுடன், வெள்ளைத் தலைப்பாகை அணிந்து, கையில் தடியை ஏந்தியபடி, அப்பாவியாக , வெள்ளந்தியான மனிதராக விடைச்சொல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் கடந்த ஒரு வாரமாக வைரலாகி வந்தது.
பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ஆலோசகரான துர்க்கி அஷ்ஷேக், இந்த முதியவரை எப்படி தொடர்பு கொள்வது? என்று ட்வீட் செய்தார்.
இதைத் தெரிந்து அரபு நாடுகள் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டன.
உம்ராவை நிறைவேற்றிய பிறகு
82 வயதான அப்துல் காதர் பக்ஷி மதீனாவை வந்தார்.
மஸ்ஜிதுந்நபவி வழியாக செல்லும்
ஒரு காணொளி...
கையில் குச்சியை பிடித்துக் கொண்டு பார்வை இழந்த பக்ஷி நடந்து சென்றது நெஞ்சை உருக்கும் காட்சியாக இருந்தது. அங்குமிங்குமாக யாரையோ தேடுவது போல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித நகரை விட்டு வெளியேறுகிறார்.
அவரது எளிமை மற்றும் பணிவு சமூக ஊடகங்களில் பிரபல இஸ்லாமிய பிரமுகர்களுடன் ஒப்பிடப்பட்டது.
அரபு சி.என்.என் சேனல், மதீனாவின் தாழ்வாரங்கள் வழியாக மக்கள் நடந்து செல்லும் வீடியோக்களையும் படங்களையும் வெளியிட்டது.
மதீனாவிலிருந்து மக்காவுக்குத் திரும்பி மற்றொரு உம்ராவைச் செய்துவிட்டு சனிக்கிழமை பலுசிஸ்தானில் உள்ள கோத் ஹாஜி ரஹீம் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு அவர் திரும்பினார்.
வறுமையில் வாடிய அவர் வயதாகிய நிலையிலும் கடந்த 15 ஆண்டுகளாக புனித பூமிகளுக்கு (மக்கா மதீனா) செல்வதற்காக பணத்தை சேமித்து வந்தார். சில ஆடுகளையும் விற்று
தனது நீண்ட நாளாக கனவை நனவாக்கினார்.
"யா அல்லாஹ்!
எனக்கு இந்த இடம் தெரியாது, அதனால் நீயே எனக்கு வழிகாட்டி, எனக்கு உதவ யாரும் இல்லை, நான் உடல்நிலை சரியில்லாமல் உள்ளேன், இந்த இடம் எனக்கு மிக விருப்பத்திற்குரியது.
நான் அதிக அறிவு இல்லாதவன், நான் பார்வை குறைவுள்ளவனாக இருக்கிறேன்.
எனவே எனக்கு வழிகாட்டு ஏனென்றால் நீ மட்டுமே எனக்கு ஒரேயொரு வழிகாட்டி"
இவ்வாறு அவர் கஃபாவில் பிரார்த்தனை செய்தார்.
அவருடைய துஆ வுக்கு பதில் கிடைத்தது. வழிகாட்டி இல்லாமல் சுற்றித் திரிந்து கடைசியில் புண்ணிய பூமியை அடைந்தார்.
பலூச்சி மட்டுமே பேசும் பக்ஷிக்கு கருத்து பரிமாற்றம் கடினமாக இருந்தது.
பத்திரிகையாளர்
கள்அவரை மரக்கிளைகள் மற்றும் புல்லால் செய்யப்பட்ட குடிசையில் கண்டனர்
நீண்ட வருட காத்திருப்புக்குப் பிறகு, அப்துல் காதர் பக்ஷி உம்ரா செய்துவிட்டு கிராமத்திற்குத் திரும்பியபோது உற்சாகமான வரவேற்பு ஊர் மக்களால் அவருக்கு வழங்கப்பட்டது..
இந்நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்துக் கொண்டனர்.
"என் கவலைகள் எல்லாம் நீங்கி என் உள்ளம் திருப்தி அடைகிறது. எனக்கு பஞ்சமில்லை, இப்போது நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்..
புனித பூமியான மக்கா மற்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித நகரத்திற்குச் செல்ல வேண்டும் என்ற எனது ஆசை நிறைவேறியதில் மகிழ்ச்சி அடைகிறேன்."
பக்ஷி தனது மிகப்பெரிய ஆசையான ஹஜ்ஜை நிறைவேற்ற பணம் திரட்டத் தயாராகிறேன் என்று சொல்லி புன்சிரிக்கிறார்.
அல்லாஹ் அவரது ஆசையை நிறைவு செய்வானாக!