கோவையில் நடைபெற்ற சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பின் மாநில பொதுக்குழு
சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பின் மாநில பொதுக்குழு
நேற்றைய தினம் கோவையில் காலை
முதல் மாலை வரை மிக சிறப்பான முறையில் நடந்தேறியது..
கோவை மாவட்டத்தின் மூத்த உலமாக்களின் முன்னிலையில்
துஆவுடன் இந்நிகழ்வு துவங்கியது..
தமிழக அரசு தற்போது கோவை மாவட்டத்தின் புதிய அரசு காழியாக
நியமனம் செய்த அப்துர் ரஹீம் பாகவி ஹஸ்ரத் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்..
சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பு மாநில நிர்வாகப் பெருமக்கள்
பல மாவட்ட நிர்வாகிகள்
செயற்குழு உறுப்பினர்கள் என ஏராளமான நபர்கள் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்..
ஆறுமாத கால செயல்பாடுகள் குறித்து
ஆராயப்பட்டு,இனி அடுத்து வரும் நாட்களில் செய்ய வேண்டிய செயல் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது..
இறுதியில் மாநில தலைவர் அல்ஹாபிழ் மெளலானா மெளலவி முஹம்மது அன்வரி ஹஸ்ரத் அவர்களின் நஸீஹத்துடன் நிகழ்வு நிறைவுற்றது..
வல்லோன் அல்லாஹ்
நம் நற்பணிகளை அங்கீகரித்து
மகத்தான நற்கூலியை வழங்கியருள்வானாக..
ஆமீன் யா றப்பல் ஆலமீன்..