அல்லாஹ் என்ற பெயருக்கு கிறிஸ்தவ பெண் அளித்த விளக்கம்
அல்லாஹ்_الله_என்ற
பெயருக்கு கிறிஸ்தவபெண்
அளித்த அழகிய விளக்கம்
✍️தமிழில்:M.சிராஜுத்தீன்அஹ்ஸனி.
அல்லாஹ் என்ற சொல்லுக்கு விளக்கம் கூறிய ஸ்பானிஷ் யுவதி ஹெலன் இஸ்லாமில் இணைந்தார்.....
அவரது புதிய பெயர் ஆபிதா.....
அல்லாஹ் الله என்ற வார்த்தைக்கு அரபியர்களுக்குக்கூட சாத்தியமற்ற பொருளை, விளக்கத்தை ஒரு ஸ்பானிஷ் பெண்மணி விளக்கிக் கூறுகிறார்.
இவர் இப்போது ஜோர்டானிலுள்ள அல்யர்முக் பல்கலைக் கழகத்தில் M.A. (அரபி) படித்து வருகிறார்.
ஒரு நாள் பேராசிரியர் டாக்டர் ஃபக்ரி கிற்றானே என்பவர் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தும்போது தனது சிஷ்யர்களிடம்:
“உங்களில் யாராவது الله என்ற வார்த்தையின் மொழி மற்றும் ஒலி வடிவத்தின் மேன்மையை விளக்க முடியுமா” என்ற கேள்வியை முன் வைத்தார்.
அரபி பேசத் தெரிந்த ஸ்பானிஷ் கிறித்தவப் பெண்ணான ஹெலன் தவிர வேறு யாரும் கை உயர்த்தவில்லை.
ஹெலன் சொன்னார்:
“அரபியில் நான் படித்த மிக அழகான வார்த்தை الله என்ற வார்த்தை.
இந்த வார்த்தைக்கு ஒரு சிறப்பு மெல்லிசை உண்டு. நாவால் الله என்று உச்சரிக்கும் போது அதை உணரலாம்.
அல்லாஹ் الله என்ற வார்த்தையிலுள்ள முழு எழுத்துக்களின் உச்சரிப்பும் உதடுகளின் உதவி இன்றி உள்ளிலிருந்து வருகிறது. அதாவது الله என்ற வார்த்தையை உச்சரிக்க உதடுகளின் உதவி தேவையில்லை.
அல்லாஹ் الله என்று உச்சரித்துப் பாருங்கள்! உதடுகள் மற்றும் முகத்தில் அசைவுகள் இருக்கிறதா? அல்லது உள்ளே இருந்து உச்சரிக்கப்படுகிறதா?
உள்ளே இருந்துதான் உச்சரிக்கப்படுகிறது என்பதை உணர்வீர்கள்!
எனவே நாம் புரிந்துக் கொள்ள வேண்டிய உண்மை யாதெனில்:
ஒரு நிகழ்வில் الله என்று கூறும்போது உதடுகளில் அசைவு ஏற்படாததால் அதை வேறு யாராலும் தெரிந்துக் கொள்ள முடியாது.
மேலும் அல்லாஹ் என்ற பெயரிலுள்ள ஒரு அற்புதத்தைக் கவனியுங்கள்.
அல்லாஹ் الله என்ற சொல்லில் சில எழுத்துக்களை நீக்கிப் பாருங்கள்.
(1) முதல் எழுத்தான அலிஃபை நீக்கினால் لله லில்லாஹ் என்று வரும் . அல்லாஹ் சொல்கிறான்: وَللهِ الْاَسْمَاهُ الْحُسْنَي (அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன)
(2) முதல் (அலிஃப்) மற்றும் இரண்டாவது (லாம்) எழுத்துக்களை நீக்கிப் பாருங்கள். له லஹு என்றாகும். இதுவும் அல்லாஹ்வைக் குறிப்பதாகும். அல்லாஹ் சொல்கிறான்: مَا فِي السَّمَواَتِ وَالْاَرْضِ لَهُ (வானங்கள், பூமியிலுள்ளவை அல்லாஹ்வுக்கே உரியவை)
(3) முதல் எழுத்தான அலிஃபையும், இரண்டாவது, மூன்றாவது எழுத்துக்களான இரண்டு லாம்களையும் நீக்கிப் பாருங்கள். ه ஹு என்ற எழுத்து மட்டும் மிஞ்சும். இதுவும் அல்லாஹ்வைச் சுட்டுகிறது. அல்லாஹ் சொல்கிறான் : اَلَّذِي لاَاِلَهَ اِلَّا هُو (அவனைத் தவிர வணக்கத்திற்குரியவர்கள் யாருமில்லை)
(4) அறிஞர்கள் الله என்ற சொல்லைக் குறித்து ஏராளமான விளக்கங்களைக் கூறியுள்ளனர். لاَاِلَهَ اِلَّا الله என்ற கலிமத்துத் தவ்ஹீதிலுள்ள எழுத்துக்கள் அனைத்தும் உச்சரிக்க மிக இலகுவான ا ل ه எனும் மூன்று எழுத்துக்களை மட்டும் கொண்டுள்ள வாசகமாகும். இவ்வெழுத்துக்களை உச்சரிக்க உதடுகளின் தேவை இல்லை.
அல்லாஹ் என்ற தனது பெயருக்கு மிக இலகுவான எழுத்துக்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்திருப்பதில் ஒரு இரகசியம் உண்டு.
நாவையும், உதடுகளையும் அசைக்க முடியாமல் கிடக்கும் மரண வேளையில்கூட لاَاِلَهَ اِلَّا الله என்ற கலிமத்துத் தவ்ஹீதை யாராலும் உச்சரிக்க இயலும்.
இவ்வாறு அல்லாஹ் என்ற சொல்லுக்கு நீண்டதொரு விளக்கத்தைக் கொடுத்த ஹெலன் இஸ்லாமை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார். அவரது புதிய பெயர் ஆபிதா என்பதாகும்