Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#அரஃபா_தினத்தின்_மகத்துவம்...

✍️.மவ்லவி.பீர்_ஹிஸ்னி..
அட்மின்.பீர் ஹிஸ்னி மீடியா.

இமாம் நவவி (றஹ்) கூறுகிறார்கள்...

ஒரு ஆண்டில் பிரார்த்தனை
செய்ய மிகவும்
சிறந்த நாள்அரஃபா தினமாகும்.

மனிதர்களே! ஆகவே அந்த நாளில் உங்களது மற்ற எல்லா காரியங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, குர்ஆன் பாராயணம் மற்றும் பல்வேறு திக்ருகளிலும்,பிரார்த்தனைகளிலும் மூழ்கிவிடுங்கள்.

உங்களது பிரார்த்தனையில் பெற்றோர், குடும்பத்தினர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், உங்களுக்கு உதவி புரிந்தோர் மற்றும் உலக முஸ்லிம்களை மறந்துவிடாதீர்கள்.

மேற்சொன்ன அனைத்து விஷயங்களும் தவறிவிடாமல் இருக்க சிறப்பு கவனம் செலுத்துங்கள்.

ஏனென்றால் இவற்றை நீங்கள் இழந்து விட்டால் திரும்ப வராத நாட்களாகும்.

(அத்கார்.333)

தகவல்:M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி

குறிப்பு:📓📒💌..

உலகின் பல பாகங்கலிருந்தும் ஹஜ் கடமையை செய்ய மக்காவுக்கு வருகை தரக்கூடிய அனைத்து முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கக் கூடிய ஒரு ஒப்பற்ற தினம்தான் ‘அரபா தினம்’. அன்றைய தினத்தில் ‘அரபா திடலில்’ அனைவரும் ஒன்று திரண்டு, நிறம், மொழி, குலம், நாடு, பணம், பதவி, சாதி, அமைப்பு அனைத்தையும் துறந்து, வேற்றுமையை குழிதோண்டி புதைத்து, தீண்டாமையை வேரோடு சாய்த்து உலக ஒற்றுமையை நிலைநாட்டி வைக்கிறார்கள்....

உலக ஒற்றுமையை வலியுறுத்தும் உலக மகாநாடு அரபா தினம் ஆகும். அரபாவில் உலக அமைதிக்காகவும், உலக நன்மைக்காகவும், தாய் நாட்டின் வளர்ச்சிக்காகவும், சமய நல்லிணக்கத்திற்காகவும், சமூக ஒற்றுமைக்காகவும், மனித வளத்திற்காகவும், பசியிலிருந்து விடுதலை பெறவும், பயத்திலிருந்து விடுபடவும், நோயிலிருந்து நிவாரணம் பெறவும், கடனிலிருந்து நிம்மதி பெறவும், மனிதவளம் மேம்படவும், மன அமைதி பெறவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.